விசித்திர விமானங்கள் : இந்த 10 விமானங்கள் எதற்கு பயன்படுகிறது தெரியுமா? - ஒரு அடடா தகவல்

விமானத்தின் வேகமும் அமைப்பும் பிரமிப்புமிக்கது தான். ஆனால் மனிதர்களுக்கு எதுதான் போதுமானதாக இருந்திருக்கிறது? போருக்காகவும், சந்தைக்காகவும், திறனை அதிகரிக்கவும் விமானத்தை இன்னும் பல வகைகளில் மாற்றியமைப்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அப்படி வித்தியாசமான முறையில் உருவான விமானங்கள் இதோ
Northrop Tacit Blue Airplan
Northrop Tacit Blue AirplanTwitter
Published on

விமானங்களைப் பார்த்து வியக்காத மனிதர் இங்கில்லை. பலமுறை விமான பயணத்தில் ஈடுபடுபவர்கள் ஆரம்பத்தில் விமானத்தைப் பார்த்து மெய்சிலிர்த்து நின்றிருப்பார்கள். "பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்" என பாடிவிட்டாலும் எந்த பறவையும் தராத ஆச்சரியத்தை வழங்குகிறது விமானம் எனும் ராட்சத இரும்புப் பறவை.

1903ம் ஆண்டு ரைட் சகோதரர்களால் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று உலகின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக விமான போக்குவரத்து இருக்கிறது. உலகின் போக்கை மாற்றியதில் விமானத்தின் பங்கு அளப்பரியது. நாடு விட்டு நாடு செல்வதற்கே கப்பலில் வாரக்கணக்காகிறது. ஆனால் விமானத்தில் சில மணிநேரங்களில் கண்டம் விட்டு கண்டம் தாண்டிவிட முடிகிறது.

விமானத்தின் வேகமும் அமைப்பும் ஈடு இணையற்றது தான். எனினும் மனிதர்களுக்கு எதுதான் போதுமானதாக இருந்திருக்கிறது? போருக்காகவும் சந்தைக்காகவும் திறனுக்காகவும் விமானத்தை இன்னும் பல வகைகளில் மாற்றியமைப்பது குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சோதனைகளின் போதும், புதிய முயற்சிகளுக்காகவும் உருவாக்கப்பட்ட வித்தியாசமான விமானங்களைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

The Spruce Goose Airplane - ஸ்ப்ரூஸ் கூஸ் விமானம்

The Spruce Goose Airplane
The Spruce Goose AirplaneTwitter

இந்த பெயருக்கு நேர்த்தியான அன்னம் என்பது பொருள். ஹூஜெஸ் (Hughes) ஏர் ஃப்ர்ஸ் எனும் நிறுவனம் இந்த விமானத்தை உருவாக்கியது.

இதன் நிஜப் பெயர் Hughes H-4 Hercules. இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட இந்த விமானம் அப்போது அலுமினியம் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காததனால் மரத்தால் உருவாக்கப்பட்டது.

இது வரை உருவாக்கப்பட்ட பறக்கும் வாகனங்களிலேயே இது தான் பெரியது.

இதனை உருவாக்க தாமதமானதால் இது போரில் பயன்படுத்தப்படவில்லை.

தண்ணீரில் பறக்கக் கூடிய இதனை பறக்கும் கப்பல் என்றும் கூறலாம்.

இரண்டு 30-டன் M4 ஷெர்மன் டான்குகள் உட்பட இதனால் 68,000 கிலோவரை எடையை சுமக்க முடியும். 700 வீரர்கள் வரை இதில் வைத்துக் கொண்டு செல்ல முடியும்.

1947ம் ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே இது பறக்கவைக்கப்பட்டது.

இப்போது ஓரிகானின் மெக்மின்வில்லில் உள்ள எவர்கிரீன் ஏவியேஷன் மியூசியத்தில் உள்ளது.

The Pregnant Guppy Airplane - கர்ப்பிணி குப்பி மீன் விமானம்

The Pregnant Guppy Airplane
The Pregnant Guppy AirplaneTwitter

நீரில் நிமிர்ந்து நீந்தும் குப்பி மீன் போல இருப்பதாலும் அளவில் குண்டாக இருப்பதாலும் இந்த விமானம் இந்தப் பெயரைப் பெற்றது. இந்த ரக விமானம் இது வரை ஒன்றே ஒன்று தான் உருவாக்கப்பட்டது.

1962 முதல் 1977 வரை 15 ஆண்டுகள் மட்டுமே இது பறந்தது. இதுவும் அளவில் மிகப் பெரிய விமானம்.

அகலமான உடல் கொண்ட சரக்கு விமானம். நாசாவின் அப்பலோ செயற்கைக் கோள் திட்டத்தின் போது இது பயன்படுத்தப்பட்டது.

Aero Spacelines என்ற நிறுவனத்தால் இது உருவாக்கப்பட்டது. இதனால் 63,000 கிலோ எடையை சுமக்க முடிந்தது. அதிகபட்சமாக மணிக்கு 541 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.

பிற்காலத்தில் பல நவீன விமானங்கள் இதனை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டன.

Northrop Tacit Blue Airplane - நார்த்ரோப் டாசிட் ப்ளூ விமானம்

Northrop Tacit Blue Airplan
Northrop Tacit Blue AirplanTwitter

சாதரணமாக விமானங்கள் அனைத்தும் வட்ட வடிவில் தான் இருக்கும். ஆனால் நார்த்ரோப் டாசிட் ப்ளூ விமானம் செவ்வக வடிவமானது.

1983ம் ஆண்டு அமெரிக்க விமானப்படையால் இந்த விமானம் உருவாக்கப்பட்டது.

இதுவரை உருவாக்கப்பட்ட விமானங்களில் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட விமானங்களில் இதுவும் ஒன்று.

நார்த்ரோப் டாசிட் ப்ளூ விமானம் ஒன்றே ஒன்று தான் உருவாக்கப்பட்டது. ரேடாரில் தெரியாத மறைந்து செல்லக் கூடிய ஒரு விமானமாக அமெரிக்க ராணுவம் இதனை உருவாக்கியது.

இதற்கு பல பட்டபெயர்கள் இருந்ததாம். ஏலியன்களின் பள்ளி பேருந்து மற்றும் திமிங்கலம் என இது அழைக்கப்பட்டது.

இது 50 அடி நீளமானது. 13607 கிலோ எடை கொண்டது. 466.71 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது,

தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Kalinin K-7 Airplane - கலினின் கே-7 விமானம்

Kalinin K-7 Airplane
Kalinin K-7 AirplaneTwitter

பார்ப்பதற்கு கலினின் கே-7 ஒரு பீரங்கியைப் போல தான் இருக்கும். இதற்கு ரஷ்ய பறக்கும் கோட்டை என்ற பெயரும் உண்டு.

1930 ஆண்டு சோவியத் யூனியனால் இது உருவாக்கப்பட்டது.

170 அடி நீளமான இது மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது.

இதன் அளவு மிகப் பெரியதாக இருந்ததால் வெற்றிகரமாக பறக்கவில்லை. ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் பறந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதனை உருவாக்குவதும் சவாலாக இருந்ததால் இவ்விமானம் முழுவதுமாக உருவாக்கபடவில்லை. 1935ம் ஆண்டு இந்த திட்டம் கைவிடப்பட்டது.

The Flying Pancake Airplane - பறக்கும் பான்கேக் விமானம்

The Flying Pancake Airplane -
The Flying Pancake Airplane -Twitter

இந்த பான்கேக் விமானம் பார்ப்பதற்கு ராட்சத திருக்கை மீன் போன்று காட்சியளிக்கும்.

Vought XF5U airplane என்பது இதன் அதிகாரப்பூர்வமான பெயர்.

இதனை அமெரிக்க ராணுவம் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தியது.

இதன் வேகம் மணிக்கு 885 கிலோமீட்டர். 8518 கிலோ எடையுடையது.

இதில் ஒரே ஒரு விமானி மட்டும் தான் அமர முடியும். 453.5 கிலோ எடையத் தாங்கும்.

இதில் 6 வெடி குண்டுகள், 50 இயந்திர துப்பாக்கிகள் அல்லது நான்கு 20-mmம் பீரங்கிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல முடியும்.

