விக்ரம் : டிரண்டாகும் Rolex - கமல் சூர்யாவுக்கு பரிசளித்த இந்த வாட்ச்சில் என்ன ஸ்பெஷல்?

இந்நிறுவனமானது நீர்ப்புகாப்பு கடிகாரங்கள்( water proof),கையின் நாடித்துடிப்பைக்கொண்டு வேலை செய்யும் கடிகாரங்கள் போன்ற வித்தியாசமான கடிகாரங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது.
கமல், சூர்யா
கமல், சூர்யாTwitter

விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு நடிகர் கமல்ஹாசன் ரோலெக்ஸ் வாட்ச் பரிசளித்து அசத்தி உள்ளார்.

இதனால் ரோலெக்ஸ் வார்த்தைக்கு மதிப்பு இன்னும் கூடியுள்ளது. ரோலெக்ஸ் என்றால் என்ன என்று கூகுளில் இணையவாசிகள் தேடியுள்ளனர். அதற்கு விடையாக ரோலெக்ஸ் வாட்ச்-யின் புகைப்படங்கள் வந்துள்ளன.

அப்படி அந்த வாட்ச் - யில் என்ன சிறப்பு உள்ளது என்று அனைவரும் அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர். ரோலக்ஸ் வாட்ச் குறித்த 10 உண்மைகள் இதோ!

Rolex
RolexTwitter

ரோலக்ஸ் வாட்ச் ( Rolex)

உலகில் மிக பிரபலமான & புகழ்பெற்ற ஆடம்பர கடிகார நிறுவன அடையாளங்களில் ஒன்றாக ரோலக்ஸ் திகழ்கிறது.

ஜெனீவாவை தலமையகமாகக் கொண்ட இந்த நிறுவனம் ஒரு நாளைக்கு 2,000 க்கும் அதிகமான கடிகாரங்களை தயாரிக்கிறது.

இந்நிறுவனமானது நீர்ப்புகாப்பு கடிகாரங்கள்( water proof),கையின் நாடித்துடிப்பைக்கொண்டு வேலை செய்யும் கடிகாரங்கள் போன்ற வித்தியாசமான கடிகாரங்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகிறது.

Rolex
RolexTwitter

ரோலக்ஸ் வாட்ச் சிறப்பு

  • ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் அனைத்தும் கையால் செய்யப்பட்டவை (handmade)

  • ஒரு ரோலக்ஸ் கடிகாரத்தை உருவாக்க சுமார் ஒரு வருடம் ஆகும் என்று கூறப்படுகிறது.

  • ஒவ்வொரு கடிகாரமும் சுவிட்சர்லாந்தில் மிகவும் சிரமப்பட்டு கையால் தயாரிக்கப்படுகிறது.

  • ரோலக்ஸ் வாட்ச் தயாரிப்புக்குப் பின் அதன் தர உறுதி செய்வது தான் மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுகிறது.

  • ஒவ்வொரு ரோலக்ஸும் ஆலையை விட்டு வெளியேறும் முன் அழுத்தம் சோதனை (pressure test) செய்யப்படுகிறது.

கமல், சூர்யா
பீஸ்ட் படத்தில் விஜய் குறிப்பிடும் ரஃபேல் விமானம் குறித்த 10 தகவல்கள்
Rolex
RolexTwitter
  • நீர்ப்புகாப்பு கடிகாரங்களும் சோதனை செய்யப்படுகிறது.

  • ரோலக்ஸ் உலகின் மிக விலையுயர்ந்த, துருப்பிடிக்காத ஸ்டீலைப் பயன்படுத்துகிறது, இது 904L என்றும் அழைக்கப்படுகிறது.

  • மற்ற வாட்ச் பிராண்டுகள் துருப்பிடிக்காத எஃகு தரத்தை 316L பயன்படுத்துகின்றன.

  • இதுவரை விற்கப்பட்ட ரோலக்ஸ் வாட்ச்சுகளில் மிகவும் விலையுர்ந்த கடிகாரம் $17.75 மில்லியனுக்கு விற்கப்பட்டது.

  • ரோலக்ஸ் என்ற வார்த்தைக்கு உண்மையில் என்ன அர்த்தம் என்று யாருக்கும் தெரியாது. வாட்ச்மேக்கர்கள் இந்த பெயர் பிரெஞ்சு வார்த்தையான horlogerie exquise என்பதிலிருந்து வந்தது என்று கருதுகின்றனர்.

கமல், சூர்யா
விக்ரம் : லோகேஷ் கனகராஜுக்கு கமல் பரிசளித்த Lexus கார் குறித்த 10 தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com