வறண்ட நதி, வெளியே தெரிந்த 3000 ஆண்டு பழமையான நகரம் - ஓர் ஆச்சர்ய வரலாறு

வறட்சியின் காரணமாக டைக்ரிஸ் ஆற்றில் ஒரு பகுதி வற்றிய பிறகு, அங்கு இருந்த ஒரு பண்டைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அணை நிரம்புவதற்கு முன் அந்நகரத்தை தோண்டி எடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Mittani Empire
Mittani EmpireTwitter
Published on

டைக்ரிஸ் ஆற்றின் ஒரு குறிப்பிட்ட பகுதி வறண்ட பிறகு, அங்கு ஒரு பண்டையகால குடியேற்றம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நகரம் வெண்கலக் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அணை மீண்டும் நிரம்புவதற்கு முன்பு நகரத்தைத் தோண்டி ஆய்வு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

City excavation
City excavationTwitter

குர்திஸ்தான் பகுதியில் உள்ள கெமுனே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த பண்டைய ஈராக் நகரம், சுமார் 3,400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள். கிமு 1550 முதல் கிமு 1350 வரை மிட்டானி பேரரசின் ஆட்சியின் போது இந்த பண்டைய நகரம் ஒரு முக்கிய மையமாக இருந்ததாக ஜெர்மன் மற்றும் குர்திஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Mittani Empire
Mittani EmpireTwitter

ஜெர்மனியில் உள்ள ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், “இந்த நகரம் டைக்ரிஸில் நேரடியாக அமைந்திருந்ததால், மிட்டானி பேரரசின் முக்கிய பகுதியை இணைப்பதில் இது முக்கிய பங்கு வகித்திருக்கலாம். இது இன்றைய வடகிழக்கு சிரியாவிலும், பேரரசின் கிழக்குப் பகுதியிலும் அமைந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

City excavation
City excavationTwitter

நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அகழாய்விற்கான கால நெருக்கடி அதிகரித்தது. பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பெருகிவரும் நீர்மட்டத்தால் முக்கியமான தளத்திற்கு மேலும் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க, அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட கட்டிடங்கள் முழுவதுமாக இறுக்கமான பிளாஸ்டிக் தாள்களால் மூடப்பட்டு, ஜல்லிக்கற்களால் மூடப்பட்டுள்ளன.

கெர்டா ஹென்கெல் அறக்கட்டளை இதற்கு நிதியளித்திருக்கிறது. தற்போது அந்த இடம் மறுபடியும் நீரால் சூழப்பட்டிருக்கிறது.

Mittani Empire
ஹாபிட் : மனித குல மூதாதையர்கள் இன்னும் இந்தோனேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com