பல சிறப்புகளைக் கொண்ட இந்த விமானத்தில் வைபிரேஷன் பிரச்னை இருந்தது.

The Dreamlifter Airplane - ட்ரீம்லிஃப்டர் விமானம்

The Dreamlifter Airplane
The Dreamlifter Airplane Pixabay

அதிகாரப்பூர்வமாக போயிங் 747 பெரிய சரக்கு சரக்கு விமானம் என அழைக்கலாம்.

இது அகலமான உடலமைப்பைக் கொண்டது. Boeing 747-400 விமானத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இது உருவாக்கப்பட்டது.

இந்த மாதிரி விமானம் மொத்தம் 4 தான் உருவாக்கப்பட்டது. அனைத்துமே தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கிறது.

இதன் நீளம் 235 அடி. இறக்கைகள் 211 அடி நீளம் கொண்டது.

The Super Guppy Airplane - சூப்பர் கப்பி விமானம்

The Super Guppy Airplane
The Super Guppy AirplaneNASA

அமெரிக்காவின் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் தான் இதனையும் உருவாக்கியது. மிகப் பெரிய அகலமான உடலமைப்பைக் கொண்டது இந்த விமானம்.

5 மட்டுமே இந்த வகையில் உருவாக்கப்பட்டது. அவை தற்போதும் பயன்பாட்டில் உள்ளன.

77110 கிலோ எடையை சுமக்கக் கூடிய இது, மணிக்கு 466 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.

ஏலியன் போன்ற முகத்தைக் கொண்டுள்ள இந்த விமானம் அப்பலோ செயற்கைக் கோள் திட்டத்துக்காகவே தயாரிக்கப்பட்டது.

The Airbus Beluga Airplane - ஏர்பஸ் பெலுகா விமானம்

The Airbus Beluga Airplane
The Airbus Beluga AirplaneYoutube

ஏர்பஸ் ஏ 300-600 எஸ்டி என்பது இதன் பெயர். 1994ம் ஆண்டு இது முதன் முதலாக உருவாக்கப்பட்டது.

இதன் வடிவத்திலும் அளவிலும் பெலுகா திமிங்கலத்தை ஒத்திருக்கும்.

விமான பாங்களை கொண்டு செல்லும் விமானமாக இது ஐரோப்பா முழவதும் பறக்கிறது.

இதன் உயரம் 56 அடி. நீளம் 184 அடி.

உலகிலேயே அதிக எடையை தூக்ககூடிய விமானங்களில் இதுவும் ஒன்று.

The Horten Ho 229 Airplane - ஹார்டன் ஹோ 229 விமானம்

The Horten Ho 229 Airplane
The Horten Ho 229 Airplane Youtube

இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் ஒரு ஜெர்மன் போர் / குண்டுவீச்சு விமானமாக இது உருவாக்கப்பட்டது.

ரேடாரில் சிக்காத படி வித்தியாசமாக இது உருவாக்கப்பட்டது.

என்ன தான் போர் விமானமாக உருவாக்கப்பட்டாலும் இது போரில் ஈடுபடுத்தப்படவே இல்லை.

மணிக்கு 965 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்ககூடிய இது, ஒரு நிமிடத்தில் 4,300 அடி உயரத்திற்கு செல்லக் கூடியது.

The Boeing X-48 Airplane - போயிங் எக்ஸ்-48 விமானம்

The Boeing X-48 Airplane
The Boeing X-48 AirplaneNASA

அமெரிக்காவின் ஆள் இல்லா விமானமாக இது உருவாகி வருகிறது.

கலப்பு இறக்கை - உடல் கொண்ட விமானங்களின் சாத்தியங்களை ஆராய்வதற்காக இது உருவாக்கப்படுகிறது.

இதன் மொத்த எடை 226 கிலோ மட்டுமே. 217 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது.

2007 ஆண்டு முதல் இதனை நாசா சோதனை செய்து வருகிறது.

இது வரை நடைபெற்ற சோதனைகளில் இது நம்பகத் தன்மை வாய்ந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Northrop Tacit Blue Airplan
காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com