வித்தியாசமான, சாதாரண கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்குப் புரியாத வண்ணம் ஒரு ஓவியம் அமைந்திருந்தால், அதன் மதிப்பு எப்போதும் கூடும்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் தன்னுடைய கலைப்படைப்பு ஒன்றிற்கு ரூ 4.9 லட்சம் என விலையை நிர்ணயம் செய்துள்ளார். இது மக்களை வியப்படையச் செய்துள்ளது
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யு கிரிஃபின் என்ற ஓவியர் தான் உருவாக்கிய "Pickle" என்ற ஓவியத்திற்கு தான் இந்த 4.9 லட்சம்! இதை நியூஸ்ய்லாந்தின் ஆக்லாந்தில் (Auckland) உள்ள மைக்கேல் லெட் கலைக்கூடத்தில் விற்பனைக்கு அறிவித்திருந்தார்.
இதன் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட, நெட்டிசன்கள் அந்த ஓவியத்தின் பின் இருக்கும் புத்திசாலித்தனத்தைப் பாராட்டி வருகின்றனர். அவருடைய ஓவியமும் மற்றும் அதன் விலை சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அது அப்படி என்ன ஓவியம்?
McDonald's ல் விற்கப்படும் cheese burger இடையே இருக்கும் ஒரு வித ஊறுகாய். மக்கள் அதைச் சுவரின் மீது, சக நண்பர்கள் மீது வீசி வேடிக்கை செய்யும் வீடியோ இணையத்தில் பல உள்ளன.
அதே போன்று இந்த ஓவியரும் அந்த ஊறுகாயை மைக்கேல் லெட் கலைக்கூடத்தின் மேற்கூரையில் வீசி, அதை ஒரு ஓவியம் என்று அறிவித்து, அதற்கு 4.9 லட்சம் என்று விலையும் நிர்ணயம் செய்துள்ளார்.
இதனை அந்த கலைக்கூடம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அந்த ஓவியரின் கிரியேட்டிவிடி மக்களை கவர, மேத்யுவிற்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. ஒரு பயனர், "இதையே நான் சிறுவயதில் செய்தபோது என்னை மெக் டொனால்டிலிருந்து வெளியேற்றினார்கள்...இன்று இது ஒரு ஓவியம்" என பதிவிட்டிருந்தார். ஆனால் இன்னொரு தரப்பு, இதனை ஒரு கலையின் கொலை என்கின்றனர். இது பணத்தை விரயம் செய்யும் செயல் என்றும் விமர்சனம் கூறி வருகின்றனர்.
இந்த புதிய வகை 'ஓவியம்' தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust