உக்ரைன் போர் பதட்டம்: பேய் நகரங்களான பகுதிகள் - என்ன நடக்கிறது?

ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த டொனெட்ஸ்க் நகரின் புறநகர்ப் பகுதியானது, ஒரு பேய் நகரம் போல காட்சியளிக்கிறது. பல குடியிருப்பாளர்கள் இங்கே வாழ அஞ்சுகின்றனர்
உக்ரைன் போர் பதட்டம்: பேய் நகரங்களான பகுதிகள் - என்ன நடக்கிறது?

உக்ரைன் போர் பதட்டம்: பேய் நகரங்களான பகுதிகள் - என்ன நடக்கிறது?

NewsSense

Published on

போர் என்றால் தொலைக்காட்சியில் தெரியும் துப்பாக்கிச் சூடும், குண்டு முழங்கும் பீரங்கிகளும், சீறிப்பாயும் ஏவுகணைகளும், குண்டு பொழியும் விமானங்களும் என அதிரடிக் காட்சிகளாய் பார்த்திருப்போம். உண்மை அதுவல்ல. போர் நடக்கும் எல்லைப்புற கிராமங்கள், நகரங்களில் அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வலி மிகுந்த வாழ்க்கை. சொந்த மண்ணை விட்டு வெளியேறும் அகதி வாழ்க்கை. உக்ரைன் - ரசியாவிற்கு இடையே ஏற்பட்டிருக்கும் பதட்டமும், இதன் பொருட்டு முன்பு நடந்த போரும் அத்தகைய சோகத்தை உருவாக்கியிருக்கிறது. அதைப் பற்றி விவரிக்கிறது இந்த வாழ்க்கை கதை.

ஏழு வயது லிசா பாடுகிறாள். அந்தப் பாடலின் எதிரொலி மெரிங்கா படைப்பாற்றல் மையத்தின் கட்டிடத்தில் இருந்து கேட்கிறது.

உள்ளே, குழந்தைகளின் ஓவியங்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் பிரகாசமான வண்ணங்கள், போரில் சோர்வடைந்த நகரத்தின் அப்பட்டமான தெருக்களுக்கு மாறாக முரண்பட்ட விதத்தில் வரவேற்றன.

மெரிங்கா பகுதி தற்போது உக்ரைனின் முன்வரிசை பகுதியில் அமைந்திருக்கிறது. 2014 இல் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்ட பிறகு டொனெட்ஸ்க் நகரத்திலிருந்து இந்த படைப்பாற்றல் மையம் பிரிக்கப்பட்டது.

பாசி மணிகளை கோர்த்தல், எம்பிராய்டரி பின்னுதல் மற்றும் பாடுதல் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கும் இந்த மையம், போரில் வாழும் குழந்தைகளுக்கு தப்பி வாழும் வாய்ப்பை வழங்கியுள்ளது என்று அதன் இயக்குனர் அலினா காஸ்ஸே கூறுகிறார்.

"அவர்களின் கனவுகளை நிறைவேற்ற நாங்கள் அவர்களுக்கு உதவ நினைக்கிறோம். அவர்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க கைகொடுக்கிறோம். புத்தாக்கம் நிறைந்த இந்த குழந்தைகள் போர் பயங்கரங்களிலிருந்து விலகி வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ள உதவுகிறோம்" என்கிறார் காஸ்லே.

Pexels 

போரால் நகரம் அழிக்கப்பட்டது

ஆனால் சண்டை தொட்டு விடும் தூரத்தில்தான் உள்ளது. இந்த மையம் 2014 இல் ஷெல் குண்டு தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது இதை கொஞ்ச காலம் மூடினோம் என்கிறார் காஸ்லே.

