ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி சர்ச்சையால், பணக்காரர்கள் பட்டியலில் இருந்து அதானி சரிந்து, மீண்டும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆகியுள்ளார் முகேஷ் அம்பானி
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அறிக்கைபடி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி.
சமீபத்தில் ஹிண்டன்பெர்க் நிறுவனம் வெளியிட்ட ஒரு ஆராய்ச்சி முடிவுகளால், உலகின் மூன்றாவது பணக்காரராகவும், இந்தியாவின் முதல் பணக்காரராகவும் இருந்த அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, பல கோடி மதிப்புள்ள சொத்துகளை இழந்துள்ளார்.
ஹிண்டன்பெர்க் நிறுவனம், தனது அறிக்கையில், அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகள், ஸ்டாக் மேனிபுலேஷன்கள், கணக்கு வழக்குகளில் மோசடி செய்துள்ளதாக தெரிவித்தது. இந்த ஹிண்டன்பெர்க், கார்ப்பரேட் நிறுவனங்கள் சார்ந்த முறைகேடுகளை தடவியல் ரீதியாக ஆராய்ந்து வெளியிடும் ஒரு நிறுவனமாகும்.
இவர்களது வலையில் இதுவரை நிகோலா உள்ளிட்ட 16 நிறுவனங்கள் சிக்கியுள்ளது. அவற்றின் சமீபத்திய சர்ச்சை தான் இந்த அதானி குழுமத்தின் மோசடி குற்றச்சாட்டு.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், உலக பணக்காரர் பட்டியலில் டாப் 10ல் இருந்த அதானி நேற்றைய நிலவரப்படி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 12வது இடத்தில் அம்பானி இருந்தார்
இந்நிலையில், இன்று ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ரியல்டைம் பில்லியனர்ஸ் பட்டியலில் கௌதம் அதானியை பின்னுக்கு தள்ளியுள்ளார் முகேஷ் அம்பானி.
உலகளவிலான பணக்காரர்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் இந்த தரவரிசையில், ஒன்பதாவது இடத்தில் முகேஷ் அம்பானி மற்றும் பத்தாவது இடத்தில் கௌதம் அதானி இருக்கின்றனர்.
இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலிலும் முகேஷ் அம்பானி முதலிடத்திற்கு வந்துள்ளார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust