”தினமும் குளிக்காதீங்க” - 10 நாட்களுக்கு ஒருமுறை குளிக்கும் வினோத பெண் - என்ன காரணம்?

தினமும் குளிப்பதனால் நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படுத்துகிறது என்று மருத்துவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஆரோக்கியமாக இருக்கத் தினமும் குளிக்க தேவையில்லை என்று ஒரு பெண் கூறுகிறார்.
Bathing
BathingTwitter
Published on

மனிதர்களாகிய நாம் பல்வேறு பழக்கங்களுக்கு அடிமையாக வாழ்ந்து வருகின்றோம். அவற்றில் சிலவை கேட்கும் போதே, அசெளகரியமாக இருக்கும். இருந்த போதிலும் லாஜிக்கே இல்லாத காரணங்களை வைத்துக் கொண்டு சிலர் அதனைப் பின்பற்றி வருவார்கள்.

அந்தவகையில் டிக்டாக்கர் ஒருவர் தான் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குளிப்பதாக அந்த வீடியோ தெரிவித்துள்ளார். ஆம் சரியாகத் தான் படித்தீர்கள்,

Aydan Jane என்ற 23 வயதான பெண், இவ்வாறு 10 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பதை நன்றாக உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.

Bathing
பல ஆண்டுகளாக சிறுநீரைக் குடித்து உயிர் வாழும் மனிதர் - காரணம் என்ன?

அதற்காக அவர் சொல்லும் காரணங்கள் தான் இணையவாசிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பொதுவாக தினமும் குளிப்பதனால், தோல் பராமரிக்கப்படுகிறது, குளியல் தசைகளைத் தளர்த்துவது மட்டுமல்லாமல், பாக்டீரியாவைக் கொன்று ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புச் சக்தியையும் மேம்படுத்துகிறது என்று மருத்துவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், ஆரோக்கியமாக இருக்க தினமும் குளிக்கத் தேவையில்லை என்று ஜேன் கூறுகிறார்.

Bathing
தாய்லாந்து விநோதம்: இவரது சிறுநீர் நோய்களை குணமாக்குமென மக்கள் நம்புகின்றனர் - யார் இவர்?
Bathing
BathingPexels

இது குறித்துக் கூறும் அவர்,

நீர் ஒரு விலைமதிப்பற்ற வளம் என்பதால், குறைவாகப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்குச் சிறந்தது என்கிறார்.

ஒருவேளை அடிக்கடி தலைமுடியைக் கழுவினால், இன்னும் அழகாகச் சுருண்டதாக இருக்கும். ஆனால், நீங்கள் அழகாக உணர அடிக்கடி குளிக்க வேண்டியதில்லை என்கிறார்.

இணையவாசி ஒருவர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், ஒரு வாரம் குளிக்காவிட்டாலும் துர்நாற்றம் வீசுவதில்லை என்றும் கூறினார்.மேலும் மாதவிடாய் காலத்திலும் அவரின் இந்த பழக்கம் மாறாது என்றார்.

அவர் பதிவிட்ட வீடியோ கிளிப் தற்போது 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகி வருகிறது.

Bathing
குளியல் வைத்தியம் : நாம் செய்ய வேண்டிய 7 குளியல் முறைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com