UAE : யார் இந்த Sheikh Khalifa bin Zayed Al Nahyan - இவர் அரபு அமீரகத்துக்கு செய்தது என்ன?

20ஆம் நூற்றாண்டு வரை, அமெரிக்காவோடு இணக்கமாக இருந்து, தன் நாட்டை காப்பாற்றிக் கொண்டு, பொருளாதார ரீதியாக அமீரகத்தை வளர்த்து எடுத்துக் கொண்டது என்றால், 21ஆம் நூற்றாண்டில் கதை மாறத் தொடங்கியது.
Sheikh Khalifa bin Zayed Al Nahyan
Sheikh Khalifa bin Zayed Al NahyanTwitter
Published on

Sheikh Khalifa bin Zayed Al Nahyan நேற்று (மே 13) காலமானதாக ஐக்கிய அரபு அமீரகம் உறுதி செய்துள்ளது. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பொறுப்பிலிருந்ர். இவர் அந்நாட்டுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் செய்த நல்ல விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

Khalifa bin Zayed bin Sultan bin Zayed bin Khalifa bin Shakhbout bin Theyab bin Issa bin Nahyan bin Falah bin Yas என்பதுதான் மறைந்த அமீரகத்தில் அதிபரின் முழு பெயர் என்கிறது ஐக்கிய அரபு அமீரகத்துடன் தொழில் ரீதியில் தொடர்பில் இருக்கும் கலீஜ் டைம்ஸ் பத்திரிகை.

1948ம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நயான் மற்றும் அவரது மனைவி ஷேகா ஹெஸா பிண்ட் மொஹம்மத் பின் கலீஃபாவுக்கும் மூத்த மகனாகப் பிறந்தார் ஷேக் கலீஃபா.

அல் ஐன் (AL Ain) என்கிற நகரத்தில் அல் முவாஜி கிராமத்தில்தான் பிறந்தார் ஷேக் கலீஃபா. பனி யஷ் (Bani Yas) என்கிற மலைவாழ் மக்கள் கூட்டமைப்பின் துணைப் பிரிவான அல் பூ ஃபலா (Al bu Falah) மற்றும் Al Nahyan அரச குடும்பத்தின் அதிகார மையமாகத் திகழ்ந்தது அல் முவாஜி கிராமம்.

ஷேக் கலீஃபாவின் தந்தை, அல் ஐன் நகரத்தில் கட்டிய முதல் பள்ளியில்தான் படித்தார். சிறுவயதிலிருந்தே தந்தையைப் பார்த்து வளர்ந்த ஷேக் கலீஃபாவுக்கு அவரது தந்தையே ஒரு முன்மாதிரியாகிப் போனார்.

அல் ஐன் பகுதியை நிர்வகித்து வந்த தன் தந்தையுடனிருந்து வந்த ஷேக் கலீஃபாவுக்கு அதுவே அரசியல் மற்றும் மக்கள் சிந்தனைக்குப் பாலபாடமாக அமைந்தது.

ஷேக் கலீஃபா ஷேகா ஸம்சா பிண்ட் சுஹைல் அல் மஸ்ரூயீயை மணந்து எட்டு குழந்தைகளுக்குத் தகப்பனானார் ஷேக் கலீஃபா. இந்த ராஜ குடும்ப தம்பதிக்கு இரு மகன்கள் மற்றும் ஆறு மகள்களாவர். தற்போது அவர்களுக்கும் திருமணமாகி குழந்தைகள் எல்லாம் பிறந்துவிட்டனர்.

Sheikh Khalifa bin Zayed Al Nahyan
Sheikh Khalifa bin Zayed Al NahyanTwitter

ஐக்கிய அரபு அமீரகம் உருவான போது, முதல் அதிபராக இருந்த அவரது தந்தை ஷேக் பின் சுல்தாந் அல் நயான், கடந்த 2004 நவம்பரில் காலமான பிறகு, நவம்பர் 4ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்றார் ஷேக் கலீஃபா.

உலகில் அதிக கச்சா எண்ணெய் வளமுள்ள நாடு வெனிசுலா என்கிறது வேர்ல்டோமீட்டர்ஸ் என்கிற தரவு வலைதளம். ஆனால் அந்நாட்டில் கலவரம், களேபரம் என மின்சாரம் கூட இல்லாமல் தவித்த காட்சிகளை உலகம் பார்த்தது.

1971ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், ஒரு மத்திய கிழக்கு நாடாக, தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய் வளத்தை திறம்பட ஆட்சி செய்து நாட்டை வளர்த்தெடுத்த பெருமை முதல் அதிபர் சுல்தானையே சேரும்.

20ஆம் நூற்றாண்டு வரை, அமெரிக்காவோடு இணக்கமாக இருந்து, தன் நாட்டை காப்பாற்றிக் கொண்டு, பொருளாதார ரீதியாக அமீரகத்தை வளர்த்து எடுத்துக் கொண்டது என்றால், 21ஆம் நூற்றாண்டில் கதை மாறத் தொடங்கியது.

21ஆம் நூற்றாண்டில், இந்தியாவும் சீனாவும் தன்னளவில் தனிப் பெரும் பொருளாதார சக்திகளாக உருவெடுக்கத் தொடங்கின. அது போக 2008ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சனைகளும் எழுந்தன.

2004ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராகப் பொறுப்பேற்ற ஷேக் கலீஃபா முதலில் பொருளாதார நெருக்கடியைத் திறம்படச் சமாளித்தார். அதோடு கச்சா எண்ணெய்யை மட்டும் நம்பி இனி காலம் தள்ள முடியாதெனத் துபாயை ஒரு உலக சுற்றுலா தளமாக மாற்றும் பணிகளைத் தொடங்கினார்.

கிராண்ட் பிரிக்ஸ் போன்ற சுற்றுலா வருமானத்தை ஈட்டும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் எனத் தொலைநோக்கோடு சிந்தித்தார்.

தற்போது, நிதி நிறுவனங்கள், வங்கிகள், பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களை எல்லாம் துபாய், அபுதாபி போன்ற ஐக்கிய அரபு அமீரக நகரங்களில் அலுவலகம் தொடங்க அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

Dubai Expo
Dubai ExpoTwitter

அவ்வளவு ஏன் துபாய் 2020 எக்ஸ்போ குறித்து நம்மில் பலரும் விளம்பரங்களைக் கூட பார்த்திருப்போம். அந்த அளவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வருவாயைக் கச்சா எண்ணெய் மற்றும் அது சார்ந்த துறைகளிலிருந்து வருவதை விட மற்ற துறைகளிலிருந்து ஈட்ட முனைப்போடு செயல்படுகிறது அமீரகம்.

பொருளாதாரம், வியாபாரம் போன்ற விஷயத்தில் எப்படி கச்சா எண்ணெய்யை மட்டும் சார்ந்து இருப்பது எதிர்காலத்துக்கு ஒத்துவராதென, மற்ற துறைகளையும் மேம்படுத்தத் தொடங்கினாரோ, அதே போலச் சர்வதேச ராஜ ரீக ரீதியிலான உறவு முறையிலும் வெறுமனே அமெரிக்காவைச் சார்ந்து இருப்பது போதாதென, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளோடும் தன் நட்பை வலுப்படுத்திக் கொண்டார் ஷேக் கலீஃபா.

அது அமெரிக்காவைப் பல முறை கோபத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றது. இருப்பினும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நட்பை இழக்க விரும்பாமல் அமெரிக்க பல நேரங்களில் சங்கடத்தோடு அமைதி காக்க வேண்டி வந்தது.

Sheikh Khalifa bin Zayed Al Nahyan
செளதி அரேபியா வரலாறு : செளத் குடும்பம் இப்படிதான் Saudi எனும் நாட்டை உருவாக்கியது |பாகம் 2

இந்தியாவும், சீனாவும்தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் வாடிக்கையாளர்கள். இது போக சமீபத்தைய தரவுகள் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் மக்களை நாடுவாரியாகப் பிரித்துப் பார்த்தால், அந்நாட்டில் அதிகம் வாழும் மக்கள் இந்தியர்கள் தான். எனவே இயற்கையாகவே இந்தியா - அமீரகத்துக்கு இடையிலான நட்பும், ராஜரீக உறவும் வலுப்போடு விட்டது.

இது போக, வர்த்தக ரீதியாகப் பார்த்தாலும் இந்தியாவும் அமீரகமும் ஆண்டுக்கு சுமார் 65 பில்லியன் டாலர் அளவுக்குப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்து கொள்கிறார்கள். இந்த வர்த்தகத்தை இன்னும் அதிகரிக்க இரு தரப்பும் மும்முரமாக இருக்கிறார்கள்.

Sheikh Khalifa bin Zayed Al Nahyan
செளதி அரேபியா கதை - 1 : அடர் வனம் பாலைவனம் ஆக மாறிய வரலாறு!

இப்படி அமெரிக்காவைப் பகைத்துக் கொண்டு சீனா உடன் நட்பைத் தொடர்வது (உதாரணத்துக்கு ஹுவாய் பிரச்சனை, சீன ராணுவத் தளப் பிரச்சனைகளைக் கூறலாம்), இந்தியாவை வர்த்தகக் கூட்டாளியாக வைத்திருப்பது போன்ற பல நடவடிக்கைகளால் ஐக்கிய அரபு அமீரகம் தன் பொருளாதாரத்தை வலுவாக நிலை நிறுத்திக் கொள்ள வித்திடத்தில் மறைந்த அதிபர் ஷேக் கலிஃபாவுக்கு முக்கிய பங்கு உண்டு.

தன் நாட்டு மக்களிடம் இப்போது வரை வரி வசூலிக்காத நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று. தன் தந்தை விட்ட இடத்திலிருந்து, நவீன உலக அரசியலுக்குத் தகுந்தாற் போல ஐக்கிய அரபு அமீரகத்தை வழிநடத்திய பெருமை ஷேக் கலீஃபாவைச் சேரும். அவருக்கு நம் அஞ்சலிகள்.

Sheikh Khalifa bin Zayed Al Nahyan
UAE : ஐக்கிய அரபு அமீரக அதிபர் மரணம் - 40 நாட்கள் இரங்கல் கடைபிடிக்க முடிவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com