நாயை பார்த்துக்கொள்ள 1 கோடி சம்பளம் வழங்கும் இங்கிலாந்து குடும்பம் - கண்டிஷன்ஸ் என்னென்ன?

இதுவரை இந்த பணியில் சேர 400 விண்ணப்பங்கள் வந்துள்ளனவாம். அந்த பணியில் சேரப்போவது யார் என்று இனி தான் தெரியும். ஒரு கோடி சம்பளம் எல்லாம் சரி தான். அதுக்குன்னு இவ்வளவு கண்டிஷன்ஸ் ஆ?
நாயை பார்த்துக்கொள்ள 1 கோடி சம்பளம் வழங்கும் இங்கிலாந்து குடும்பம் - கண்டிஷன்ஸ் என்னென்ன?
நாயை பார்த்துக்கொள்ள 1 கோடி சம்பளம் வழங்கும் இங்கிலாந்து குடும்பம் - கண்டிஷன்ஸ் என்னென்ன?Canva
Published on

தற்போதெல்லாம் மனிதர்களை விட செல்ல பிராணிகளின் மீதான அன்பு அதிகரித்துவிட்டது.

குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே மாறிவிடுகிறது இந்த பிராணிகள். இதனால், அவர்களை அளவுக்கடந்து அன்பு செய்கிறோம். இதற்காக யோசிக்காமல் கூட செலவு செய்கிறோம்.

இங்கும் இங்கிலாந்தை சேர்ந்த குடும்பம் ஒன்று தங்களின் நாய்களை கவனித்துக்கொள்ள ஆள் தேடி வருகின்றனர். அந்த பணியில் சேருபவருக்கு 1 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கவும் தயாராக உள்ளனர்.

கெனிங்ஸ்டனை சேர்ந்த குடும்பத்தினர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில், ஒரு முழு நேர டாக் நேனி (Dog Nanny) அதாவது நாய் பராமரிப்பாளர் பணி.

இந்த பணியில் சேருவோருக்கான தகுதிகளை குறிப்பிட்டிருந்தனர். அந்த விளம்பரமானது escapethecity என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

அதில், “எங்கள் வாடிக்கையாளர் ஒரு தனித்துவமான அதே நேரத்தில் மிகுந்த அனுபவமிக்க Dog Nannyயை தேடுகின்றனர். அவர்களின் இரண்டு செல்ல நாய்களுக்கும் முதல் தர கவனிப்பு வழங்கக்கூடிய நபராக, அவர்களது பணியில் சிறந்துவிளங்கும் ஒரு நபரை தேடி வருகின்றனர்.

நாய்களின் பாதுகாப்பு, சந்தோஷம் மற்றும் அவற்றின் நலனை பேணிக்காக்கும் நபராக அவர் இருக்கவேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

நாயை பார்த்துக்கொள்ள 1 கோடி சம்பளம் வழங்கும் இங்கிலாந்து குடும்பம் - கண்டிஷன்ஸ் என்னென்ன?
பழைய உரிமையாளரை தேடி 64 கிலோ மீட்டர் நடந்தே சென்ற நாய் - எங்கே?

இந்த Dog Nannyக்கு மற்ற சில பொறுப்புகளும் உள்ளன. நாய்களை வெளியில் அழைத்துச் செல்வது, தகுந்த நேரத்தில் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச்செல்வது போன்ற பணிகளையும் தவறாது செய்யவேண்டும்.

நாயின் தேவைக்கு ஏற்ப, அது விடுமுறை நாள் என்றாலும், பணி நேரம் இல்லை என்றாலும் நிச்சயம் வேலை செய்யவேண்டும். அந்த Dog Nannyக்கு கார் ஓட்டுநர் உரிமம் இருக்கவேண்டும். எவ்வளவு பெரிய அல்லது சிறிய நாயாக இருந்தாலும் அதனை பார்த்துக்கொள்ளும் திறன் அவருக்கு இருக்கவேண்டும்

இதுவரை இந்த பணியில் சேர 400 விண்ணப்பங்கள் வந்துள்ளனவாம். அந்த பணியில் சேரப்போவது யார் என்று இனி தான் தெரியும்.

ஒரு கோடி சம்பளம் எல்லாம் சரி தான். அதுக்குன்னு இவ்வளவு கண்டிஷன்ஸ் ஆ?

நாயை பார்த்துக்கொள்ள 1 கோடி சம்பளம் வழங்கும் இங்கிலாந்து குடும்பம் - கண்டிஷன்ஸ் என்னென்ன?
ஆண்டுக்கு 8 கோடி ரூபாய் சம்பாதிக்கும் 'பணக்கார நாய்’ - எப்படி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com