
நெட்ஃபிளிக்ஸின் பிரபல நிகழ்ச்சியான 'இந்தியன் மேட்ச்மேக்கிங்' இல் நடித்த இந்தியாவைச் சேர்ந்த சுர்பி குப்தா என்ற பெண் கடந்த மாதம் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்களில் ஒருவர் என்று பிபிசி தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு அழகுப் போட்டியில் 'மிஸ் பாரத்-கலிபோர்னியா' பட்டத்தை வென்றவர் சுர்பி குப்தா.
2009 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் தங்கியிருக்கும் சுர்பி குப்தா, மெட்டா நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து வந்தார்.
வேலையில் சிறப்பாக செய்த போதிலும் என்னை பணி நீக்கம் செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை என்று பிபிசியிடம் சுர்பி குப்தா கூறியிருக்கிறார்.
பணிநீக்கம் குறித்த மின்னஞ்சல் அவருக்கு நிறுவனத்திலிருந்து வந்தது. இதற்குப் பிறகு, அவரால் கம்ப்யூட்டர் போன்ற அலுவலகம் சார்ந்த பொருட்களை பயன்படுத்த முடியவில்லை என்று சுர்பி குப்தா கூறினார்.
இருப்பினும், சுர்பி குப்தாவை உடனடியாக வெளியேறுமாறு கூறவில்லை என்று நிறுவன அறிக்கை கூறுகிறது.
தனக்கு எச்1-பி விசா இருப்பதால், மேலும் 60 நாட்கள் அமெரிக்காவில் இருக்க அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
மெட்டா கடந்த மாதம் சுமார் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பித்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust