டிஜிட்டல் மாந்திரீகம்: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களுடன் பேச முடியுமா?

இறந்தவர்களின் எழுத்துகள், உரையாடல்கள், புகைப்படங்கள், அவர்கள் உருவாக்கிய கலைப் படைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்களுடனான பிணைப்பை நீட்டிக்க முடியும். ரோமான்சம் என்ற மலையாள படத்தில் இறந்த பேயுடன் பேசும் காட்சி உங்கள் நினைவுக்கு வரலாம்.
டிஜிட்டல் மாந்திரீகம்: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களுடன் பேச முடியுமா?
டிஜிட்டல் மாந்திரீகம்: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களுடன் பேச முடியுமா?Twitter

எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மனிதர்கள் வெல்ல முடியாத ஒன்று மரணம். யார்? எப்போது? எப்படி மரணிப்பர் என்பதைக் கூட கணிக்க முடியாது. ஆனால் ஒருவரது மரணத்துக்கு வேறொரு கோணத்தை அளிக்கிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

ஜெனரேரிவ் ஏஐ அல்லது உருவாக்கும் திறன் கொண்ட ஏஐ, மனித கற்பனையை தாண்டி செயல்படக் கூடியதாக உள்ளது. இதை ஒரு தரப்பினர் மிகவும் ஆபத்தானதாக கருதினாலும், சிலர் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஆதரவளிக்கின்றனர்.

ஏஐ இப்போது புதிதாக பெற்றுள்ள அம்சம் என்னவென்றால், இறந்த ஒருவர் டிஜிட்டல் தளங்களில் விட்டுச்செல்லும் தடயங்களை வைத்து அவருடன் நாம் பேச முடியுமாம்.

இறந்தவர்களின் எழுத்துகள், புகைப்படங்கள், அவர்கள் உருவாக்கிய கலைப் படைப்புகள் ஆகியவற்றைக் கொண்டு அவர்களுடனான பிணைப்பை நீட்டிக்க முடியும்.

சமீபத்தில் வந்த ரோமான்சம் என்ற மலையாள படத்தில் இறந்த பேயுடன் பேசும் காட்சி உங்கள் நினைவுக்கு வரலாம். இதனால் இது டிஜிட்டல் மாந்திரீகம் என அழைக்கப்படுகிறது.

நாம் டாலி போன்ற ஏஐ படம் வரையும்போது இந்த படத்தை வான்கோ ஸ்டைலில் வரைந்துகொடு என்போமே, அதன் நீட்சிதான் இந்த டெக்னாலிஜி.

இறந்தவர்களை டிஜிட்டலில் புதுப்பிப்பதென்பது 2010களிலே விவாதத்தைக் கிளப்பியது. மைக்கெல் ஜாக்சன், புரூஸ் லீ போன்ற நடிகர்களை டீப் ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறுஉருவாக்கம் செய்தது விவாதிக்கப்பட்டது.

டிஜிட்டல் மாந்திரீகம்: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களுடன் பேச முடியுமா?
எந்திரன் : மனிதகுல விரோதியா AI, அதை உருவாக்கியவர்களே அஞ்சுவது ஏன்?

2022ம் ஆண்டு ஒரு இளைஞர் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்துடன் இறந்த தனது காதலியின் முன்னால் உரையாடல்கள் மற்றும் இமெயில்களைப் பயன்படுத்தி அவருடன் தொடர்ந்து சேட் செய்தது கவனத்தை ஈர்த்தது.

அன்புக்குரிய ஒருவரின் இழப்பு என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத வலியைத் தரக்கூடியது. இந்த வேதனையில் இருப்பவர்களுக்கு ஆறுதல்தர இறந்தவர்களை டிஜிட்டலில் மறுஉருவாக்கம் ஸ்டார்ட்டப்புகள் சில தொடங்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் மாந்திரீகம்: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களுடன் பேச முடியுமா?
மனித வேலைகளை கைப்பற்றும் AI : அதிக ரிஸ்க் இருக்கும் 4 வேலைகள் - ஆய்வு சொல்வதென்ன?

இது பலருக்கு அதிர்ச்சியைத் தருவதாக இருக்கிறது. மனித வாழ்வுக்கான நெறிமுறைக் கோடை இந்த தொழில்டநுட்பங்கள் கடப்பதாக கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். பலரும் இது மனித உணர்வுகளுக்கான மதிப்பை குறைக்கும் என அஞ்சுகின்றனர்.

ஆனால் இந்த டெக்னாலஜி இறந்த ஒருவரின் உருவப்படத்தை அல்லது வீடியோவை நாம் வைத்திருப்பது போன்றதுதான் என ஆதரவாளர்கள் வாதாடுகின்றனர்.

டிஜிட்டல் மாந்திரீகம்: AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்தவர்களுடன் பேச முடியுமா?
நாம் அணியும் தங்கம் விண்வெளியில் இருந்து வந்ததா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com