பிரேசிலை சேர்ந்த மோரேஸ் என்ற 37 வயதான பெண், தனது அம்மா வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட பொம்மையை அதிகமாகக் காதலித்துள்ளார். எந்த அளவிற்கு என்றால், அந்த பொம்மையையே திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு அதீத காதலை அந்த பொம்மை மீது வைத்துள்ளார்.
இன்னும் சிறப்பாக அந்த பெண்ணிற்கும் பொம்மைக்கும் அன்பின் அடையாளமாக ஒரு குழந்தை கிடைத்துள்ளது.
அந்த பொம்மை, அந்த பெண்ணுக்கு நடனமாடுவதற்கு நண்பன் இல்லை என்பதற்காக உருவாக்கப்பட்ட பொம்மை என்று தெரிவித்த அவர், பின்னர் காதலில் விழுந்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
இந்த திருமணம், மற்றும் அவர் திருமணம் செய்துகொண்ட கணவர் குறித்து அவர், கணவரின் வருகையால் வாழ்க்கையையே முழுமையடைந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எனது கணவர் ஒருபோதும் சண்டையிடுவதில்லை என்றும், தன்னை புரிந்துகொள்வதால், தான் எப்போதும் விரும்பும் மனிதனாகத் அவர் இருப்பதாக மோரேஸ் கூறினார்.
"மார்செலோ ஒரு சிறந்த மற்றும் உண்மையுள்ள கணவர் என்று கூறிய அந்த பெண், எல்லா பெண்களும் பொறாமைப்படும் அளவுக்கு அவர் ஒரு மனிதர்” என்று கூறினார்.
தற்போது குழந்தை கிடைத்திருப்பதாக கூறும் அவர் அவரது கணவரைப் போல குட்டி பொம்மை ஒன்றை கையில் வைத்திருக்கிறார்.
இதற்கு பின்பு கஜகஸ்தான் நாட்டை சேர்ந்தவர் யூரி டோலோச்ச்கோ என்ற பாடி பில்டர் மார்கோ என்ற பொம்மையை திருமணம் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust