‘Go F*** Yourself’ சொன்ன உக்ரைன் ராணுவ வீரர்கள், கொன்ற ரசியா படை

சரணடையுமாறு ரசிய போர்க்கப்பல் ஆணையிட்டது. அதை மறுத்த உக்ரைன் வீரர்கள் ரசியாவால் கொல்லப்பட்டார்கள்.
Ukraine Soldiers Died

Ukraine Soldiers Died

Twitter

ரசிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு அந்த வீரர்கள் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள்: Go fuck yourself. அவர்களை உக்ரைனின் தேசிய ஹீரோக்கள் என்று உக்ரைன் அதிபர் கௌரவப்படுத்தியிருக்கிறார்.

சரணடைய மறுத்த போது அவர்கள் பேசிய ஒலிப்பதிவை உக்ரைனின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. அதில் உக்ரைனின் வீரர்களும், ரசியாவின் கப்பல் தளபதியும் பேசிக் கொண்ட உரையாடல் தெளிவாக இருக்கிறது.

<div class="paragraphs"><p>Russian Battle Ship</p></div>

Russian Battle Ship

Facebook

“இது ரசியாவின் இராணுவ போர்க்கப்பல். உங்கள் ஆயுதங்களை துறப்பதன் மூலம் இரத்தம் சிந்தாமலும் தேவையற்ற இழப்புகளையும் தவிர்க்கலாம். இல்லையேல் உங்கள் மீது குண்டு வீசப்படும்" என்கிறார் ரசிய போர்க்கப்பல் அதிகாரி.

இதற்கு உக்ரைன் இராணுவீரர் குழு,” ரசிய போர்க்கப்பலே go fuck yourself.” என்று தைரியமாக பதிலடி கொடுத்தது.

சிமினை அல்லது பாம்புத் தீவு என்றழைக்கப்படும் இந்தத் தீவு ஒரு சதுர மைலின் பத்தில் ஒரு பங்கு அளவே உள்ள மிகச்சிறிய பகுதியாகும். இது உக்ரைனின் எல்லையில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ளது.

ரசியாவின் விமானத் தாக்குதலில் மேற்கண்ட13 உக்ரைன் எல்லை பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் மற்றும் ரசிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீரர்களை உக்ரைனின் நாயகர்கள் என்று அதிபர் செலன்ஸ்கி அறிவித்திருக்கிறார்.

<div class="paragraphs"><p>Ukraine Soldiers Died</p></div>
உக்ரைன் ரசியா போர் : கொத்து கொத்தாக கொல்லப்படும் மக்கள் - தற்போதைய நிலவரம்

“எங்களது சிமினைய் தீவை பாதுகாப்பதற்காக அவர்கள் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். இறுதி வரை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. அவர்களது நினைவு உக்ரைன் இருக்கும் வரை போற்றப்படும்" என்றார் உக்ரைன் அதிபர்.

இதுவரை உக்ரைனில் வியாழக்கிழமை இரவு வரை 137 பேர்கள் கொல்லப்பட்டதாகவும், 316 பேர்கள் காயமுற்றிருப்பதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரசியாவுடன் ராஜதந்திர உறவை ஏற்படுத்தும் முயற்சியாக இதே தீவில் பத்திரிகையாளர் சந்திப்பை அதிபர் செலன்ஸ்கி நடத்தினார். இந்தத் தீவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டதற்கு,”இந்தத் தீவு மற்ற பகுதிகளைப் போலவே எங்களுடைய நிலம். உக்ரேனிய நாடு. இதை நாங்கள் முழு பலத்துடன் பாதுகாப்போம்" என்று பதிலளித்தார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com