சைக்கிளில் இருந்து சரிந்த கொரில்லா - வைரலான ரியாக்‌ஷன் | Video

ஒரு கொரில்லா சைக்கிள் ஓட்டுவதைப் பாத்திருக்கீங்களா? இந்த வீடியோவில் பாக்க முடியும். அதை விடக் காமடியாக அதுகொடுக்கும் ரியாக்‌ஷன் இருக்கிறதே…
கொரில்லா
கொரில்லாTwitter
Published on

டார்சான் போன்ற படங்களில் பேசும் குரங்குகளைப் பார்க்க முடியும். சில கார்டூன்களில் கொரில்லாக்கள் சைக்கிள் ஓட்டுவதை என்ன ராக்கெட் ஓட்டுவதையே பாக்கலாம். டோரா புஜ்ஜியில் வரும் குரங்குக்கு இல்லாத திறமைகளே இல்லை. ஆனால் நிஜத்தில்?

சில நாட்களுக்கு முன் கொரில்லா ஒன்று ஸ்மார்ட் போனில் விளையாடும் வீடியோ வைரலானது. ஜூவில் தன்னுடன் விளையாடிய நபரின் காலை பிடித்து இழுப்பது, கையில் இருப்பதைப் பிடுங்கிக்கொண்டு ஓடுவது எனக் குசும்பு செய்வதில் கோயம்புத்தூர் காரர்களை ஓவர் டேக் செய்யக் கொரில்லாக்களால் தான் முடியும். அப்படி ஒரு கொரில்லாவின் வீடியோவை தான் பகிர்ந்திருக்கிறார் சம்ராட் கௌடா எனும் வனத்துறை அதிகாரி.

அந்த வீடியோவில் கொரில்லா ஒன்று ஆனந்தமாகச் சைக்கிளை ஓட்டி வருகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் பேலன்ஸ் வழுக்கி சரிந்து விழுந்தது. இதனால் டென்சனான கொரில்லா சைக்கிளைத் தூக்கி வீசிவிட்டது. கொரில்லாவின் இந்த செயல் காண்பவர்களைக் கலகலவென சிரிக்க வைக்கிறது.

கொரில்லா
ரூ.12 லட்சம் செலவு செய்து நாயை போல மாறிய மனிதன் - வைரல் வீடியோ
கொரில்லா
கரடியின் சாணத்தில் தயாரிக்கப்படும் டீ - இவ்வளவு Demand ஆ ?

இந்த வீடியோவுக்கு “ஸ்டுபிட் சைக்கிள்” என தலைப்பிட்டுப் பதிவிட்டுள்ளார் அந்த ஐஎஃப்எஸ் அதிகாரி. இதுவரை 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்திருக்கின்றனர். “குரங்கு யாரையோ இம்பிரஸ் செய்ய முயற்சி செய்திருக்கிறது” என கமன்ட் செய்து வருகின்றனர்.

கொரில்லா
கருப்பு ஜாக்கெட், புல்லட்டில் என்ட்ரி - அண்ணாமலையின் அரபி டீசர் வைரல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com