சாக்லேட் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? சிறுவர் முதல் பெரியவர் வரை சாக்லேட்களுக்கு அடிமை தான். ஒவ்வொரு சாக்லேட்டுக்கும் ஒரு சுவை இருக்கும். நாம் வழக்கமாக சாப்பிடும் மிட்டாய்கள் அல்லாமல், உலகளவில் ஒரு சில சாக்லேட்கள் மிக பிரபலமாக இருக்கின்றன...அவற்றைக் குறித்து இங்கு காணலாம்
1986ல் அறிமுகமானது கேலக்ஸி சாக்லேட். இது ஃபிரெஷான பால் மற்றும் டார்க் சாக்லேட் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை தவிர கேலக்ஸி சாக்லேட்களில் பழங்களின் ஃபிளேவர்களும் சேர்க்கப்படுவதனால், மிஸ் செய்யக் கூடாத சாக்லேட்களில் இதுவும் ஒன்று.
முதன் முதலாக இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது இந்த மார்ஸ் சாக்லேட். பார் வடிவத்தில் இருக்கும் இதில் நோகட், கேரமல், பால் ஆகியவை சேர்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக மார்ஸ் சாக்லேட் பாரின் கவர் அதே கருப்பு நிறத்தில் தான் இருக்கிறது
இங்கிலாந்தின் மற்றொரு பிரபலமான சாக்லேட் ஆன க்ரீன் அண்ட் பிளாக், இதன் தனித்துவமான சுவைக்காகவே ஃபேமஸ். இதன் டார்க் சாக்லேட்டை தயாரிக்க பிரத்யேகமாக ட்ரினிடாரியோ எனப்படும் கோகோ பீன்களை பயன்படுத்துகின்றனர்
பெல்ஜியம் சாக்லேட் மேக்கர்களின் சாக்லேட் ஆன கய்லியன் Sea Shell வடிவங்களுக்காக பிரபலம். ஒவ்வொரு சாக்லேட்டிற்கு உள்ளேயும், வித விதமான ஃபிளேவர்களில் ஃபில்லிங் நிறப்பப்பட்டிருக்கும்
சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சாக்லேட் பிராண்ட் மில்கா. பாலினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சாக்லேட், பல சுவைகளில் கிடைக்கிறது. இதன் சாக்லேட் கவரில் இருக்கும் பர்பிள் நிற மாடு மற்றும் அதன் கழுத்தில் தொங்கும் மணி மிகவும் பிரபலம்.
நெஸ்லேவின் கிட்கேட், மில்கி பார் ஆகிய சாக்லேட்கள் பிரபலம். நெஸ்லேவில் இவற்றை தவிர குக்கீகள், சிப்ஸ்களும் ஃபேமஸ்
மாண்டலேஸ் இன்டர்னேஷனலுக்கு சொந்தமான கேட்பரி நிறுவனம் இரண்டாவது பெரிய கன்ஃபெக்ஷனரி பிராண்ட் ஆகும். கேட்பரியின் பல தரப்பட்ட சாக்லேட்களில் டைரி மில்க் மிகவும் ஃபேமஸ்
2000ம் ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மான்டெசுமா சாக்லேட்கள் உலகின் காஸ்ட்லி சாக்லேட் பிராண்டுகளில் ஒன்று. இயந்திரங்கள் அல்லாமல், முற்றிலும் கைகளால் தயாரிக்கப்படும் இந்த சாக்லேட்கள், இதன் தனித்துவமான வெரைட்டி மற்றும் பேக்கேஜிங்கிற்காக பிரபலம்
பெரும்பாலும் திருமண விழாக்கள், பார்ட்டிகளில் இந்த வகை சாக்லேட்களை நாம் பார்க்க முடியும். மிகவும் மென்மையான, இனிப்பான வைட் மற்றும் டார்க் சாக்லேட்கள், fruit ஃபிளேவர்கள் கிடைக்கும்
ஹெர்ஷீஸ் குழந்தைகள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் சாக்லேட்களில் ஒன்று. ஹெர்ஷீஸ் கிஸ்சஸ், ஆல்மண்ட் ஜாய் ஆகியவை இவற்றில் சிறந்த வகைகள்.
பார்ப்பதற்கும் சரி, சுவையிலும் சரி டாப்லேரோன் தனித்துவமானது. சுவிட்சர்லாந்தின் டாப் சாக்லேட் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று டாப்லெரோன்
உருண்டையான வடிவம், அங்கங்கு தென்படும் நட்ஸ், சாக்லேட்டிற்குள் ஹேசல் நட் என மிகவும் ரிச்சான சாக்லேட் இந்த Ferrero Rocher. இத்தாலியின் பிரபலமான Ferrero SpAவின் சாக்லேட்கள் இவை.
லிண்ட்:
1845ல் தொடங்கப்பட்ட இந்த சாக்லேட் பிராண்டில் Truffle மற்றும் பார் சாக்லேட்கள் ஃபேமஸ்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust