இப்படியெல்லாம் கூட நடக்குமா? நடந்திருக்கிறதே! வடக்கு ஆப்ரிக்காவில் இருக்கும் சூடான் நாட்டின் கார்ட்டூம் நகரிலிருந்த எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு ஒரு விமானம் சென்றது. அப்போது விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகள் தூங்கி விட்டனர். இதனால் அவர்களது விமானம் தரையிறங்கத் தவறி விட்டது.
இந்த சம்பவம் கடந்த திங்களன்று நடந்ததாக ஏவியேஷன் ஹெரால்டு பத்திரிகை தெரிவித்துள்ளது. அடிஸ் அபாபாவில் இருக்கும் விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் இந்த விமானத்தை பல முறை அணுகி எச்சரித்தது. ஆனால் விமானிகள் இருவரும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்ததால் அவர்கள் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளவில்லை.
இந்த போயிங் 737 விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தன்னியக்க முறையில் இயங்க விட்டுவிட்டு விமானிகள் இருவரும் ஹாயாக தூங்கி விட்டார்கள். ஆட்டோ பைலட் இயக்கத்தின்படி விமானம் குறிப்பிட்ட தூரத்தில், திசையில் தானே பறந்து கொண்டிருக்கும். அப்போது விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
விமான ஓடுபாதைக்கு மேலே உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ஆட்டோ பைலட் முறை தானே நின்று அலாரத்தை அடித்தது. அப்போதுதான் விமானிகள் இருவரும் தூக்கத்திலிருந்து விழித்தனர். பின்னர் அவர்கள் மீண்டும் ஒரு சுற்று வந்து படிப்படியாக உயரத்தை குறைத்து 25 நிமிடங்கள் கழித்துத் தரையிறங்கினர். இதனால் இந்த விமானத்தின் அடுத்த புறப்பாடு 2.30 மணி நேரம் தாமதமாக நடந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த விமானம் விபத்தில் ஏதும் சிக்காமல் தப்பியதால் யாருக்கும் பாதிப்பில்லை. அடிஸ் அபாபா விமான நிலைய ஓடுபாதைக்கு மேலே விமானம் பறக்கும் படத்தை விமான கண்காணிப்பு அமைப்பான ஏடிஎஸ் வெளியிட்டது
விமான ஆய்வாளரான அலெக்ஸ் மச்செரஸ் இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார். விமான ஓட்டிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த மே மாதத்திலும் நடந்திருக்கிறது. அப்போது நியூயார்க்கிலிருந்து ரோம் செல்லும் விமானம் ஒன்று 38,000 அடி உயரத்தில் பறந்த போது இரண்டு விமானிகள் இதே போன்று தூங்கிய சம்பவம் பதிவாகியுள்ளது. ஐடிஏ ஏர்வேஸுக்கு சொந்தமான இந்த ஏர்பஸ் 330 விமானம் பிரான்ஸ் மேல் பறக்கும் போது இந்த தூக்க சம்பவம் நடந்திருக்கிறது.
லாரி ஓட்டுநர்கள் வேலைச் சுமையால் நெடுஞ்சாலைகளில் அதிகாலையில் தூங்கி சில விபத்துகள் நடந்துள்ளதைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் 37,000 அடி உயரத்தில் கூட விமான ஓட்டுநர்கள் லாரிகளில் இல்லாத ஆட்டோ பைலட் வசதி இருப்பதால் போட்டு விட்டு தூங்க முடிகிறது.
இனி விமானத்தில் பறக்கும் பைலட்டுகளை தூங்காமல் விழிப்பு நிலையில் வைத்திருக்க ஏதாவது வழி செய்ய வேண்டும் போல.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust