iPhone
iPhoneTwitter

ஆப்பிள் iPhone 13 விட குறைந்த விலையில் வருகிறதா iPhone 14?

இது ஆப்பிள் நிறுவனத்தின் பொதுவான விதிகளிலிருந்து மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. எனினும் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் ஐபோன் 14 சாதாரண மாடல் 13 மாடலைவிட குறைந்த விலையில் கிடைக்கும்.
Published on

ஆப்பிளின் புதிய வரவாக ஐபோன் 14 செப்டம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்த எதிர்பார்ப்பும் ஐபோன் விரும்பிகள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

ஐபோன்களின் தரம், தோற்றம் மற்றும் சிறப்பு அம்சங்களுக்காக பெரிதும் விரும்பப்படுகிறது. ஒவ்வொரு ஐபோன் வெளியீடும் தொழில்நுட்ப ரசிகர்களுக்கு திருவிழாவாக அமைகிறது. இந்த திருவிழாவை இன்னும் உற்சாகமாக்கியிருக்கிறது ஐபோன் 14, ஐபோன்13 விடக் குறைந்த விலையில் வெளியாகிறது என்ற தகவல்!

இது ஆப்பிள் நிறுவனத்தின் பொதுவான விதிகளிலிருந்து மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. எனினும் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் ஐபோன் 14 சாதாரண மாடல் 13 மாடலைவிட குறைந்த விலையில் கிடைக்கும்.

Iphone 14 ஏன் Iphone 13 விட விலை குறைவாக இருக்கிறது?

வெளியாகவிருக்கும் சீரிஸில் iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro, and iPhone 14 Pro Max ஆகிய மாடல்கள் வெளியாக உள்ளன. மார்கெட் இன்டலிஜன்ஸ் நிறுவனமான ட்ரெண்ட் ஃபோர்ஸ் கூறியிருப்பதன் படி, ஐபோன் 14 கிட்டத்தட்ட 60,000 ரூபாய்க்கு கிடைக்கும்.

ஐபோன் 14, 128 ஜிபி வகை போன் 750 டாலர் விலை (59,600 ரூபாய்). இதனுடன் ஒப்பிடுகையில் ஐபோன் 13, 128 ஜிபி வகை 799 டாலர் (63,600 ரூபாய்) தான். ஐபோன் 14, உயர்ந்த வகை 799 டாலர் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஐபோன் 14 சீரிஸில் மினி மாடல் இருக்காது எனக் கூறப்படுகிறது. பொதுவாக மினி மிகக் குறைந்த விலையில் வெளியிடப்படும். இந்த முறை ஐபோன் 14 சாதாரண மாடலே விலைக்குறைந்ததாக இருக்கும்.

iPhone
“இனி மனிதர்களே தேவையில்லை, வருகிறது ரோபோ டாக்சி” - எலன் மஸ்க் அறிவிப்பு

iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max விலை என்ன?

வெளியாகியிருக்கும் தகவல்களின் படி ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் முறையே 1,050 டாலர் (83,500 ரூபாய்) மற்றும் 1,150 டாலர் (91,400) விலையில் விற்பனைக்கும் வரும்.

இந்த தகவல்கள் உண்மையாக இருந்தால் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் விலையானது ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸை விட 50 டாலர் அதிகமாக இருக்கும். எனினும் ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட விலையை விட இது 50 டாலர் குறைவு தான்.

ஐபோன் 14 சீரிஸின் பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வு நாளை நடைபெற இருக்கிறது.

iPhone
4ஜியை விட 10 மடங்கு வேகத்தில் 5ஜி - எந்தெந்த நகரங்களுக்கு முதலில் வருகிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com