39 வயதாகும் அஞ்சலி சாவுத் என்ற பெண் விமியோ என்ற வீடியோ தளத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்.
இப்போது கார்பரேட் உலகின் உச்சியில் குறிப்பிடத்தக்க நபராக இருக்கும் அஞ்சலி சாவுத் தொடக்கக் காலத்தில் பல தடைகளையும், தோல்விகளையும் சந்தித்தவர்.
அஞ்சலி மிகவும் திறமையான CEO-வாக திகழ்கிறார். தனது நிறுவனத்தை சிறிய தொழிலாக தொடங்கிய போது 45,986 கோடி IPO-க்களை ஈர்த்து அதன் மதிப்பை உயர்த்தினார்.
இந்த பெரும் வெற்றியைக் குவிக்கும் திறனுடைய நபரான அஞ்சலிக்கு வங்கியில் வேலை செய்வது தான் கனவாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு வங்கியும் அவரை நிராகரித்தன.
தோல்விகளை கடந்து செல்லும் பழக்கம் அஞ்சலிக்கு 14 வயதிலேயேத் தொடங்கிவிட்டது.
புகழ்பெற்ற போர்டிங் ஸ்கூல் ஒன்றில் சேர்க்கப்பட்டவர், முதல் ஆண்டே ஃபெயில் ஆனார். இந்த தோல்விகள் எல்லாம் சேர்ந்து அவருக்கு பிற்காலத்தில் இணையற்ற வெற்றியைப் பெற்றுக்கொடுத்தன.
1983ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிறந்தவர் அஞ்சலி சாவுத்
இவரது பெற்றோர் பஞ்சாபில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஃபைனான்ஸ் மற்றும் மார்கெடிங் படித்தார். பின்னர், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.
2005ம் ஆண்டு முதல் அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வேலை செய்யத் தொடங்கியுள்ளார்.
விமியோ நிறுவனத்தில் 2014ம் ஆண்டு குளோபல் மார்கெட்டிங் தலைவராக இணைந்தார் அஞ்சலி.
இரண்டு ஆண்டுகளில் நிறுவனத்தை உலக அரங்குக்கு அழைத்து வந்த அஞ்சலி, 2017ம் ஆண்டு நிறுவனத்தின் CEO-வாக பதவியேற்றார். அதன் பின்னர் விமியோ பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தனித்துவம் மிக்கத் தாளமாக உருவானது.
வெற்றிகரமான பெண் தொழிலதிபராக அவரது சாதனைகளுக்காக "40 வயதுக்குட்பட்ட 40 பேர்" "100 கிரியேடிவ் தொழிலதிபர்கள்" போன்ற பல விருதுகள் கிடைத்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust