Youtube-ன் முதல் வீடியோ - நெட்டிசன்களை நாஸ்டால்ஜியாவில் ஆழ்த்திய பதிவு

2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 தேதி முதன் முதலில் 19 விநாடிகள் நீளம் உள்ள ஒரு வீடியோ யூடியூபில் பதிவேற்றப்பட்டது. சான் டீகோ விலங்கியல் பூங்காவில் கரீம் என்பவர் யானைகளுக்கு முன் நின்று பேசும் வீடியோ தான் அது.
Youtube-ன் முதல் வீடியோ
Youtube-ன் முதல் வீடியோNewsSense/ Youtube
Published on

யூடியூபின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 17 வருடங்களுக்கு முன் முதன்முதலாகப் பதிவேற்றம் செய்த வீடியோவை யூடியூபில் பகிர, அதை பார்த்த இணையவாசிகள் நாஸ்டால்ஜியாவில் மூழ்கியுள்ளனர்.

காரணம், எதை நினைத்து யூடியூப் துவங்கப்பட்டதோ தெரியாது. ஆனால் இன்று யூடியூப் என்பது ஒரு இன்றியமையாத வி லாக்கிங் தளம். கூகுளுக்கு பிறகு யூட்யூப் தான் மிக அதிகமாக பார்வையிடப்படும் தளம்

Youtube-ன் முதல் வீடியோ
Youtube: ஹேக் செய்யப்பட்ட வண்டர்பார் சேனல்; நீக்கப்பட்ட ரவுடி பேபி பாடல் - நடந்தது என்ன?
Youtube
Youtube Pexels

2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 தேதி தான் யூடியூப் முதலில் நிறுவப்பட்டது. அதில் பதிவேற்றப்பட்ட இந்த முதல் காணொலி மொத்தம் 19 விநாடிகள் நீளம் உள்ள ஒரு வீடியோ . சான் டீகோ விலங்கியல் பூங்காவில் ஜாவெத் கரீம் என்பவர் யானைகளுக்கு முன் நின்று பேசும் வீடியோ தான் அது.

கரீம் அதில் "நாம் இப்போது யானைகளுடன் இருக்கிறோம். இவற்றுக்கு மிகவும் பெரிய பெரிய தந்தங்கள் இருக்கிறது. இதை தவிர யானைகளை பற்றி கூற எதுவும் இல்லை" என பேசியிருப்பார்.

இந்த காணொலியை, தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த யூடியூப் நிறுவனம், "if you think about it, it all started with a Short" என்ற கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார்.

மேலும் அந்த காணொலியின் மேல், " இது தான் முதன் முதலில் யூடியூப் பக்கத்தில் பகிர்ந்த முதல் வீடியோ என்று சொன்னால் நீங்கள் எங்களை நம்புவீர்களா?" என்ற தலைப்பும் இடம் பெற்றிருந்தது.


எந்த இலக்கை நோக்கி யூடியூப் துவங்கப்பட்டதென்பது ஒரு புறம். ஆனால், இன்றைய தேதியில் ஒரு இன்றியமையாத வி லாக்கிங் சைட் ஆக யூடியூப் திகழ்கிறது. திரைப்படங்கள், பாடல்கள், டுட்டோரியல்கள், Prank Videos என யூடியூப் தளம், இன்டெர்நெட்டின் வளர்ச்சியாலும் அனைவருக்கும் கைக்கெட்டும் ஒரு முன்னேற்றக் கருவியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் கூகுளுக்கு பிறகு, அதிகம் பார்வையிடப்படும் தளமாகவும் யூட்யூப் திகழ்கிறது.

Youtube-ன் முதல் வீடியோ
38 Youtube சேனல்களை முடக்கிய மத்திய அரசு - காரணம் என்ன?

இந்த இன்ஸ்டாகிராம் பதிவை ரீ ஷேர் செய்த இணையவாசிகள் பலரும் யூடியூப் எப்படி அனைவரது வாழ்கையையும் மாற்றியமைத்தது என்று நெகிழ்ச்சியுறப் பகிர்ந்துவருகிறார்கள். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கரீமின் சேனலில் பதிவேற்றப்பட்ட ஒரே வீடியோ இதுதான்.


தற்போது அந்த வீடியோவிற்கு 235 மில்லியன் வியூக்கள் வந்துள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com