சிங்கப்பூர் இந்தியர்களை கவர்ந்திழுப்பது ஏன்? தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு இந்தியாவிலிருந்து 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூருக்கு இந்தியர்கள் ஏன் அதிகமான பயணம் செய்கிறார்கள் என்று இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
What makes Singapore so attractive to Indians; 5 things to know
What makes Singapore so attractive to Indians; 5 things to know Canva

சமீபத்திய ஆண்டுகளில் சிங்கப்பூருக்கு இந்திய பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் முதல் வாய்ப்புகளைத் தேடும் வணிக வல்லுநர்கள் வரை சிங்கப்பூர் நோக்கி இந்தியப் பயணிகள் செல்கின்றனர்.

கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு இந்தியாவிலிருந்து 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது இந்தோனேசியா, சீனா, மலேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக தரவரிசைப்படுத்துகிறது.

சிங்கப்பூருக்கு இந்தியர்கள் ஏன் அதிகமான பயணம் செய்கிறார்கள் என்று இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

பயணிகளின் வசதி

சிங்கப்பூருக்கு இந்தியப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அதன் இணையற்ற அணுகல்.

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு முக்கிய இந்திய நகரங்களை இணைக்கும் நேரடி விமானங்கள் ஏராளமாக இருக்கின்றன.

மும்பை, டெல்லி, பெங்களூர் அல்லது சென்னை என எதுவாக இருந்தாலும் பயணிகள் தேர்வு செய்ய பல விமானத் தேர்வுகள் உள்ளன. இதனால் சிங்கப்பூர், விரைவான பயணத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. சாங்கி விமான நிலையம், சிங்கப்பூரின் மிகப்பெரிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்.

விசா நடைமுறைகள்

சிங்கப்பூரின் விசாக் கொள்கைகள் இந்தியப் பார்வையாளர்களைக் கவர்வதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.

இ-விசா வசதிகள் மற்றும் 96 மணிநேரத்திற்கு விசா இல்லாத போக்குவரத்து உள்ளிட்ட இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு தொந்தரவு இல்லாத விசா நடைமுறைகளை வழங்குகிறது.

இந்திய பயணிகள் சிங்கப்பூர் விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், இதன் விலை 2,700 ரூபாய். விசா செயலாக்க நேரம் 5-6 வேலை நாட்கள் மட்டுமே ஆகிறது. மேலும் விசா 30 நாட்கள் வரை வழங்கப்படும். 2 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.

சிங்கப்பூரின் இடங்கள்

சிங்கப்பூரில் இருக்கும் சுற்றுலா இடங்கள் மேலும் இந்தியப் பயணிகளை ஈர்க்கின்றன.

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு ஏற்ற இடமாகவும் இருக்கின்றன.

கலாச்சார உறவுகள்

சிங்கப்பூரின் வளமான கலாச்சாரக் காட்சி, பரபரப்பான ஷாப்பிங் இடங்கள் மற்றும் சுவையான உணவு ஆகியவை நகரத்தின் எண்ணற்ற அழகை ஆராய பயணிகளுக்கு தூண்டுதலாக இருக்கின்றன.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்கள் இருக்கும் பகுதியான லயன் சிட்டியை ஆராயும்போது இந்திய பயணிகள் நம் ஊரில் இருப்பதை போன்று உணர்கிறார்கள்.

What makes Singapore so attractive to Indians; 5 things to know
சிங்கப்பூர் மக்களின் உணவுதட்டில் கை வைத்த உக்ரைன் ரஷ்யா போர் - என்ன நடக்கிறது தெரியுமா?

பாதுகாப்பு மற்றும் தூய்மை

நன்கு பராமரிக்கப்பட்ட உள்கட்டமைப்பு, பொது போக்குவரத்து அமைப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்தல் ஆகியவை சிங்கப்பூர் பார்வையாளர்களுக்கு, தனி பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் மன அமைதியை வழங்குகிறது.

What makes Singapore so attractive to Indians; 5 things to know
சிங்கப்பூர் முதல் மாலத்தீவுகள் வரை - இதுவரை பனியைப் பார்த்திராத இடங்கள் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com