அப்போது எங்கள் ஆசிரியர்களில் சிலர் அடித்தளத்தில் பதுங்கினர். மற்றவர்கள் பயந்து கொண்டு வெளியேறி விட்டனர். இந்நகரத்தில் 10,000 பேர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தொழிற்சாலைகளிலும், கோதுமை மையங்களிலும் பணிபுரிந்தனர். தற்போது நாங்கள் இந்த உள்கட்டமைப்பை முற்றிலும் இழந்து விட்டோம். தற்போது வேலை எதுவும் இல்லை. செய்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் 4000 மக்கள் இங்கே வாழ்கின்றனர்.

ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் எல்லையில் இருப்பதால் மேற்கு நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் பதட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் எல்லையில் வாழும் சமூகங்களுக்கு இது மிகப்பெரும் கவலையாக உள்ளது.

<div class="paragraphs"><p>Ukraine</p></div>

Ukraine

Pexels

அதிக இடப்பெயர்வு சாத்தியம்

நார்வே அகதிகள் கவுன்சிலின் கூற்றுப்படி, உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய புதிய முரண்பாடு மக்களின் மிகப்பெரிய இடப்பெயர்வை கட்டாயமாக்கியிருக்கிறது. இருநாடுகளின் எல்லைகளில் வாழும் இருபது இலட்சம் மக்கள் இப்போது வெளியேறும் சூழல் உள்ளது.

பல ஆண்டுகளாக மெரியங்காவைச் சுற்றி நடக்கும் சண்டையால் வீடுகள் அழிக்கப்பட்டன அல்லது கைவிடப்பட்டன. மூடப்பட்ட கடைகளால் தெருக்கள் காலியாக உள்ளது.

ஒரு காலத்தில் செழிப்பாக இருந்த டொனெட்ஸ்க் நகரின் புறநகர்ப் பகுதியானது, ஒரு பேய் நகரம் போல காட்சியளிக்கிறது. பல குடியிருப்பாளர்கள் இங்கே வாழ அஞ்சுகின்றனர்.

Pexels

குடியிருப்பாளர்கள் வெளியேறுகிறார்கள்

குடியிருப்பாளர் எலெனா இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்திற்குச் செல்கிறார்.

"வேலை செய்ய எதுவும் இல்லை," என்று ஷெல் தாக்குதலால், இடிந்து விழுந்த கூரையுடன் கைவிடப்பட்ட தனது வீட்டின் முன்பு எலெனா கூறுகிறார். "முன்பு இருந்ததற்கும் இப்போது உள்ளதற்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை இழந்து விட்டனர். சிலர் அவற்றில் சிலவற்றை சரிசெய்ய முடிந்தது, ஆனால் அது இன்னும் கடினமாக உள்ளது."

உணவு மற்றும் நிலக்கரியின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்து வாழ்க்கையை மிகவும் கடினமாக்குகிறது என்று அவர் கூறுகிறார்.

"நான் இங்கிருந்து ஓடப் போகிறேன்," என்று அவர் சொல்கிறார். இனி என்னால் தாங்க முடியாது, என் உடல்நலம் முற்றிலும் வலுவிழந்து விட்டது." என்றும் அவர் கூறுகிறார்.

அதிகாரப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் எதுவும் இங்கே இல்லை. ஆனால் மக்கள்தொகையின் வீழ்ச்சி குறிப்பிடத்தக்கது என்று படைப்பாற்றல் மையத்தின் காஸ்ஸே கூறுகிறார்.

பதட்டங்களைத் தணிப்பதற்கான இராஜதந்திர விவாதங்கள் உக்ரைன் தலைநகர் கெய்வில் தொடர்கிறது. சிறிய முன்னேற்றம் இருப்பதாகத் தோன்றினாலும், எல்லைப் பகுதியில் வசிப்பவர்கள் அதிக விலை கொடுக்கிறார்கள். எந்நேரமும் அச்சத்திலும் திகிலிலும் அவர்கள் வாழ்கிறார்கள்.

உக்ரைனில் போர் வந்தால் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முற்றிலும் அழியும். இப்படித்தான் எல்லைப்புற வாழ்க்கை இருக்கிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com