அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்ட பிறகு அல்-கொய்தாவுக்கு புதிய தலைவர் யார் தெரியுமா?

ஜவாஹிரியின் மரணம் அமெரிக்காவில் 9/11 தாக்குதலில் கொல்லப்பட்ட 3,000 பேரின் குடும்பங்களின் பிரச்னைக்கு ஒரு முடிவைக் கொண்டு வரும் என்று நம்புவதாக ஜோ பைடன் பேசினார் .
ஜவாஹிரி
ஜவாஹிரிNews Sense
Published on

சென்ற வார இறுதியில் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியைக் கொன்றதன் மூலம் அந்த பயங்கரவாத அமைப்புக்கு அமெரிக்கா பாரிய அடியை அளித்துள்ளது.

நீதி வழங்கப்பட்டது

திங்கள்கிழமை மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தினார். மேலும் "நீதி வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார். ஜவாஹிரியின் மரணம் அமெரிக்காவில் 9/11 தாக்குதலில் கொல்லப்பட்ட 3,000 பேரின் குடும்பங்களின் பிரச்னைக்கு ஒரு முடிவைக் கொண்டு வரும் என்று நம்புவதாக ஜோ பைடன் பேசினார் .

யார் புதிய தலைவர்?

பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகளின் கைகளில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, 2011 இல் அல்-கொய்தாவின் தலைவரானார் ஜவாஹிரி.

இப்போது ஜவாஹிரியின் மரணத்தால், அல் கொய்தா பயங்கரவாத அமைப்பிற்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்து வெற்றிடம் உருவாகியுள்ளது. ஜவாஹிரிக்கு அடுத்தபடியாக யார் வருவார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், முன்னாள் எகிப்திய கர்னலான சைஃப் அல்-அடேல் தலைமைக்கு வரலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன.

ஜவாஹிரி
அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டார் - ஜோ பைடன் அறிவிப்பு

சைஃப் அல்-அடெல் யார்?

மத்திய கிழக்கு நிறுவனத்தின் படி, அடெல் பெரும்பாலும் அல்-கொய்தாவின் தலைவராக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்க புலனாய்வு அமைப்புகளின் கூற்றுப்படி, அவர் அல்-கொய்தாவின் நிறுவன உறுப்பினரான முன்னாள் எகிப்திய இராணுவ அதிகாரி ஆவார். அவர் இதற்கு முன்பு மற்றொரு பயங்கரவாத குழுவான மக்தாப் அல்-கித்மத் (MAK) உடன் தொடர்பு கொண்டிருந்தார்.

லேடன் பாதுகாப்பு தலைவர் அடெல்

MAK ஆனது 1980களில் ஒசாமா பின்லேடனால் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் பயங்கரவாத செயல்களுக்கு பணம் வழங்குவதற்கும் உலகெங்கிலும் உள்ள போராளிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் பயன்பட்ட அமைப்பு ஆகும். ரஷ்யர்களை எதிர்த்துப் போரிட ஆயிரக்கணக்கான ஆண்களை 1970களின் பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் சென்றது இந்தக் குழுதான். பின்னர் இந்தக் குழு பிளவுபட்டது. இதில் பின்லேடன் தலைமையிலான தீவிரவாத பிரிவு அல்-கொய்தாவை உருவாக்கியது.

அடெல் ஒரு காலத்தில் பின்லேடனின் பாதுகாப்புத் தலைவராகவும் இருந்தார். மேலும் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது அல்-கொய்தா நடத்திய 1998 குண்டுவெடிப்பு தொடர்பாக இவர் தேடப்பட்டு வருகிறார். 2001 ஆம் ஆண்டு முதல் எஃப்.பி.ஐ-யின் மிகவும் தேடப்படும் பட்டியலிலும் உள்ளார். FBI அவரது தலைக்கு 10 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

அடேல், சமீப காலங்களில் ஈரானில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் சிரியாவில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு டெலிகிராம் மூலம் உத்தரவுகளை வழங்குகிறார்.

ஏபிசி செய்தி நிறுவனத்தின் படி அமெரிக்க படைகள் அடேலை 1993 முதல் தேடி வருகின்றது. அப்போது சோமாலியாவின் மொகடிஷூவில் 18 அமெரிக்கர்கள் அடேல் நடத்திய திடீர் தாக்குதலில் கொல்லப்பட்டனர். மேலும் அப்போது அமெரிக்க ஹெலிகாப்படர்களும் தாக்கி அழிக்கப்பட்டன. அப்போது அடேலுக்கு வயது 30 மட்டும்தான்.

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் திருடன் - போலீஸ் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்து விடவில்லை. அது போல அமெரிக்காவிற்கும் அல் கொய்தாளிற்கும் இப்போது ஆட்டம் தீராது என்பதையே அடேலின் தலைமை குறித்த செய்தி தெரிவிக்கிறது.

ஜவாஹிரி
அமெரிக்காவால் கொல்லப்பட்ட பின்லேடனின் வாரிசு அய்மன் அல் - ஜவாஹிரி யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com