76th Independence Day: ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாட என்ன காரணம்?

இரு சுதந்திர நாடுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டாலும் இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 14 அன்று தன் சுதந்திர தினத்தை அனுசரிக்கிறது பாகிஸ்தான். இதற்கு என்ன காரணம்?
76th Independence Day: ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாட என்ன காரணம்?
76th Independence Day: ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாட என்ன காரணம்?Twitter
Published on

நாளை ஆகஸ்ட் 15 இந்தியா தனது 76வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.

வரலாற்றின் படி, ஆகஸ்ட் 14 நள்ளிரவில் சரியாக 12 மணியளவில் இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.

சுமார் 300 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள், 1947ஆம் ஆண்டு சுதந்திரத்தை வழங்க முடிவு செய்தது.

வங்காளம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை பிரித்து, இந்திய சுதந்திரச் சட்டம் 1947ன் படி, இரண்டு சுதந்திர நாடுகள் நிறுவப்பட்டது.

“இந்தியாவில் 15 ஆகஸ்ட் 1947 முதல், முறையே இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என அறியப்படும் இரண்டு சுதந்திர தலைமைகள் நிறுவப்படும்." என்கிறது அந்த சட்டம்.

பாகிஸ்தான் உருவாக முக்கிய காரணமாக இருந்த, முகமது அலி ஜின்னாவும், தனது வரலாற்று வானொலி உரையில், “ஆகஸ்ட் 15 சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட பாகிஸ்தானின் பிறந்த நாள். கடந்த சில வருடங்களில் பெரும் தியாகங்களைச் செய்த முஸ்லிம் தேசம் தனது தாயகத்தைப் பெறுவதற்கான விதியை நிறைவேற்றுவதை இது குறிக்கிறது.” என்றும் கூட குறிப்பிட்டிருந்தார்.

இரு சுதந்திர நாடுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டாலும் இந்தியாவுக்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 14 அன்று தன் சுதந்திர தினத்தை அனுசரிக்கிறது பாகிஸ்தான்.

இதற்கு என்ன காரணம்?

பாகிஸ்தான் ஏன் 14 ஆகஸ்ட்டில் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மௌண்ட் பேட்டனின் அட்டவணை மாற்றங்கள்

பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராய் ஆகவும், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆகவும் செயல்பட்டவர் மௌண்ட் பேட்டன். இவரது கைகளில் இருந்து தான் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் சுதந்திரத்தை பெற்றன.

இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கலாம் என்று முடிவான பிறகு ஜூன் 1948க்கு முன் அதிகாரத்தை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்ற நிற்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆகஸ்ட் 15ல் சுதந்திரத்தை வழங்க ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன.

மௌண்ட் பேட்டன் ஆகஸ்ட் 14 1947 அன்று கராச்சிக்கு சென்று முகமது அலி ஜின்னாவை சந்தித்து, அதிகாரத்தை மாற்றி அளித்ததாக கூறப்படுகிறது.

76th Independence Day: ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாட என்ன காரணம்?
பாகிஸ்தான்: ஒரு உச்சி மாநாடும், அடுத்தடுத்து தலைவர்களின் மரணங்களும் - உலகை உலுக்கிய கதை

அமைச்சரவையின் முடிவு

ஜூன் மாதம் 1948ல் பாகிஸ்தானின் முதல் பிரதமரான லியாகத் அலி கான் தலைமையில் ஒரு அமைச்சரவை கூடியது. அதில் இந்தியாவுக்கு முன்னதாக பாகிஸ்தான் தனது சுதந்திரத்தை கொண்டாடவேண்டும் என்று முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த முன்மொழிவுக்கு ஜின்னா ஒப்புதல் அளித்து, ஆகஸ்ட் 14 சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டது.

ரமலான்

இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலானும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 14 முடிந்து 15 ஆம் தேதி தொடங்கும் நள்ளிரவின் இடைப்பட்ட காலத்தில் புனித மாதத்தின் மங்களகரமான நாளாகக் கருதப்படும் ரம்ஜானின் 27 வது நாளுடன் இது ஒத்துப்போகிறது என்று கூறுகின்றனர்.

இதனால் ஆகஸ்ட் 14 சுதந்திர தினமாக அறியப்படுகிறது.

76th Independence Day: ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாட என்ன காரணம்?
ரமலான் பண்டிகையின் போது மக்கள் ஏன் பேரீச்சம்பழம் சாப்பிடுகிறார்கள்?

நேர மாற்றம்

இந்தியாவுக்கு சரியாக ஆகஸ்ட் 15 நள்ளிரவு 12 மணிக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானில் நேரம் இரவு 11.30 மணி. பாகிஸ்தான் இந்தியாவை விட அரைமணி நேரம் பின் தங்கியிருப்பதால், ஒரு நாள் முன்னதாக சுதந்திரத்தை கொண்டாடுகிறது.

76th Independence Day: ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாட என்ன காரணம்?
சுதந்திர தினம் : இந்தியாவின் மூவர்ண கொடி எப்படி வந்தது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com