எதையும் கொல்லும் பெருங்கடலின் மரணக் குளம்: கடலுக்கு அடியில் மற்றொரு உலகம்

உப்புநீர் குளங்கள் பொதுவாகக் கடலின் அடிப்பகுதியில் காணப்படுகின்றன. அங்கு உயிர்கள் செழித்து வாழவில்லை. இருப்பினும், இந்த குளங்கள் அவற்றின் கொலைகாரப் போக்குகள் என்னவாக இருந்தாலும். 'வாழ்க்கையின் வளமான சோலை'யை வழங்குகின்றன.
ocean
ocean Twitter

விஞ்ஞானிகள் ஒரு மிகப்பெரும் கொடிய குளத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அது உள்ளே நுழையும் எதையும் உடனடியாக கொல்லும் என்பது திகைக்க வைக்கிறது.

மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாம் புர்கிஸ், குளத்தைக் கண்டுபிடித்த குழுவின் உறுப்பினராவார். இந்தக் குளம் ஆக்ஸிஜன் இல்லாதது மற்றும் உயிருக்கு ஆபத்தான உப்புத் தன்மையைக் கொண்டுள்ளது என்று அவர் விளக்கினார். எனவே உப்பு நீருக்குள் செல்லும் எந்த விலங்கும் உடனடியாக அதிர்ச்சியடைய வைத்துக் கொல்லப்படும்.

ஆழமான கடலில் இருக்கும் இந்த குளத்தின் மரணப் பொறிகள், விலங்குகளை உயிருடன் ஊறுகாய்களைப் போல மாற்றுகின்றன. ஆராய்ச்சியாளர்கள் ஒரு முறை எட்டு ஆண்டுகளாக இறந்து கிடந்த ஒரு நண்டைக் கண்டு பிடித்தனர். ஆனால் அதன் மென்மையான திசு அப்படியே இருந்தது.

ஆக்ஸிஜனின் பற்றாக்குறை மற்றும் உப்புக் கரைசலின் மரண அளவு இவற்றோடு கூடவே இந்த உப்புக் குளங்களில் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற நச்சு இரசாயனங்கள் இருக்கலாம். அவை இன்னும் ஆபத்தானவை. இந்த ஆழ்கடல் குளத்தின் இறப்பு விகிதம் 100% என்ற அளவுக்கு பயங்கரமாக இருக்கிறது. ஆனாலும் குளத்தில் சில ஒலி அலைகள் தவழ்கின்றன. இதனால் ஆசைப்பட்டு வரும் கடல் வாழ் உயிரினங்கள் துரதிர்ஷ்டவசமாக உணவுச் சங்கிலியின் பொருட்டு சிக்கிக் கொள்கின்றன.

லைவ் சயின்ஸ் இணையத்தளத்திடம் பேசிய பர்கிஸ், இந்த கண்டுபிடிப்பு நமது கிரகத்தில் முதலில் பெருங்கடல்கள் எவ்வாறு உருவாகின என்பதை விஞ்ஞானிகளுக்கு விளக்க உதவும் என்றார்.

"தீவிர சூழலில் உயிர்வாழும் நுண்ணுயிரிகள் பற்றிய எங்கள் கண்டுபிடிப்பு பூமியில் வாழ்வின் வரம்புகளைக் கண்டறிய உதவும். மேலும் நமது சூரிய மண்டலத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள வேறு இடங்களில் உள்ள ஜீவராசிகளைத் தேடுவதற்குப் பயன்படுத்தலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

ocean
ALH Mark 3 : அரபிக் கடல் போர் கப்பலில் தரை இறக்கப்பட்ட ஹெலிகாப்டர் - இதன் சிறப்புகள் என்ன?

"பூமியில் வாழ்வின் வரம்புகளை நாம் புரிந்து கொள்ளும் வரை, வேற்றுக் கிரகங்களில் எந்த உயிரினமாவது இருக்க முடியுமா என்பதை தீர்மானிக்க கடினமாக இருக்கும்," என்றார் அவர்.

உப்புநீர் குளங்கள் பொதுவாகக் கடலின் அடிப்பகுதியில் காணப்படுகின்றன. அங்கு உயிர்கள் செழித்து வாழவில்லை. இருப்பினும், இந்த குளங்கள் அவற்றின் கொலைகாரப் போக்குகள் என்னவாக இருந்தாலும். 'வாழ்க்கையின் வளமான சோலை'யை வழங்குகின்றன.

"இவ்வளவு பெரிய ஆழத்தில், பொதுவாகக் கடல் அடிவாரத்தில் அதிக உயிர்கள் இல்லை" என்று புர்கிஸ் விளக்கினார்.

"இருப்பினும், உப்புநீர் குளங்கள் வாழ்வின் வளமான சோலையாகும். நுண்ணுயிரிகளின் அடர்த்தியான கம்பளங்கள் பலதரப்பட்ட உயிரினங்களை ஆதரிக்கின்றன," என்று அவர் விளக்குகிறார்.

ocean
அட்லாண்டிஸ் : மர்ம நகரம் செல்லும் பசிபிக் கடல் பாதை? - ஓர் ஆச்சர்ய பகிர்வு

சில உயிரினங்கள் உப்புக் குளங்களை வாழ்க்கைக்குப் பயன்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக, மஸ்ஸல்கள் பெரும்பாலும் குளங்களின் விளிம்புகளை வரிசைப்படுத்துகின்றன. ஏனெனில் அவை உப்புக் குளங்களில் காணப்படும் மீத்தேனைப் பயன்படுத்தி அதை கார்பன் சர்க்கரையாக மாற்றும்.

மஸ்ஸல் என்பது உப்பு நீர் மற்றும் நன்னீர் வாழ்விடங்களிலிருந்து பிவால்வ் மொல்லஸ்க்கள் எனப்படும் நுண்ணுயிர்களின் பல குடும்பங்களுக்குப் பயன்படுத்தப்படும் பொதுவான பெயர். இந்த குழுக்களுக்கு பொதுவாக ஒரு கூடு உள்ளது.

ரிமோட் மூலம் இயக்கப்படும் நீருக்கடியில் செல்லும் வாகனம் (ROV) மூலம் 1,770மீ ஆழத்தில் அடையாளம் காணப்பட்ட உப்புக் குளம் பர்கிஸ் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குழு அந்தக் கருவி மூலம் 10 மணி நேர பயணத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் அதைக் கண்டுபிடித்தது.

விண்வெளியில் உள்ள அறியப்படாத அதிசயங்கள் போல ஆழ்கடலிலும் பெரும் அதிசயங்கள் இருக்கின்றன. நமது பூமி எப்படி தோன்றியது, அதில் உயிரினங்கள் எப்படித் தழைத்தன என்பதின் துல்லியமான சித்திரத்தை இத்தகைய ஆழ்கடல் விளக்கங்கள் அறியத் தரும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com