சீனா: தனித்து விடப்பட்ட 2000 ஆண்டு பழமையான ‘கல் நகரம்’ - இதை ஏன் நிச்சயம் பார்க்கவேண்டும்?

யுவான் ஆட்சியின் போது இந்த நகரம் மேலும் பெரிதாக்கப்பட்டு அதில் இருந்த பழைய கட்டிடங்கள் சீர்செய்யப்பட்டது. தொடர்ந்து, கிங் ஆட்சியின் போது அந்த இடத்தில் புதிய நகரம் அமைக்கப்பட்டதுடன், பழைய 'கல் நகரம்' தனித்துவிடப்பட்டது.
சீனா: தனித்து விடப்பட்ட 2000 ஆண்டு பழமையான ‘கல் நகரம்’ - இதை ஏன் நிச்சயம் பார்க்கவேண்டும்?
சீனா: தனித்து விடப்பட்ட 2000 ஆண்டு பழமையான ‘கல் நகரம்’ - இதை ஏன் நிச்சயம் பார்க்கவேண்டும்?Twitter
Published on

இப்போதெல்லாம், சீனா என்று சொன்னாலே உடனே நமது நினைவுக்கு வருவது கொரோனா வைரஸ் தான். 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா தொற்று பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி, அதிலிருந்து உலக நாடுகள் அனைத்தும் மெது மெதுவாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சீனாவைப் பற்றிய பேச்சு எடுத்தாலே கொரோனா ஞாபகத்துக்கு வருவது ஒன்றும் தவறில்லை.

சரி, அதை விடுவோம்.

உலக அதிசயங்களில் ஒன்றான பெருஞ்சுவர் சீனாவுக்கான முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. இதுவும் நமக்கு தெரிந்த ஒன்று தான்.

ஆனால், சீனாவில் இதையும் தாண்டி சீனாவின் தடை செய்யப்பட்ட பகுதி, சுடுமண் சிலை என நம்மை பிரமிக்க வைக்கும் பல இடங்கள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று தான் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள 'கல் நகரம்'. மிகவும் பழமைவாய்ந்த இந்த இடத்திற்கு 2000 ஆண்டு கால வரலாறு உள்ளது.

அதாவது, சீனாவின் பழைய சில்க் ரோடு சந்திப்பில் அமைந்துள்ள இந்த இடத்தின் முக்கியத்துவம் கருதி, ஹான் ஆட்சியின் போது 'கல் நகரம்' அமைந்துள்ள ஜியாங்சு நகரம் புலி நாட்டின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.

பிற்காலத்தில், யுவான் ஆட்சியின் போது இந்த நகரம் மேலும் பெரிதாக்கப்பட்டு அதில் இருந்த பழைய கட்டிடங்கள் சீர்செய்யப்பட்டது. தொடர்ந்து, கிங் ஆட்சியின் போது அந்த இடத்தில் புதிய நகரம் அமைக்கப்பட்டதுடன், பழைய 'கல் நகரம்' தனித்துவிடப்பட்டது.

இந்த சூழலில், கல் நகரத்தை நீங்கள் பார்வையிட்டால் வெறும் பாழடைந்த கட்டிடங்கள், அதனை சுற்றி இருக்கும் அழகான அமைப்பு, பச்சைப் பசேல் என்று இருக்கும் மலைகள், அதில் இருந்து ஓடும் சுத்தமான ஆறு ஆகியவை மட்டும் தான் தெரியும். இந்த நகரம் ஒரு பெரிய கல்லின் மேல் கட்டப்பட்டிருக்கும்.

இதன் அமைப்பு கூர்மையான மேல் தளத்தையும், கீழே விரிந்த பகுதியையும் கொண்டிருக்கும். இந்த நகரத்துக்கான சுவர் கற்கள் மற்றும் களிமண்ணால் ஆன கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சீனா: தனித்து விடப்பட்ட 2000 ஆண்டு பழமையான ‘கல் நகரம்’ - இதை ஏன் நிச்சயம் பார்க்கவேண்டும்?
சீனா : பாலத்தின் மீது கட்டப்பட்ட கலர்ஃபுல் கிராமம் - பின்னணியில் இருக்கும் சோகக்கதை என்ன?

இந்த நகரத்தின் 4 மூலைகளிலும் 4 வாசல்கள் இருப்பதாக அறிக்கைகள் கூறுகிறது. ஆனால், வடக்குப் பகுதியில் உள்ள வாசல் மட்டுமே இப்போதைக்கு கண்களுக்கு புலப்படும்.

இந்த 'கல் நகரம்' பார்ப்பதற்கு சிறிய இடத்தில் இருந்தாலும் அதில் உள்பகுதி, வெளிப்பகுதி, மதில் சுவர், போர் மண்டலம் மற்றும் அணிவகுப்பு செய்யப்பட்ட இடங்கள் என நிறைய இடங்கள் இருக்கின்றன.

இது தவிர, கல் நகரத்தில் இருக்கும் பழமை வாய்ந்த கோட்டையை கட்டணம் செலுத்தி பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. அதனால், சீனாவுக்கு செல்லும் பார்வையாளர்கள் வெறும் 2 மணிநேரம் செலவிட்டால் மொத்த இடத்தையும் பார்க்க முடியும்.

சீனா: தனித்து விடப்பட்ட 2000 ஆண்டு பழமையான ‘கல் நகரம்’ - இதை ஏன் நிச்சயம் பார்க்கவேண்டும்?
நேபாளம் : சுயம்புவாக தோன்றிய ஒரு புத்த கோவில் - ஏன் நிச்சயம் பார்வையிட வேண்டும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com