இந்தோனேசியா : 504 புத்தர்கள், அழிந்து வரும் உயிரிகள்- தீவுநாட்டின் 8 விசித்திர உண்மைகள்!

27 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தோனேசியாவில் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி என அடிக்கடி பல இயற்கை அழிவுகள் ஏற்படுகிறது.
Four small earthquakes occur daily in Indonesia
Four small earthquakes occur daily in Indonesia Twitter
Published on

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. புவியியல் ஆய்வு தரவுகளின்படி, 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகரத்தை தாக்கியது.

இந்த நிலநடுக்கத்தை 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைநகர் ஜகார்த்தா வரை உணர முடிந்தது.

நில அதிர்வால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுமார் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைத்துள்ளனர். 46 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்திற்குப் பிறகு எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பது குறித்த தகவல்கள் சரியாக கிடைக்கவில்லை.

27.64 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தோனேசியாவில் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி என அடிக்கடி பல இயற்கை அழிவுகள் ஏற்படுகின்றன.

'ரிங் ஆஃப் ஃபயர்' என்று அழைக்கப்படும் பசிபிக் படுகையில் அதிகமான எரிமலைகள் தொடர்ந்து காணப்படுவது தான் மிகப்பெரிய பூகம்பங்கள் நிகழ காரணம்.

சிலியில் இருந்து ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியா வரை இருக்கும் பசிபிக் வளைவு அதிக பூகம்பங்கள் நடக்கும் இடமாக உள்ளது. அதனால்தான் இந்தோனேசியாவில் தினமும் நான்கு சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

ஆனால் இது 14,700 தீவுகளை உள்ளடக்கிய பெரிய தீவுக்கூட்டம் என்பது தான் அசாதாரண உண்மை.

இது தவிர இந்தோனேசியாவில் உலகில் அதிக எண்ணிக்கையிலான எரிமலைகள், 700 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள், என பல விஷயங்கள் காணப்படுகிறது.

இந்தோனேசியா
இந்தோனேசியாTwitter

உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம்

இந்தோனேசியா உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் கொண்ட நாடு உள்ளது. இது கிழக்கிலிருந்து மேற்காக 5,120 கிலோமீட்டர்கள் மற்றும் வடக்கிலிருந்து தெற்காக 1,760 கிலோமீட்டர்கள் வரை நீண்டுள்ளது.

உலகில் அதிக எண்ணிக்கையிலான எரிமலைகள்

இந்தோனேசியா உலகில் அதிக எண்ணிக்கையிலான எரிமலைகளைக் கொண்டுள்ளது. இந்த எரிமலைகள் சுமத்ரா, ஜாவா, பாலி, நுசா தெங்கரா மற்றும் வடகிழக்கு சுலவேசியிலிருந்து மலுகுவின் பண்டா தீவுகள் நீண்டிருக்கிறது.

Four small earthquakes occur daily in Indonesia
இந்தோனேசியா தன் தலை நகரை மாற்றுவது ஏன்? புதிய தலை நகர் எது? தலை நகரை மாற்ற காரணங்கள் என்ன?

உலகின் மிகப் பெரிய பல்லி

கொமோடோ டிராகன்கள் என்றும் அழைக்கப்படும் பெரிய பல்லிகள் இந்தோனேசியாவின் கொமோடோ, ரின்கா, புளோரஸ் மற்றும் கிலி மோட்டாங் தீவுகளீல் காணப்படுகிறது.

அவை 3.1 மீ நீளம் வரை வளரக்கூடியவை. கொமோடோ டிராகனைப் பாதுகாக்க 1980 ஆம் ஆண்டு கொமோடோ தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டது.

வித்தியாசமான பூ

பிணப் பூ என்று அழைக்கப்படும் ராஃப்லீசியா அர்னால்டி, இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டுள்ளது.

இந்தோனேசியாவின் மூன்று தேசிய மலர்களில் ஒன்று தான் இந்த ராஃப்லீசியா அர்னால்டி. வெள்ளை மல்லிகை (ஜாஸ்மினம் சம்பாக்) மற்றும் மூன் ஆர்க்கிட் (ஃபாலெனோப்சிஸ் அமாபிலிஸ்) ஆகியவை மற்ற இரண்டு மலர்களாகும்.

பூக்கள் என்றாலே வாசம் தான் நினைவுக்கு வரும். ஆனால் உலகின் மிகப் பெரிய பூ துர்நாற்றம் வீசுவது முரண்!

700 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகள்

இந்தோனேசிய மக்கள் பல்வேறு மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைப் பேசுகிறார்கள். பப்புவா மாகாண மக்கள் மட்டுமே 270க்கும் மேற்பட்ட ஸ்லாங்களில் பேசுகிறார்கள்.

அழிந்து வரும் விலங்குகள்

கொமோடோ டிராகன் மட்டும் இந்தோனேசியாவில் பிரபலமானது அல்ல.

சுமத்ரா புலி , சுமத்ரான் காண்டாமிருகம், ஒராங்குட்டான்கள், அனோவா (உலகின் மிகச்சிறிய எருமை), கடல் ஆமைகள் மற்றும் டார்சியஸ் டார்சியர் போன்ற 100 க்கும் மேற்பட்ட அழிந்து வரும் விலங்குகள் வாழும் இடமாக இந்தோனேசியா திகழ்கிறது.

உலக பாரம்பரிய தலங்கள்

போரோபுதூர் கோவில் வளாகங்கள், பிரம்பனன் கோவில் , சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள், கொமோடோ தேசிய பூங்கா, லோரென்ட்சு தேசிய பூங்கா, உஜுங் குலோன் தேசிய பூங்கா உள்ளிட்ட 9 உலக பாரம்பரிய தலங்களை கொண்டுள்ளது இந்தோனேசியா.

உலகின் மிகப்பெரிய புத்த கோவில்

ஜாவாவில் அமைந்துள்ள போரோபுதூர் கோவில், உலகின் மிகப்பெரிய புத்த கோவிலாகும். 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் 504 புத்தர் சிலைகளைக் கொண்டுள்ளது.

Four small earthquakes occur daily in Indonesia
சுனாமி : ஜப்பான் முதல் இந்தோனேசியா வரை - உலகின் வரைபடத்தை மாற்றிய மோசமான 8 சுனாமிகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com