White Peacock : ஏன் வெண்மையாக இருக்கின்றன? வெள்ளை மயில் குறித்த சுவராஸ்ய தகவல்கள்

இந்த மயில்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் வாழ்கின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ படுகையில் இவை காணப்படுகின்றன
White Peacock
White PeacockCanva
Published on

பிரமிக்க வைக்கும் வண்ணமயமான மயில்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். ஊதா- பச்சை மயில்கள் உலகம் முழுவதும் மிகவும் பொதுவானவை.

வழக்கமான மயிலை போன்று அல்லாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும் மயில் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

வெள்ளை மயிலின் வாழிடம், அது குறித்த விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

நிறத்தின் தோற்றம் - அவை ஏன் வெண்மையாக இருக்கின்றன?

மனிதர்களுக்கு தோன்றும் அல்பினிசம் அதாவது வெண்மைத் தோல் நோய் என்று நினைக்கிறார்கள். ஆனால், வெள்ளை மயில்களைப் பொறுத்தவரை, அல்பினிசம் உண்மையில் அவற்றின் நிற மாற்றத்திற்கான காரணம் அல்ல.

வெள்ளை மயில்களுக்கு லூசிசம் எனப்படும் மரபணு மாற்றம் உள்ளது. இதனால் இறகுகள், முடி மற்றும் தோலில் நிறமி குறையும் நிலை உருவாகலாம். இந்த நிலை நிறமிகள் இறகுகள், முடி அல்லது தோலில் ஒட்டிக்கொள்வதைத் தடுக்கிறது.

White Peacock
Red Panda : வாலையே போர்வையாக பயன்படுத்தும் சிவப்பு பாண்டா - 7 அசர வைக்கும் தகவல்கள்

பறவைகளில் லூசிசம் அதிகமாக உள்ளது, இதன் விளைவாக, அவற்றின் இறகுகள் வெளிர், வெள்ளையாக இருக்கலாம் என்கின்றனர்.

இந்த மயில்கள், பிறப்பிலிருந்தே, நிறமிகளை இழக்கின்றன. அவை மஞ்சள் நிறத்தில் பிறக்கின்றன.

மேலும் அவை வளரும்போது, ​​​​மஞ்சள் நிறம் மாறி மயில்கள் முதிர்ச்சியடையும் போது வெள்ளை நிறமாக மாறுகிறது.

வெள்ளை மயில்கள் எங்கு வாழ்கின்றன?

இந்த மயில்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் வாழ்கின்றன. ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ படுகையில் இவை காணப்படுகின்றன. ஆனால் அவை காங்கோ மயில்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அவை குறைவான இறகுகளால் வகைப்படுத்தப்படுகின்றன.

வெள்ளை மயில்கள் நீல மயில்களிலிருந்து தோன்றியதால், அவை தென்கிழக்கு ஆசியாவின் பகுதியிலும் காணப்படுகின்றன.

White Peacock
Penguin : பறக்க முடியாத பறவை பற்றிய சில சுவாரஸ்ய உண்மைகள்! Wow Facts

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com