6 வயது மகனுடன் ஒப்பந்தம் செய்த தந்தை - என்ன நடந்தது தெரியுமா?

ஒப்பந்தத்தில் சிறுவனின் தினசரி செய்ய வேண்டிய வேலைக்கான அட்டவணையை விரிவாகக் கூறப்பட்டு இருந்தது - காலையில் எழுந்தது முதல் விளையாட்டு நேரம் வரை. மேலும், பால் குடிப்பதும் அதில் இருந்தது.
6 வயது மகனுடன் ஒப்பந்தம் செய்த தந்தை - என்ன நடந்தது தெரியுமா?
6 வயது மகனுடன் ஒப்பந்தம் செய்த தந்தை - என்ன நடந்தது தெரியுமா?NewsSense

ஒரு ஆறு வயது சிறுவன் சமீபத்தில் தனது தந்தையுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ‘சிறுவன் தனது வேலைகளை நேரத்துக்கு சரியாக செய்வேன் என ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது’ வைரலாகி வருகிறது.

ட்விட்டர் பயன்படுத்தும் @Batla_G என்பவர். தனது ஆறு வயது மகன் அபிர் கையால் எழுதப்பட்ட ஒப்பந்தத்தின் படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

ஒப்பந்தத்தில் சிறுவனின் தினசரி செய்ய வேண்டிய வேலைக்கான அட்டவணையை விரிவாகக் கூறப்பட்டு இருந்தது - காலையில் எழுந்தது முதல் விளையாட்டு நேரம் வரை. மேலும், பால் குடிப்பதும் அதில் இருந்தது.

அலாரம் ஒலித்த பிறகும், சிறுவன் 10 நிமிடம் தாமதமாக எழுந்திருக்கும் நேரத்தை இன்னும் கூடுதலாகக் கேட்பான். சாப்பாடு, விளையாடுவது முதல் பால் குடிப்பது, வீட்டுப்பாடம் செய்வது என அனைத்திற்கும் தாமதம்தான். அதனால்தான், தந்தை இந்த மாதிரி ஒரு ஒப்பந்தத்தைத் திட்டமிட்டுள்ளார்.

சிறுவன் தனது அன்றாடப் பணிகளைச் சரியாகச் செய்து முடித்தால், அவனுடைய அப்பா அவனுக்குப் பணத்தை வெகுமதியாகக் கொடுப்பாராம்.

"அழாமல் இருக்க வேண்டும்; கூச்சலிடவோ, முணுமுணுக்கவோ" செய்யக் கூடாது. இதைச் சிறுவன் தன் நாள் முழுவதும் கடைப்பிடித்தால் ரூ.10 தருவதாக அப்பா ஒப்புக்கொண்டுள்ளார்.

ஒரு வாரம் முழுவதும் அழாமல், கூச்சலிடாமல், சண்டை போடாமல் இருந்தால் அந்தப் பையனுக்கு 100 ரூபாய் கிடைக்கும்.

மற்றொரு ட்வீட்டில், அப்பா விளக்கியிருக்கிறார், "பள்ளி நேரத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மதிய உணவு நேரம் சேர்க்கப்பட்டுள்ளது. பால் குடிக்கும் நேரம் டிவி பார்த்துக்கொண்டே குடிக்க இருப்பதால் 20 நிமிடம் சேர்க்கப்பட்டுள்ளது. காலை உணவு, மதிய உணவு, பால் மற்றும் இரவு உணவு டிவியை பார்த்துக்கொண்டேதானாம்… காலையில் தூக்கத்தில் இருந்து எழுவதற்கு, 10 நிமிடங்கள் கூடுதலாகத் தேவைப்பட்டால், தனது தந்தையிடம் அச்சிறுவன் காலையில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமாம்.”

முன்பு நிறையப் பட்டியல்களைச் சொல்லி முயற்சித்துப் பார்த்தேன். எதுவும் வேலை செய்யவில்லை. அதுதான் இந்தப் புதிய முயற்சி எனத் தந்தை சொல்கிறார். முன்பு அவன் நல்ல பையனாக இல்லாமல் அழுது அடம் பிடித்ததால் இப்போது புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தந்தை சொல்கிறார்.

இந்தத் தந்தை - மகன் ஒப்பந்தத்திற்கு நெட்டிசன்கள் எவ்வாறு பதிலளித்தனர் என்பதை இங்கே பார்க்கலாம்:

6 வயதிலே எனது டைம் டேபிளை நான் சரியாகப் பின்பற்றிப் பணம் சம்பாதிக்க முடியும் என்று எனக்கு அப்போது தெரியாமல் போயிற்றே…

21 வயது பையனுக்கு ஃபோன் மற்றும் ட்விட்டர் பயன்பாட்டை நிர்வகிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் பரிந்துரைகள் தேவை. பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

எதுவும் செய்ய வேண்டாம்… சும்மா உட்கார்ந்து எதுவும் செய்யாமல் இருக்கவும்... அதுதான் ஒரு நாளின் முக்கியமான விஷயம்.

சொல்வதற்கு வருந்துகிறேன், ஆனால், உங்கள் 6 வயது மகனுக்கு எதிர்காலத்தில் மிகுந்த கவலைகள், சிக்கல்கள் வரும்

நல்ல முயற்சிதான்… ஆனால் ஒரு வாரம்கூட நீடிக்காது, வார இறுதியில் இவை அனைத்தும் பூஜ்யமாகும். ஒன்னுமே இல்லாமல் போகும். குறும்புத்தனம்/விளையாட்டு நேரத்துடன் உள்ள உங்கள் மகனுடன் நீங்கள் புதிய ஒப்பந்தத்தைப் போட வேண்டியிருக்கும்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி…

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com