48 மணி நேரத்திற்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துக்கொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த பெய்டன் ஸ்டோவர் என்பவர் ஆண் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒமாஹாவைச் சேர்ந்த 23 வயதான பெய்டன் ஸ்டோவர் என்பவர் ஆசிரியராக பணி புரிந்து வந்துள்ளார். எப்போதும் சோர்வாகவே உணர்ந்த அவர் மருத்துவமனையை அணுகியுள்ளார்.
அப்போது பெய்டன் ஸ்டோவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதையடுத்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காரணம் கர்ப்பத்துக்கான எந்த அறிகுறிகளையும் அவருக்கு காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
உள்ளூர் செய்தி நிறுவனமான KETV இன் படி, அவர் தனது கால்களில் வீக்கத்திற்குப் பிறகு ஒரு மருத்துவரைச் சந்திக்க முடிவு செய்தார். ஆனால் அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
மருத்துவ அறிக்கைப்படி,
அவருக்கு ப்ரீக்ளாம்ப்சியா என்ற டிஸாடர் இருந்தாகவும், இதனால் கர்ப்ப கால அறிகுறி தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது.
ப்ரீக்ளாம்ப்சியா என்பது உயர் இரத்த அழுத்தத்தால் வகைப்படுத்தப்படும் ஒரு கர்ப்ப சிக்கல் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்பம் குறித்த அறிகுறிகள் தெரியாமல் இருந்திருக்கலாம் என்கின்றனர்.
கர்ப்பம் குறித்து தெரிவித்த 48 மணி நேரத்திலேயே உடனடியாக குழந்தை பெற்றெடுத்துக் கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெய்டனுக்கு அவசரகால அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வெறும் 1 கிலோ, 800 கிராம் எடை கொண்ட ஆண் குழந்தையை பெய்டன் ஸ்டோவர் பெற்றெடுத்துள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust