Disha Patani: 10 Super Sizzlers of the Bollywood Actor

Keerthanaa R

பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் திஷா படானி

தெலுங்கில் லோஃபர் படம் மூலம் தன் திரை பயணத்தை தொடங்கிய திஷா படானி, எம் எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற படத்தின் மூலம் பிரபலமானார்

எம் எஸ் தோனியின் பயோபிக்கில், தோனியின் முன்னாள் காதலி, பிரியங்காவாக திஷா நடித்திருந்தார்.

எம் எஸ் தோனியில் ஒரு சாலை விபத்தில் திஷா இறந்துவிடுவார். இந்த படம் வெளிவந்தவுடன், இவரது பிரியங்கா கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

2017ல் குங் ஃபூ யோகா என்ற சீன திரைப்படத்தில் ஜாக்கி சான் உடன் திஷா நடித்திருந்தார்

குங் ஃபூ யோகா படத்தை தொடர்ந்து, பாகி 2, பாரத், மலங்க் போன்ற திரைப்படங்களில் திஷா நடித்துள்ளார்

திஷாவின் தந்தை ஜகதீஷ் சிங் படானி ஒரு காவல் துறை அதிகாரி. மற்றும் இவரது தாயார் சுகாதாரத்துறை ஆய்வாளர்.

ஏக் வில்லன் ரிடர்ன்ஸ், யோத்தா மற்றும் ஏக்தா கப்பூரின் அடுத்த படத்திலும் திஷா படானி கதநாயகியாக நடிக்கிறார்

பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரும் திஷா படானிக்கு இன்ஸ்டாகிராமிலும், ட்விட்டரில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்

திஷா, பான்ட்ஸ் ஃபெமினா மிஸ் இந்தியா இந்தோர் 2013ல் டைட்டில் வென்றது குறிப்பிடத்தக்கது