மாளிகை, பிரைவேட் ஜெட், ஹெலிகாப்டர் - அதானியிடம் இருக்கும் விலை உயர்ந்த சொத்துக்கள் எவை?

இதனால் அதானியின் நிலை இன்னும் மோசமாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதானியிடம் இருக்கும் விலை உயர்ந்த சொத்துக்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இவற்றை அவர் இழக்க நேரிடுமா?
மாளிகை, பிரைவேட் ஜெட், ஹெலிகாப்டர் - அதானியிடம் இருக்கும் விலை உயர்ந்த சொத்துக்கள் எவை?
மாளிகை, பிரைவேட் ஜெட், ஹெலிகாப்டர் - அதானியிடம் இருக்கும் விலை உயர்ந்த சொத்துக்கள் எவை?Twitter

ஹிண்டர்பெர்க் நிறுவனம் மோசடிகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அதானி நிறுவனம் பல கோடிகளை இழந்துள்ளது.

அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், எல்ஐசி என முதலீட்டு நிறுவனங்களிடம் பல்லாயிரம் கோடிகள் கடன் பெற்றுள்ளார் அதானி.

அதே நேரத்தில் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்த பங்களாதேஷ் தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தெரிவித்திருக்கிறது.

ஏற்கெனவே அதானி பவர் இயங்கிவரும் ஆஸ்திரேலியாவில் அவருக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனால் அதானியின் நிலை இன்னும் மோசமாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதானியிடம் இருக்கும் விலை உயர்ந்த சொத்துக்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆடம்பர மாளிகை

டெல்லியில் உள்ள லுட்யென்ஸில் அதானிக்கு சொந்தமான ஆடம்பரமான மாளிகை ஒன்று உள்ளது. 2020ம் ஆண்டு 3.4 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மாளிகையை வாங்கினார் அதானி. இதன் மதிப்பு 400 கோடி!

Private Jet Owned By Adani

அதானி வணிகத்தில் வளர்ந்து வர சில பிரைவேட் ஜெட்களை வாங்கினார். முக்கியமாக பாம்பர்டையர் (Bombardier Global 6500),  பீச் கிராஃப்ட் (Beechcraft) மற்றும் ஹாவ்க் (Hawke) விமானங்கள் அவரிடம் உள்ளன.

Bombardier Global 6500
Bombardier Global 6500

The Embraer Legacy 650

உலகிலேயே மிகவும் சொகுசான பயணத்தைத் தரக்கூடிய The Embraer Legacy 650 விமானமும் அதானி குழுமத்திடம் உள்ளது. இதில் 14 பேர் வரை பயணிக்கலாம்.

மாளிகை, பிரைவேட் ஜெட், ஹெலிகாப்டர் - அதானியிடம் இருக்கும் விலை உயர்ந்த சொத்துக்கள் எவை?
பரிதி அதானி : யார் இவர்? அதானி சர்ச்சையில் இவர் பெயர் அடிப்படுவது ஏன்?

சொகுசு ஹெலிகாப்டர்

சொகுசு விமானங்கள் மட்டுமல்லாது சொகுசு ஹெலிகாப்டர்களையும் வைத்துள்ளார் அதானி. 2011ம் ஆண்டு அதான் AgustaWestland AW139 என்ற ஹெலிகாப்டரை வாங்கினார். இதன் விலை 12 கோடி. இரட்டை எஞ்சின் கொண்ட இதில் 15 பேர் பயன்படுத்தலாம்.

Ferrari Car

எல்லா உலகப் பணக்காரர்களையும் போல அதானியும் விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று  சிகப்பு 2008 Ferrari California இதன் விலை 3.5 கோடி.

மாளிகை, பிரைவேட் ஜெட், ஹெலிகாப்டர் - அதானியிடம் இருக்கும் விலை உயர்ந்த சொத்துக்கள் எவை?
"அதானி ஒரு டைம் பாம்" - அன்றே கணித்த IPS அதிகாரி - யார் இவர்?

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்

அதானியிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் கார் உள்ளது. இதன் விலை 6.5 கோடி எனக் கூறப்படுகிறது. இது அவரிடம் இருக்கும் விலை உயர்ந்த கார்களில் ஒன்று.

BMW series 7 Car

இறுதியாக இந்த பட்டியல் பி.எம்.டபிள்யூ 7வது சீரிஸ் காருடன் முடிவடைகிறது. இது பல லட்சாதிபதிகளின் கனவு கார் என்றே கூறலாம்.

மாளிகை, பிரைவேட் ஜெட், ஹெலிகாப்டர் - அதானியிடம் இருக்கும் விலை உயர்ந்த சொத்துக்கள் எவை?
Adani: கம்பேக் கொடுத்த அம்பானி - ஹிண்டன்பெர்க் அறிக்கையால் பணக்காரார் பட்டியல் மாற்றம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com