இலங்கை, ஒரு தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு நாடாகும். நான்கு பக்கமும் நீர் சூழ, மலைகளும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என பல இடங்களை கொண்டுள்ளது இலங்கைத் தீவு.
தீவு வாழ்க்கையை அனுபவிக்க நினைப்பவர்களுக்கு இலங்கை ஒரு சிறந்த இடமாக இருக்கும்.
அது மட்டுமில்லாமல் யானை பிரியர்களுக்கு இங்கு ஒரு சூப்பர் ஸ்பாட் உள்ளது.
தென் மாகாணத்தில் உடவளவை தேசியப் பூங்கா (Udawalawe National Park) உள்ளது. இது 1995 இல் இலங்கை வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தால் நிறுவப்பட்டது.
புல் நிலங்களாலும் சிறிய தேக்குக் காடுகளாலும் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பூங்காவில் 400க்கும் மேற்பட்ட ஆசிய யானைகள் இருக்கின்றன.
காட்டு யானைகளை பார்வையிட முடியும். அதிலும் குறிப்பாக elephant transit home என்ற இடமுள்ளது இங்கு பராமரிப்பு இல்லாமல் இருக்கும் யானைக்குட்டிகளுக்கு அடைகலம் கொடுத்து அவைகளுக்கு உணவும் அளிக்கப்படுகிறது.
இதனை ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு அரை மணி நேரம் கொடுக்கப்படுகிறது.
அடுத்து இலங்கையில் மிஸ் செய்யாமல் பார்க்கக்கூடிய இடமானது தியலும நீர்வீழ்ச்சி. இது இலங்கையின் இரண்டாவது உயரமான இந்நீர்வீழ்ச்சி என்றும் அறியப்படுகிறது.
இது கொழும்பு - கல்முனை பெருந்தெருவில் கொஸ்லந்தைக்கும் வெல்லவாயவுக்கும் இடையில் அமைந்துள்ளது. வேறு எந்த இடங்கள் எல்லாம் இலங்கையில் காணலாம். வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust