கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரிக்கும். போக்குவரத்து செலவினங்கள் அதிகரிக்கும் என்பதால், அதனைத் தொடர்ந்து அரிசி, பருப்பு, காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பதை நாம் அறிவோம்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு பிளாஸ்டிக், டெக்ஸ்டைல், ரசாயன துறைகளிலும் எதிரொலிக்கும் என்பதை நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு ஏகப்பட்ட ரசாயனங்கள் கச்சா எண்ணெயில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன.
இப்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிக்குமா குறையுமா என்பதைப் பொருத்தே இத்தனை பொருட்களின் விலைவாசி அதிகரிக்குமா என்பதைக் கூற முடியும்.
வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் எனப்படும் டபிள்யூ டி ஐ (WTI) கச்சா எண்ணெயின் விலை, கடந்த மார்ச் 7ஆம் தேதி 130.5 அமெரிக்க டாலரைத் தொட்டு வர்த்தகமானது. கடந்த மார்ச் 15ஆம் தேதி 93.5 அமெரிக்க டாலரையும், ஏப்ரல் 11ஆம் தேதி 92.9 டாலரையும் தொட்டு வர்த்தகமானது.
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக டபிள்யூ டி ஐ கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 100 டாலருக்குக் கீழ் வர்த்தகமானது என்பதால் இனி கச்சா எண்ணெய் விலை அதிகரிக்குமா, குறையுமா என்கிற கேள்வி சந்தையில் எழுந்துள்ளது.
சிட்டி பேங்க் தரப்பிலிருந்து வெளியான அறிக்கை ஒன்றில், 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் கச்சா எண்ணெய் பேரலுக்கு 65 டாலரைத் தொடும் என்றும், 2023ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 45 டாலரைத் தொடும் என கணித்துள்ளது. உலக அளவில் ரெசசன் என்கிற பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் தன்னிச்சையாகவே கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்து விலை சரியும் என்பது அவர்கள் கருத்து.
இதற்கு நேர்மாறாக, ஜே பி மார்கன் என்கிற மற்றொரு பிரமாண்ட நிதி நிறுவனம் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் என கணித்திருக்கிறார்கள். ரெசசன் வருகிறதோ இல்லையோ, ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கு அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்தன. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ரஷ்யா தன் கச்சா எண்ணெய் உற்பத்தியை நிறுத்தினால், அது சந்தையில் விநியோகத்தை பாதிக்கும். இதனால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 380 டாலர் வரை கூட தொடலாம் என கணித்துள்ளது.
உலகின் முன்னணி நிதி நிறுவனமான ஜெஃப்ரீஸின் உலக ஈக்விட்டி துறைத் தலைவர் கிறிஸ்டோபர் வுட்டும், பூகோள அரசியல் பிரச்னைகளால் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 150 டாலரைத் தொடலாம் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இவர்கள் சொல்வது போல ஒரு பேரல் கச்சா எண்ணெய் 150 டாலரையோ அதற்கு அதிகமாகவோ தொட்டால் இன்னும் எவ்வளவு விலை அதிகரிக்கும் என்று தெரியவில்லை.
தனி நபருக்கு எரிபொருட்களின் விலை அதீத சுமை என்றால், இந்தியா, சீனா போல கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு, இது பேரிடியாக இருக்கும். அந்நாட்டு பொருளாதாரங்களில் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust