Men's Day ஏன் கொண்டாடப்படுகிறது?

மகளிர் தினம் 1909 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்களுக்கு என ஒரு தினம் ஒதுக்கப்படாமலே இருந்தது. 1960 முதலே ஆண்கள் தங்களைக் கொண்டாடும் தினம் வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து வந்தனர்.
Men's Day ஏன் கொண்டாடப்படுகிறது?
Men's Day ஏன் கொண்டாடப்படுகிறது? Twitter
Published on

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் நாள் சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. உண்மையில் அனுசரிக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் மகளிர் தினம் போல இந்த நாளில் எந்த கொண்டாட்டங்களும் நடைபெறாது. ஆண்களுக்கு என்று ஒரு தினம் இருப்பது கூட பலருக்கும் தெரியாது.

மகளிர் தினம் 1909 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆண்களுக்கு என ஒரு தினம் ஒதுக்கப்படாமலே இருந்தது. 1960 முதலே ஆண்கள் தங்களைக் கொண்டாடும் தினம் வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து வந்தனர்.

கரீபிய நாடான ட்ரினிடாட் மற்றும் டொபாகோவைச் (Trinidad and Tobago) சேர்ந்த முனைவர் ஜெரோம் டூலெக்சிங் ( Jerome Teelucksingh) என்பவர் தான் 1999ம் ஆண்டு சர்வதேச ஆண்கள் தினத்தைத் தோற்றுவித்தார்.

சமூகத்தில் ஆண்களின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் தாம்பத்திய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் உருவாக்கப்பட்டது.

ஜெரோம் டூலெக்சிங் அவரது தந்தையின் நினைவைப் போற்றுவதற்காக நவம்பர் 19ம் தேதியை தேர்ந்தெடுத்தார்.

Men's Day ஏன் கொண்டாடப்படுகிறது?
பாதாமை விட சிறந்தது! ஆண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய ஒரு உணவு - என்ன அது? எவ்வளவு பலன்கள்?

ஆண்கள் என்றால் அழக்கூடாது, தங்கள் பிரச்னைகள் குறித்து மற்றவரிடம் புலம்பக் கூடாது போன்ற டாபூக்களை கலைவதற்காக இந்த தினம் உருவாக்கப்பட்டது.

பெண்களை விட ஆண்கள் சுதந்திரமாக இந்த சமூகத்தில் வாழ முடிந்தாலும் பேசப்படாத ஆண்களின் பிரச்னைகள் பல இருக்கின்றன. இவற்றைக் குறித்து வெளிப்படையான உரையாடல்களை நிகழ்த்துவது இந்த நாளின் நோக்கம்.

ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் செயல்படும் உரிமை எப்படிப் பெண்களுக்கு இருக்கிறதோ அது போலவே தங்கள் மனநலன் மீது அக்கறை செலுத்தும் உரிமை ஆண்களுக்கு இருக்கிறது என்பதே இந்த நாள் சொல்லவரும் கருத்தாகும். இந்த நாளில் இளம் பருவ சிறுவர்களுக்கு வளர்ந்த ஆண்களின் பொறுப்புகள் குறித்து கற்றுக்கொடுக்க வேண்டியது ஆண்களின் கடமை.

Men's Day ஏன் கொண்டாடப்படுகிறது?
பணம் கொடுத்து திட்டு வாங்கும் ஆண்கள்; வித்தியாசமாக சம்பாதிக்கும் பெண் - மாத வருமானம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com