2023 - 24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து வருகிறார்.
இந்தியாவின் 100வது குடியரசு தினத்தை கொண்டாட இன்னும் 25 ஆண்டுகளே இருக்கிறது. இந்த 25 ஆண்டுகளை 'அம்ரித் கால்' அதாவது அமிர்த காலம் எனக் குறிப்பிடுகிறார் நிதியமைச்சர்.
அமிர்தகாலத்தின் தொடக்க பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், ரஷ்யா - உக்ரை போர் உள்ளிட்ட சர்வதேச நெருக்கடிகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது.
இந்த பட்ஜெட் எப்படிஅமைந்திருக்கிறது. இதனால் யார் பெறுவார் போன்றவற்றைத் தெரிந்துகொள்ள பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 10 முக்கிய விஷயங்களைப் பார்க்கலாம்.
பான் கார்டு மட்டுமே, டிஜிட்டல் அமைப்புகளில், அனைத்து வணிகம் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பொது அடையாளமாகப் பயன்படுத்தப்படும்
தேசிய டிஜிட்டல் நூலகத்தை அமைக்க இந்திய அரசு முன்மொழிந்திருக்கிறது. இதனால் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளை குழந்தைகள் மற்றும் பதின்பருவ பிள்ளைகள் சரி செய்து கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.
கிராமப்புறங்களில் விவசாயத்துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க agriculture accelerator fund என்கிற பெயரில் ஒரு தனி நிதி தொகுப்பு உருவாக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு புதுமையான முறையில் தீர்வுகள் கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும்.
இந்தியாவில் 5G அலைக்கற்றை சேவையைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் பொறியியல் நிறுவனங்களில் 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்
தனிநபர் வருமான வரி வரம்புகளில் மாற்றம் செய்யப்பட்டு , வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வரி நடைமுறையில் ரூ.7 லட்சம் வரை மொத்த ஆண்டு வருமான இருந்தால் அதற்கு வருமான வரி கிடையாது.
தனிநபர் வருமான வரி வரம்புகளில் மாற்றம்:
ரூ. 0 - 3 லட்சம் வரை வருமான வரி இல்லை
ரூ. 3-5 லட்சம் வரை - 5%
ரூ. 5-9 லட்சம் வரை - 10%
ரூ. 9-12 லட்சம் வரை - 15%
ரூ. 12-15 லட்சம் வரை - 20%
ரூ. 15 லட்சம் மேல் - 30%
ரூ.9 லட்சம் வருமானம் உள்ளவர்கள் முன்பு ரூ.60 ஆயிரம் வரியாகச் செலுத்தினால் இனி ரூ.45 ஆயிரம் மட்டுமே வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
மனிதக் கழிவுகள் மனிதர்களால் அகற்றும் நிலை மாற்றப்பட்டு, நாடு முழுவதும் இயந்திரங்களால் கழிவுகள் அகற்றும் முறை கொண்டுவரப்படும்.
கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணியில் 100% இயந்திரங்களை பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.
பழங்குடியின குழந்தைகளுக்கு 'ஏகலைவா' கல்வித்திட்டம் தொடங்கப்படும். அனைத்து பழங்குடியின மக்களுக்கும் குடிநீர், சுகாதாரமான சுற்றுப்புறம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதற்காக ஏகலைவா பள்ளிகளில் புதிதாக 38,800 ஆசிரியர்கள் ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என அறிவிப்பு.
இளைஞர்கள் எதிர்காலம், திறன் வளர்ப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும். தொழில்துறை தேவையையும் இளைஞர்களையும் திறனையும் ஒருங்கிணைக்க `30 ஸ்கில் இந்தியா மையங்கள்' அமைக்கப்படும். ஏஐ, கோடிங் உள்ளிட்ட புதிய திறன் பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம் அமைப்புசாரா பொருளாதாரத்தில் இருந்து அமைப்பு சார்ந்த பொருளாதாரமாக மாறிக்கொண்டிருப்பதை இ பி எஃப் ஓ உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சுட்டிக்காட்டுகிறது
எம் எஸ் எம் இ தொழில் முனைவோர்கள், பெரு நிறுவனங்கள், ட்ரஸ்ட்டுகள் பயன்படுத்தும் வகையில் ஒரு புதிய டிஜி லாக்கர் நிறுவனம் உருவாக்கப்படும். இணைய வழியில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள், நெறிமுறையாளர்கள், வங்கிகள், மற்ற வர்த்தகம் மற்றும் வணிக நிறுவனங்களோடு தேவையான போது பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள உதவும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust