27 முறை தேசிய கொடியை மாற்றிய வல்லரசு நாடு - ஏன் தெரியுமா?

பொதுவாக எந்த நாடும் தங்களது தேசியக் கொடியை மாற்றுவது குறித்து சிந்திப்பதில்லை. ஏனெனில் தேசியக் கொடியானது அவர்களின் பண்பாடு மற்றும் நாட்டுப்பற்றுடன் நெருங்கியத் தொடர்பைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த வல்லரசு நாடு 27 முறை தேசியக் கொடியை மாற்றியதன் காரணம் தெரியுமா?
27 முறை தேசிய கொடியை மாற்றிய வல்லரசு நாடு - ஏன் தெரியுமா?
27 முறை தேசிய கொடியை மாற்றிய வல்லரசு நாடு - ஏன் தெரியுமா?Twitter
Published on

தேசியக் கொடி ஒரு நாட்டின் அடையாளமாக திகழ்கிறது. கொடியின் மீது மக்கள் அனைவருக்கும் தனிப்பட்ட மரியாதை இருக்கிறது.

சாதாரண துணியை போல யாரும் தேசிய கொடியை பார்ப்பதில்லை. ஒவ்வொரு கொடியின் வண்ணங்களும் வடிவமும் மக்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது.

பொதுவாக எந்த நாடும் தங்களது தேசியக் கொடியை மாற்றுவது குறித்து சிந்திப்பதில்லை. ஏனெனில் தேசியக் கொடியானது அவர்களின் பண்பாடு மற்றும் நாட்டுப்பற்றுடன் நெருங்கியத் தொடர்பைக் கொண்டுள்ளது.

ஆனால் வல்லரசு நாடான அமெரிக்கா இதுவரை 27 முறை தங்களது தேசியக் கொடியை மாற்றியுள்ளது. ஏன் தெரியுமா?

அமெரிக்க பூர்வகுடி மக்கள்
அமெரிக்க பூர்வகுடி மக்கள்

உலக நாடுகளில் அமெரிக்காவின் வரலாறு வித்தியாசமானது. ஐரோப்பியர்கள் நுழைவதற்கு முன்வரை பழங்குடி மக்கள் மகிழ்ச்சியாக சுற்றித்திரிந்த செழிப்பான நிலப்பகுதியாக இருந்தது அமெரிக்கா.

ஐரோப்பியர்கள் நுழைந்த பின்னர் பல ராஜாங்கங்கள் அமெரிக்காவுக்காக சண்டையிட்டன, 1776ம் ஆண்டு அமெரிக்க புரட்சியின் விளைவாக அமெரிக்கா சுதந்திரம் அடைந்தது.

அப்போது அமெரிக்காவின் கொடியில் 13 செந்நிற கோடுகளும் நீல கட்டத்தினுள் 13 நட்சத்திரங்களும் இருந்தது. நட்சத்திரங்கள் வட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் 13 மாகாணங்களைக் குறிப்பதாக அந்த 13 நட்சத்திரங்கள் கருதப்பட்டன.

34 நட்சத்திரங்களைக் கொண்ட அமெரிக்க கொடி ( 1861 - 1863 )
34 நட்சத்திரங்களைக் கொண்ட அமெரிக்க கொடி ( 1861 - 1863 )

1795ம் ஆண்டு 15 நட்சத்திரங்களை கொண்ட கொடியை அறிமுகப்படுத்தினார் ஜார்ஜ் வாஷிங்டன். இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா 5 புதிய மாகாணங்களைக் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த 1818 வரை பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு 20 நட்சத்திரங்களைக் கொண்ட கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டிலேயே மேலும் மாகாணங்கள் இணைந்ததால் 21 நட்சத்திரங்களாக மாற்றப்பட்டது.

மாகாணங்கள் இணைவதும் அதற்கு ஏற்றபடி தேசிய கொடியில் நட்சத்திரங்கள் அதிகரிப்பதும் தொடர்ந்தது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதிருக்கும் கொடியை அறிமுகப்படுத்தினார் அதிபர் ஐசனோவர்.

27 முறை தேசிய கொடியை மாற்றிய வல்லரசு நாடு - ஏன் தெரியுமா?
ஈராக் மீது 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா போர் தொடுத்தது ஏன்? - ஒரு வரலாற்று பயணம்

இப்போது அமெரிக்காவில் 50 மாகாணங்களைக் குறிக்கும் வகையில் 50 நட்சத்திரங்கள் இருக்கின்றன. நீண்ட காலம் பயன்பாட்டில் இருக்கும் அமெரிக்க கொடி இதுதான்.

அமெரிக்கா அதன் புதிய மாகாணங்களை ஐரோப்பிய காலனிகளிடம் இருந்தும் பூர்வீக பழங்குடிகளிடமிருந்தும் கைப்பற்றியது.

இந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை ஒருவேளை எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் அல்லது குறையவும் செய்யலாம்.

27 முறை தேசிய கொடியை மாற்றிய வல்லரசு நாடு - ஏன் தெரியுமா?
அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா : உலகிலேயே அதிகமாக பில்லியனர்கள் இருக்கும் நாடு எது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com