எலான் மஸ்க் பொறுப்பில் இருக்கும் பிரபல சமூக ஊடக செயலியான ட்விட்டருக்கு போட்டியாக நேற்று மெட்டா நிறுவனம் திரெட்ஸ் என்கிற செயலியை அறிமுகப்படுத்தியது.
ஒரு நாள் முடிவடைவதற்குள்ளாகவே 3 கோடிக்கும் மேல் பயனர்களை பெற்றது திரெட்ஸ் செயலி.
இந்த திரெட்ஸ் செயலியில் லாகின் செய்வதும் எளிதே. மெட்டாவின் மற்றொரு செயலியான இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு கணக்கு இருந்தால், அதன் தரவுகளை வைத்து இதில் கணக்கு உருவாக்கிவிடலாம். அதிலுள்ள பின் தொடர்பவர்களே இங்கும் இருப்பர்.
உங்கள் கணக்கினை பிரைவேட் ஆகவோ அல்லது பப்ளிக் ஆகவோ வைத்துக்கொள்ளலாம். இந்த செயலியில் உள்ள ஃபீச்சர்கள் பலவும் ட்விட்டரை ஒத்ததாகவே இருக்கிறது
ட்விட்டர் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் சொந்தமாக்கினார். அபோதிருந்தே ஏகபட்ட மாற்றங்கள் தலை சுற்றும் அளவு கண்டிஷன்ஸை இவர் அடுக்கிக்கொண்டிருந்தார்.
இதனால் திரெட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் மளமளவென பயனர்கள் குவியத் தொடங்கினர்.
ஏற்கனவே எலான் மஸ்கை சரமாரியாக கலாய்த்து கொண்டிருந்த இணையவாசிகள், திரெட்ஸையும் ட்விட்டரையும் ஒப்பிட்டு மீம்களை பகிர்ந்து வருகின்றனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust