SRM to Twitter : எலான் மஸ்குக்கு துணையாக ஒரு சென்னைவாசி- யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். 2010 ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மென்பொருள் பொறியாளரான இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலிருந்து தன் கெரியரைத் தொடங்கினார்.
SRM to Twitter : எலான் மஸ்குக்கு துணையாக ஒரு சென்னைவாசி- யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?
SRM to Twitter : எலான் மஸ்குக்கு துணையாக ஒரு சென்னைவாசி- யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?டிவிட்டர்

கடந்த அக்டோபர் 27ம் தேதி முதல் முழுமையாக ட்விட்டரின் தலைவராக இயங்கி வருகிறார் எலான் மஸ்க். இவர் பராக் அகர்வால் உள்ளிட்ட முக்கிய பொறுப்பில் இருந்தவர்களை நீக்கினார்.

தொழில்நுட்ப விவகாரங்களில் வல்லவரான எலான் மஸ்க் சமூக வலைத்தளங்களை எப்படிக் கையாளப்போகிறார் என்ற கேள்வி நம் அனைவருக்குமே இருந்திருக்கும். ட்விட்டரின் சிஇஓ எலான் மஸ்க் தான் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி மஸ்க் ட்விட்டரின் போர்ட் டைரக்டர்களையும் நீக்கியுள்ளார்.

தான் மட்டுமே ஒரே ஆளாக ட்விட்டரை இயக்கி வருகிறார் மஸ்க். இதற்காக ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்கியுள்ளார். அந்த குழுவில் முக்கியமான பங்கு சந்தை முதலீட்டாளர்களை சேர்த்துக்கொண்டுள்ளார். அவர்களில் ஒருவர் தான் ஸ்ரீராம் கிருஷ்ணன். இவர் ஒரு சென்னை வாசி!

Elon Musk
Elon MuskNewsSense

எலான் மஸ்க் - ஸ்ரீராம் கிருஷ்ணன் என்ன தொடர்பு?

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்காக தனது டெஸ்லா பங்குகளை விற்றார். அது மட்டுமின்றி விர்ஜின் கேலக்டிக்கின் ரிச்சர்ட் பார்சன், A16z என்று அழைக்கப்படும் முதலீட்டு நிறுவனமான ஆண்ட்ரீசென் ஹோரோவிட்ஸ் (Andreesen Horowitz)  போன்றவர்களும் ட்விட்டரில் முதலீடு செய்துள்ளனர்.

இந்த A16z-ல் பொது முதலீட்டாளராக இருப்பவர் தான் ஸ்ரீராம் கிருஷ்ணன். இவர் முன்னதாக ட்விட்டரிலும் பணியாற்றியிருக்கிறார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவு ஆர்த்தி இருவரும் கிளஃபவுஸில்  ‘தி குட் டைம்ஸ் ஷோ’ என்ற பிரபல ஷோவை நடத்தினர். 2021ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஷோவில் மஸ்க் தோன்றினார்.

அதன் பிறகு ஸ்ரீராம் மற்றும் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் தலைமையகத்தில் சந்தித்ததாக நியுயார்க் டைம்ஸ் செய்தி தளம் கூறுகிறது.

SRM to Twitter : எலான் மஸ்குக்கு துணையாக ஒரு சென்னைவாசி- யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?
Twitter : எலான் மஸ்கின் சாம்ராஜ்யத்தை காலி செய்யுமா? - என்னென்ன சவால்கள் உள்ளன?
Noam Galai

யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். 2010 ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

ட்விட்டர் தலைமையகம் இருக்கும் சான் பிரான்சிஸ்கோவின் நொயே பள்ளத்தாக்கில் வசிக்கும் இவர் இப்போது ஒரு குறிப்பிடத்தக்க கிரிப்டோ மற்றும் வெப்3.ஓ முதலீட்டாளராக இருக்கிறார். அப்படித்தான் ஆடியோ சமூக வலைத்தளமான க்ளப் ஹவிஸிலும் முதலீடு செய்துள்ளார்.

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திலும் இவர் முதலீடு செய்திருப்பதாக தி ப்ரின்ட் தளம் கூறுகிறது. மென்பொருள் பொறியாளரான இவர் ட்விட்டர் மட்டுமல்லாமல் ஸ்னாப் சேட் (2016-2017), பேஸ்புக் (2013-2016), மைக்ரோசாஃப்ட் (2005-2011) உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

தற்போது மஸ்க் ட்விட்டரில் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கவும், பொறுப்பாக நிர்வகிக்கவும் அமர்த்தப்பட்டிருக்கிறார் ஸ்ரீராம் கிருஷ்ணன்.

SRM to Twitter : எலான் மஸ்குக்கு துணையாக ஒரு சென்னைவாசி- யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?
எலான் மஸ்க்: "Blue Tick" வைத்திருக்க கட்டணம்; ட்விட்டரில் ரீல்ஸ் - புதிய மாற்றங்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com