கின்னஸ் சாதனை படைத்த நாய் - என்ன காரணம் தெரியுமா?

உலகின் மிக அதிக வயதுடைய நாயாக புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது பெப்பில்ஸ் என்கிற நாய் ஒன்று. இதற்கு முன் ஏப்ரல் மாதத்தில் உலகின் மிக வயதான நாய் என்று கூறப்பட்டு வந்த 21 வயது டோபி கீத் என்னும் நாய்யை விட ஒரு வருடம் அதிகம் உயிர் வாழ்ந்துள்ளது பெப்பில்ஸ்.
Pebbles
PebblesTwitter
Published on

நம் அனைவருக்குமே செல்ல பிராணிகள் மீது அதீத காதல் தான். அதிலும் நாய் என்றால் எல்லோருக்கும் தனி பாசம். வீட்டில் ஒரு உறுப்பினராகவே அதைப் பாவித்து, இன்றைய டிரெண்டில், அவற்றிற்கு வளைகாப்பு நடத்தும் அளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டன.

இப்போது ஒரு படி ஏறி, வித விதமான விஷயங்களில் நாய்க்குட்டிகள் கின்னஸ் சாதனை படைக்க, அதை கொண்டாடுகிறார்கள் நாய் வளர்ப்பவர்கள். அந்த வகையில் மிக வயதான நாய்க்கான சாதனையை, தெற்கு கேரொலினாவில் ஒரு நாய் படைத்துள்ளது.

சராசரியாக ஒரு நாயின் ஆயுட்காலம் 10 முதல் 18 வருடங்கள் தான். ஆனால் இந்த கின்னச் சாதனையாளரின் வயது எவ்வளவு தெரியுமா?

Pebbles
PebblesTwitter

அமெரிக்காவின் தெற்கு கேரொலினாவில் வாழும் தம்பதி பாபி-ஜூலி க்ரெகரியின் செல்ல பிராணியான பெப்பில்ஸுக்கு வயது இப்போது 22.

உலகின் மிக அதிக வயதான, உயிர்வாழும் நாய் எனும் சாதனையைப் படைத்துள்ளது பெப்பில்ஸ். இது டாய் ஃபாக்ஸ் டெர்ரியர் (Toy Fox Terrier) வகை நாய்.

இந்த நாயின் உரிமையாளர்கள் தொலைக்காட்சியில் ஒரு முறை டோபி கீத் என்னும் நாய் உலகின் மிக வயதான நாய்க்கான கின்னஸ் சாதனை படைத்துள்ளதைக் கண்டுள்ளனர். 21 வயதாகும் டோபி கீத், சிவாவா ( Chihuahua) வகையைச் சேர்ந்த நாய் குட்டியாகும். 2001 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பிறந்த டோபிக்கு இப்போது வயது 21.

இதைப் பார்த்த பாபி-ஜூலி, தங்களது நாய்க்குட்டி இன்னும் ஓராண்டு முன்பே பிறந்துவிட்டதை அடுத்து, கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளனர். பெப்பில்ஸ் மார்ச் 28, 2000 ஆம் ஆண்டு பிறந்துள்ளது. உலகின் மிக வயதான நாய் என்ற சான்றிதழை இதற்கு வழங்கியுள்ளனர்.

Toby Keith
Toby KeithTwitter

பாபி மற்றும் ஜூலி தங்களுக்காக வளர்ப்பு நாய் வேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கும்போது, பாபி எங்குப் போனாலும் பின் தொடர்ந்து வந்துள்ளது பெப்பில்ஸ். அதன் பின்னர், பெப்பில்ஸையே தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளனர் இந்த தம்பதி.

பெப்பில்ஸுடன் ராக்கி என்னும் நாய்க்குட்டியையும் இவர்கள் வளர்த்துள்ளனர். இவை இரண்டுக்கும் பிறந்த குழந்தைகள் மொத்தம் 24. ராக்கி 17 வயது இருக்கும்போது உயிரிழந்துவிட்டதாக பாபி தெரிவித்தார்.

மற்ற நாய்க்குட்டிகளைப் போல் பெப்பில்ஸ் பொம்மைகளுஃப்டன் விளையாடாதாம். கம்பளிக்கு அடியில் சென்று, அமைதியாகப் படுத்துக்கொள்வது தான் பெப்பில்ஸின் மிக விருப்பமான பொழுதுபோக்கு.

Pebbles
நாய் வளர்ப்பு : நாம் அறிய வேண்டிய சில விஷயங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com