Twitter : கருத்து சுதந்திரம் முதல் CEO பதவி வரை - சொன்னதைச் செய்தாரா எலான் மஸ்க்?

தான் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இந்திய அரசியல்வாதி போல டிஜிட்டல் உலகில் நடந்துகொண்டிருக்கிறார் எலான் மஸ்க். அது என்னென்ன வாக்குறுதிகள் பார்க்கலாம்.
Twitter : கருத்து சுதந்திரம் முதல் CEO பதவி வரை - சொன்னதைச் செய்தாரா எலான் மஸ்க்?
Twitter : கருத்து சுதந்திரம் முதல் CEO பதவி வரை - சொன்னதைச் செய்தாரா எலான் மஸ்க்?Twitter
Published on

கடந்த ஆண்டு இணையத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது எலான் மஸ்க், ட்விட்டரை கைப்பற்றிய விவகாரம். ட்விட்டரில் பல மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

புளூ டிக்குக்கு பணம் கட்டவேண்டும் என்பதைத் தவிர ட்விட்டரில் புதிதாக எந்த மாற்றமும் தென்படவில்லையே என ட்விட்டர் பயனர்களுக்கு தோன்றலாம்.

உண்மையாகவே எலான் மஸ்க் சொன்ன பல மாற்றங்களை அவர் இதுவரை அமல்படுத்தவில்லை, அல்லது அவரால் முடியவில்லை.

அப்படி அவர் சொல்லி செய்யாத 9 விஷயங்களைப் பார்க்கலாம்.

CEO பதவி

எலான் மஸ்க் கடந்த டிசம்பர் மாதம் ட்விட்டரில் தான் சிஇஒ-வாக இருப்பது குறித்து ஒரு வாக்கெடுப்பு நடத்தினார். அந்த வாக்கெடுப்பில் பயனர்கள் எலான் மஸ்க் சிஇஒ பதவியில் நீடிக்க கூடாது என வாக்களித்தனர்.

ஆனால் இன்றுவரை எலான் மஸ்க் தான் அந்த பதவியில் இருந்துவருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் தனது நாய்க்கு சிஇஒ என டி-சர்ட் அணிவித்து பதிவிட்டிருந்தார்.

மேலும், "ட்விட்டர் சிஇஒ பதவியில் இருக்கும் அளவு முட்டாளான நபர் என்ற நம்பிக்கை யார் மீதும் இல்லை" எனவும் தெரிவித்திருக்கிறார்.

கருத்து சுதந்திரம்

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும்போது அது கருத்து சுதந்திரத்துக்கான தளமாக இருக்கும் எனக் கூறியிருந்தார். ஆனால் அவர் விரும்பாத பதிவுகள் சிலவற்றை நீக்கியிருக்கிறார்.

சில பத்திரிகையாளர்களின் பக்கங்களை கடந்த ஆண்டு தடை செய்திருந்தார். பின்னர் அவர்களின் புரொஃபைல்கள் அனுமதிக்கப்பட்டாலும் சில ட்வீட்கள் நீக்கப்பட வேண்டும் என கட்டாயப்படுத்தினார்.

இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிபிசி வலைத்தளத்தின் பதிவுகள் நீக்கப்பட்டதாக சிஎன்என் தளம் கூறியிருக்கிறது.

அலெக்ஸ் ஜோன்ஸ் மீதான தடை அப்படியே இருக்கிறது மற்றும் விதி மீறல்களுக்காக கன்யே வெஸ்ட்டை நீக்கியுள்ளார்.

வாக்கெடுப்புகள்

சில நாட்களுக்கு முன்னர் பிற சமூக வலைத்தளங்களில் இருந்து அனுப்பப்படும் லின்க்கள் தடை செய்யப்பட்டன. இதற்காக பயனர்கள் பலரும் எலான் மஸ்க்கை திட்டித்தீர்த்தனர்.

அப்போது மன்னிப்புக் கேட்ட எலான் மஸ்க், ட்விட்டரின் முக்கிய முடிவுகள் வாக்கெடுப்புகளின் அடிப்படையில் தான் எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இன்றுவரை பல முக்கிய கொள்கை முடிவுகளை சுயமாகவே எடுத்து வருகிறார் எலான் மஸ்க்.

Twitter : கருத்து சுதந்திரம் முதல் CEO பதவி வரை - சொன்னதைச் செய்தாரா எலான் மஸ்க்?
எலான் மஸ்க் : முன்னாள் ஊழியரிடம் மன்னிப்பு கேட்ட ட்விட்டர் தலைவர் - ஏன் தெரியுமா?

digital town square

"மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு தேவையான முக்கிய விவகாரங்கள் உரையாடப்படும் டிஜிட்டல் டவுன் ஸ்குயராக ட்விட்டர் இருக்கும்" என எலான் மஸ்க் கடந்த ஆண்டு கூறியிருந்தார்.

ஆனால் சமீபத்திய அறிவிப்புகளின் படி பணம் கட்டி புளூ டிக் வாங்காத பயனர்களுக்கு வாக்கெடுப்புகளில் கலந்துகொள்ள கூட உரிமையில்லை எனக் கூறியுள்ளார் எலான் மஸ்க்.

அனைத்து மனிதர்களுக்கு அங்கீகாரம்

ட்விட்டரில் பயனராக இருக்கும் அனைத்து மனிதர்களையும் சரிபார்ப்பதாக எலான் மஸ்க் கூறியிருந்தார். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. மாறாக ஏற்கெனவே புளூடிக் வைத்திருப்பவர்கள் கூட ஏப்ரல் மாதம் பணம் கட்டாவிட்டால் புளூடிக் மறைந்துவிடும் எனக் கூறியுள்ளார். இது முரணாக இல்லையா?

இருந்த போதிலும் ஒரே நபரைப்போல போலி அக்கவுட்கள் ஓபன் செய்தால் நடவடிக்கை எடுப்பது தொடர்கிறது.

Elon Musk
Elon MuskTwitter

ட்விட்டர் அல்காரிதம் ஓபன் சோர்ஸாக மாற்றப்படும்

எந்த ஒரு சமூகவலைத்தளமும் இயங்க அல்காரிதம் முக்கியம். நாம் பார்க்கும் விஷயங்களை முடிவு செய்வதில் அல்காரிதம் முக்கியப்பங்கு வகிக்கிறது.

ட்விட்டரின் அல்காரிதத்தை அனைவரும் பார்க்கும் விதமாக ஓபன் சோர்ஸ் செய்வதாக கடந்த ஆண்டே கூறியிருந்தார் எலான் மஸ்க். ஆனால் அது நடைபெறவில்லை.

Twitter : கருத்து சுதந்திரம் முதல் CEO பதவி வரை - சொன்னதைச் செய்தாரா எலான் மஸ்க்?
Elon Musk : ஒரு நகரத்தை உருவாக்கும் எலான் மஸ்க் - யாருக்காக இது?

உள்ளடக்க அளவீடு கவுன்சில்

ட்விட்டரில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக கண்டண்ட் மாடரேஷன் கவுன்சில் அமைக்கப்படும் என கூறியிருந்தார். இன்றுவரை அதுவும் நடைபெறவில்லை.

shadowbanned

ஒரு பயனரின் பதிவுகள் அதிகம் பேருக்கு செல்லாமல் கட்டுப்படுத்தப்படுவது shadowbanned எனப்படும். கட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கே அது தெரியாது. ஆனால் அதனை அனைவருக்கும் காட்டும்படி அப்டேட் செய்யப்படும் எனக் கூறியிருந்தார். அதுவும் நடக்கவில்லை.

Twitter : கருத்து சுதந்திரம் முதல் CEO பதவி வரை - சொன்னதைச் செய்தாரா எலான் மஸ்க்?
கூகுள்: ஊழியர்களை தொடர்ந்து ரோபாட்களை லே ஆஃப் செய்யும் நிறுவனம் - ஏன்?

மூன்று மாத சம்பளம் வழங்கவில்லை

ட்விட்டர் தான் பல நிறுவனங்களுக்கு முன்னோடியாக முதலில் அதிக பணியாளர்களை வேலை நீக்கம் செய்தது. அப்படி நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் வழங்கப்படுவதாகவும் எலான் மஸ்க் தெரிவிர்த்திருந்தார்.

ஆனால் பணிநீக்கம் செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கழித்தும் ஊழியர்களுக்கு பல ஒப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகளுடன் 1 மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

இப்படி தான் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இந்திய அரசியல்வாதி போல டிஜிட்டல் உலகில் நடந்துகொண்டிருக்கிறார் எலான் மஸ்க்.

Twitter : கருத்து சுதந்திரம் முதல் CEO பதவி வரை - சொன்னதைச் செய்தாரா எலான் மஸ்க்?
எலான் மஸ்க்: சிறு வயதில் மோசமான நெருக்கடிகள் முதல் உலகின் No 1 பணக்காரர் வரை - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com