உலக பால் தினம் கடைப்பிடிப்பது ஏன்? தரவுகள் சொல்வதென்ன?
உலக பால் தினம் கடைப்பிடிப்பது ஏன்? தரவுகள் சொல்வதென்ன?Twitter

உலக பால் தினம் கடைப்பிடிப்பது ஏன்? தரவுகள் சொல்வதென்ன?

பால் மற்றும் அதன் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி உலக பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Published on

பால் மற்றும் பால் சார்ந்த உணவு பொருட்கள் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாதவையாக இருக்கிறது.

காலை உணவான தோசை, ரொட்டி போன்றவற்றில் தடவப்படும் வெண்ணெய் முதல், மக்கள் தினமும் குடிக்கும் பால் வரை அனைத்தும் முக்கியமானவை!

ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் குடிப்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

2022 ஆம் ஆண்டில், இந்தியா 85 மில்லியன் மெட்ரிக் டன் பாலை உட்கொண்டுள்ளது. இது உலகளவில் உட்கொண்ட அதிக அளவு பால் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 23.8 மில்லியன் மெட்ரிக் டன் மற்றும் அமெரிக்கா 20.975 மில்லியன் மெட்ரிக் டன் பால் உட்கொண்டிருக்கிறது.

இந்த தரவுகள் நம் அன்றாட வாழ்வின் அத்தியாவசியமாக இருக்கும் பாலின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

பால் மற்றும் அதன் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி உலக பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக பால் தின வரலாறு

2001 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஜூன் 1 ஆம் தேதி உலக பால் தினத்தை நிறுவியது. இது உலகளாவிய உணவாக பாலின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காகவும், பால் துறை மற்றும் அதன் தொடர்ச்சியான முயற்சிகளைக் கொண்டாடுவதற்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக பால் தினத்தை கொண்டாடும் தேதியாக ஜூன் 1 ஐ தேர்வு செய்ததற்குக் காரணம், பல நாடுகள் ஏற்கனவே இந்த ஆண்டின் இந்த நேரத்தில் தங்கள் தேசிய பால் தினத்தை கொண்டாடி வருகின்றன. ஆரம்பத்தில், மே மாதத்தின் பிற்பகுதியில் சில தேதிகள் கொண்டாட்டத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. இறுதியாக, ஜூன் 1 ஐ தேர்வு செய்து கடைப்பிடித்து வருகின்றனர்.

உலக பால் தினம் கடைப்பிடிப்பது ஏன்? தரவுகள் சொல்வதென்ன?
பால் தினமும் குடிப்பது நல்லதா? கெட்டதா?

உலக பால் தினத்தின் முக்கியத்துவம்

உலக பால் தினம், பாலின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கும், நல்ல ஆரோக்கியமான உணவின் மீது அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பை வழங்குகிறது.

உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) தரவுகளின்படி, ஒரு பில்லியனுக்கும் அதிகமான வாழ்வாதாரங்கள் பால் துறையால் பராமரிக்கப்படுகின்றன. உலகளவில் ஆறு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பால் பயன்படுத்துகின்றனர்.

உலக பால் தினம் கடைப்பிடிப்பது ஏன்? தரவுகள் சொல்வதென்ன?
Karni Mata Temple : எலி குடித்த பால் தான் பிரசாதமா? எலி கோவில் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com