மரணத்துக்கு பிறகு நம் சமூக வலைத்தள பக்கங்கள் என்னவாகும்?

இந்த வலைத்தளங்களில் இருக்கும் நண்பர்களுக்கு நிஜத்தில் என்ன நடந்தது எனத் தெரியாது. ஒருவர் இறந்த பிறகு அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் சொல்லி பேஸ்புக் நினைவுபடுத்தினால் எவ்வளவு மோசமான விஷயமாக இருக்கும்?
மரணத்துக்கு பிறகு நம் சமூக வலைத்தள பக்கங்கள் என்னவாகும்?
மரணத்துக்கு பிறகு நம் சமூக வலைத்தள பக்கங்கள் என்னவாகும்?Representative Pictrure
Published on

பொதுவாக ஒருவர் இறக்கும் போது அவரது சொத்துகள் மற்றும் உடமைகள் அனைத்தும் வாரிசுகளுக்கு அளிக்கப்படும். தனது சொத்துகள் சரியாக பகிரப்பட வேண்டும் என்பதற்காக உயில் எழுதி வைக்கும் பழக்கம் நமக்கு இருக்கிறது. 

ஒருவர் இறந்துவிட்டால் அவரது உடமைகளையும் புதைக்கும் பழக்கம் உலகில் சில கலாச்சாரங்களில் இருக்கிறது. நம் ஊரில் நெற்றியில் வைக்கும் ஒன்றை ரூபாயைக் கூட எடுத்துவிடுவோம். 

மற்றபடிக்கு இறப்பவரின் வாகனம் முதல் ஆடைகள் வரை அனைத்தையும் மீண்டும் உபயோகப்படுத்தத் தொடங்கிவிடுவோம். ஆனால் அவரது டிஜிட்டல் உடமைகளை என்ன செய்வது என்பதில் நமக்கு சந்தேகங்கள் இருக்கும்.

உதாரணமாக சமூக வலைத்தளங்களான ட்விட்டர், ஸ்னாப் சேட், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய செயலிகளில் இருக்கும் அக்கவுண்ட்கள் என்னவாகும். 

இந்த வலைத்தளங்களில் இருக்கும் நண்பர்களுக்கு நிஜத்தில் என்ன நடந்தது எனத் தெரியாது. ஒருவர் இறந்த பிறகு அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் சொல்லி பேஸ்புக் நினைவுபடுத்தினால் எவ்வளவு மோசமான விஷயமாக இருக்கும்?

ஒருவர் இறந்த பிறகு அவரது கணக்குகளை என்ன செய்ய வேண்டும் என்பதில் நிறுவனங்கள் முடிவெடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது என்பதைப் புரிந்துள்ளனர். 

பேஸ்புக்கில் இதுகுறித்து, “நீங்கள் உங்களது வாரிசு தொடர்பை குறிப்பிடலாம். நாம் இறந்த பிறகு அந்த அக்கவுண்டை வைத்திருப்பவர் அதனை கையாள முடியும். அல்லது நம் பேஸ்புக் பக்கத்தை முழுமையாக அழிக்கவும் செய்யலாம்.” நாம் முழுவதுமாக அழிப்பதை தேர்வு செய்யாமல் நாம் இறந்துவிட்டதாக பேஸ்புக் அறிந்துகொண்டால் நம்முடைய சுயவிவரப்பக்கம் மட்டும் அப்படியே நினைவுகூறப்படும் கணக்காக இருக்கும்.

அதென்ன நினைவுக்கணக்கு என்பது தானே உங்கள் கேள்வி?

ஒருவர் இறந்த பின்னர் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் நினைவுகளைப் பகிர்வதற்காக வைக்கப்படும் பக்கம் நினைவுப் பக்கம். இப்படி நினைவுகூறும் பக்கமாக மாற்றப்பட்ட கணக்கில் பெயருக்கு அருகில் Remembering என்ற சொல் இருக்கும். 

இந்த கணக்கின் தனியுரிமை அமைப்புகளைப் ( privacy settings ) பொருத்து நாம் அந்த அக்கவுண்டின் டைம்லைனில் நாம் செய்திகளைப் பகிர முடியும். ஒருவரின் முதன்மை கணக்கு நினைவுப் பக்கமாக மாற்றப்பட்டால் அவரது அனைத்து பக்கங்களும் நீக்கப்பட்டுவிடும்.

மரணத்துக்கு பிறகு நம் சமூக வலைத்தள பக்கங்கள் என்னவாகும்?
விலங்குகளுடனான பாலுறவு மரணத்திற்கு காரணமா? ரஷ்ய ராணி கேத்தரின் எப்படி இறந்தார்?

வாரிசு தொடர்பு அல்லது விருப்புரிமைத் தொடர்பு

உங்கள் பேஸ்புக் செயலியில் அக்கவுட் செட்டிங்ஸில் மெமொரியலிசேஷன் செட்டிங்ஸில் choose Legacy Contact என்ற ஆப்ஷன் இருப்பதைக் காணலாம். அதனைக் கொண்டு நாம் ஒரு விருப்புரிமைத் தொடர்பை சேர்த்துக்கொள்ளலாம்.

விருப்புரிமைத் தொடர்பில் இருப்பவர் சுயவிவரப்படம், கவர் படத்தை மாற்ற முடியும். நட்பழைப்புகளை ஏற்கமுடியும். 

மரணத்துக்கு பிறகு நம் சமூக வலைத்தள பக்கங்கள் என்னவாகும்?
தேச துரோகி முத்திரை, மரண தண்டனை: சூழ்ச்சியால் கொல்லபட்ட விஞ்ஞானியை ரஷ்யா கொண்டாடுவது ஏன்?

டெலிட் செய்வது பற்றி…

நீங்கள் இறந்துவிட்ட பிற உங்கள் அக்கவுண்ட் ழுவதுமாக டெலிட் செய்யப்பட வேண்டுமென்றாலும் செய்யலாம். இதன் படி ஒருவர் இறந்த விட்ட செய்தியை பேஸ்புக்கில் தெரிவித்தால் உங்களது படங்கள், பதிவுகள். கமண்ட்கள், கருத்துகள் அனைத்து உடனடியாகவும் நிரந்தரமாகவும் பேஸ்புக்கில் இருந்து டெலிட் செய்யப்படும்.

மரணத்துக்கு பிறகு நம் சமூக வலைத்தள பக்கங்கள் என்னவாகும்?
Facebook : பேஸ்புக் பயனர்கள் ஜாக்கிரதை! ஏமாற்று ஃபிஷிங் மோசடி உஷார்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com