2022ன் இழிவான நபர்: ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆணுறுப்பு சிலை வைத்த மக்கள் - எங்கே?

இந்த சிலையினை நிறுவிய குழு கூறுகையில், சேதமாகும் புதின் சிலையின் மினியேச்சர் பதிப்புகள் ஏலத்தில் விற்கப்படும் என்றும் இதில் வரும் பணத்தை உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Vladimir Putin
Vladimir PutinTwitter

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு எதிராக இங்கிலாந்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு வித்தியாசமான சிலை வைத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா பல மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. சர்வதேச நாடுகள் போர் வேண்டாம் எனக் கூறி வந்தாலும் ரஷ்ய அதிபர் புதின் விடாபிடியாக உள்ளார்.

தற்போது இந்த போர் 10 வது மாதத்தை நெருங்கியுள்ளது. தற்போது வரை உக்ரைன் ரஷ்ய தரப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதினை அவமானப்படுத்தும் விதமாகவும் உக்ரைன் ரஷ்ய போரினை எதிர்க்கும் வகையிலும் இங்கிலாந்தில் சர்ச்சைக்குரிய வகையில் புதினுக்கு சிலை அமைத்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள பெல் எண்ட் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள புதின் சிலையின் தலை பகுதி ஆணுறுப்பு போன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலையின் அடி பாகத்தில் 'Bellend of the Year'என எழுதப்பட்டுள்ளது. இதற்கு இந்த ஆண்டின் இழிவான நபர் என்று குறிப்பிட்டுருக்கின்றனர்.

Vladimir Putin
ரஷ்யா : உலக கச்சா எண்ணெய் சந்தையை கட்டுப்படுத்த போகிறாரா புதின்? - அதிர வைக்கும் செய்தி

அதோடு சிலை அருகே இலவசமாக முட்டை வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மக்கள் அதனை புதின் சிலையின் மீது வீசலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்த சிலையினை நிறுவிய குழு கூறுகையில், சேதமாகும் புதின் சிலையின் மினியேச்சர் பதிப்புகள் ஏலத்தில் விற்கப்படும் என்றும் இதில் வரும் பணத்தை உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அதிபர் புதினின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vladimir Putin
புதின் - எலான் மஸ்க் ரகசிய பேச்சு வார்த்தை நடந்ததா? அமெரிக்க வல்லுநர் குற்றச்சாட்டு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com