பூனையா? நாயா? நெட்டிசன்களை குழம்ப வைத்த செல்லபிராணி

ஒரு சிலருக்கு நாய் பிடிக்கும். ஒரு சிலருக்கு பூனை. இரண்டையும் பிடித்தவர்கள் சற்று குறைவு தான். அப்படிப்பட்டவர்களுக்கு, இந்த புதிய வகை நாய் பிடித்தமானதாய் இருக்கலாம்.
Dui
DuiTwitter
Published on

பார்ப்பதற்கு நீ இவரை போல இருக்கிறாய் என்று நம்மை பார்த்து பலர் சொல்லுவார்கள். நாமும் பலரை பார்த்து இதை சொல்லுவோம். மனிதர்களில் இந்த சாயல் ஒருமைப்பாடுகள், குழப்பங்கள் வருவது இயல்பு தான். ஆனால், பார்ப்பதற்கு பூனையை போல் இருக்கும் நாய்யை பார்த்ததுண்டா?


வியட்நாமில் ஹனோய் என்ற இடத்தில் ஒருவரது வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்று பார்ப்பதற்கு பூனை போல தோற்றமளிக்கிறது. இதன் புகைப்படத்தை உரிமையாளர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். பலரும் இதை பார்த்து இது நாயா அல்லது பூனையா என்று குழம்பியுள்ளனர்.

Dui
DuiInstagram

இந்த நாயின் பெயர் துயி. இதன் உரிமையாளர்கள் சொல்வது என்னவென்றால் இது இரண்டு அரிய வகை இன நாய்களின் கலவையாம். பூர்வீக இனமான ஹ்மோங் மற்றும் டிங்கோ என்ற வகைகளின் கலவை தான் துயி. இந்த டிங்கோ இனத்தின் நாய்களுக்குக் கால்கள் அளவில் சிறியதாக இருக்கும்.

துயியின் முகத்தை பார்த்தால் தான் இதை நாய் என்று நம்பலாம். மற்றபடி இதன் பருமனான உடல்வாகும், கூர்மையான காதுகளையும் பார்க்கும்போது இது ஒரு பூனையை போல தோற்றமளிக்கிறது.

சிலர் மரபணு மாற்றத்தால் இந்த நாயின் தோற்றம் இப்படி மாறியிருக்கலாம் என்று கூறுகின்றனர். துயியை அதன் உரிமையாளர்கள் வியட்நாமில் ஒரு மலைப்பிரதேசத்தில் இருந்து தான் எடுத்துவந்துள்ளனர்.


ஒரு சிலருக்கு நாய் பிடிக்கும். ஒரு சிலருக்கு பூனை. இரண்டையும் பிடித்தவர்கள் சற்று குறைவு தான். அப்படிப்பட்டவர்களுக்கு, இந்த புதிய வகை நாய் பிடித்தமானதாய் இருக்கலாம்.

Dui
வீட்டைக் கொளுத்திய நாய்: அதிர்ச்சியில் இணையவாசிகள் |வைரலாகும் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com