Chat GPT vs Google Bard: மோதும் AI தொழில்நுட்பம் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

இந்த தொழில்நுட்பத்தை சரியாக வரம்புகளுக்கு உட்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு வாத விவாதங்கள் நடைபெற்று வந்தாலும், இதுவரை தீர்மானமாக என்ன செய்ய வேண்டும் என ஒரு முடிவு எடுக்கப்படவில்லை.
Microsoft CEO Satya Nadella, Open AI CEO Sam Altman and Google CEO Sundar Pichai
Microsoft CEO Satya Nadella, Open AI CEO Sam Altman and Google CEO Sundar PichaiTwitter
Published on

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்கிற தொழில்நுட்பம் இந்த தசாப்தத்தை மெல்ல தன் வசப்படுத்தத் தொடங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் தொடங்கி மாதத்திற்கு சில ஆயிரம் சம்பாதிக்கும் சாமானியர்கள் வரை, பல தரப்பினரும் இந்தத் தொழில்நுட்பத்தை அறிந்தும் அறியாமலும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

உதாரணமாக இன்றைய தேதிக்கு சுகாதாரத்துறை, நிதித்துறை, சில்லறை வணிகம், போக்குவரத்து என பல்வேறு துறையினரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை கையில் எடுத்துள்ளனர்.

அப்படி வெகு சமீபத்தில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த தொழில்நுட்பத் தளம் என்றால் அது சாட் ஜி பி டி தான். சாதாரணமாக ஒருவருக்கு அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் எழுதுவது தொடங்கி, கோடிங் எழுதுவது, பள்ளி கல்லூரிகளில் கொடுக்கப்படும் வீட்டு வேலைகளை செய்து முடிப்பது… என பல்வேறு விஷயங்களுக்கு சாட் ஜி பி டி பயன்படுத்தப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தை சரியாக வரம்புகளுக்கு உட்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என பல்வேறு வாத விவாதங்கள் நடைபெற்று வந்தாலும், இதுவரை தீர்மானமாக என்ன செய்ய வேண்டும் என ஒரு முடிவு எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில், கூகுள் நிறுவனம் பார்ட் ஏ ஐ என்கிற தன்னுடைய புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் தளம் நேரடியாக சாட் ஜி பி டி தளத்திற்கு போட்டியாக அமையலாம் என்று பலரும் ஆருடம் கூறியுள்ளனர்.

Chat GTP vs Google
Chat GTP vs Google

ஜி பி டி எப்படி செயல்படுகிறது?

பல தரப்பட்ட கட்டுரைகள் அல்லது உரையாடல்கள் ஜி பி டிக்கு வழங்கப்படும். அதைப் பயன்படுத்திக் கொண்டு, மொழியின் கட்டமைப்புகளையும், வடிவங்களையும் கற்றுக் கொள்ளும். ஜி பி டி தொழில்நுட்பம் போதுமான அளவுக்கு மொழியைக் குறித்து உணர்ந்து கொண்ட பிறகு, கேட்கும் கேள்விகளைப் பொருத்து, ஜி பி டி சொந்தமாக தன் சொல் வங்கியில் இருந்து பதங்களைப் பயன்படுத்தி பதிலளிக்கத் தொடங்கும்.

Microsoft CEO Satya Nadella, Open AI CEO Sam Altman and Google CEO Sundar Pichai
Chat GPT என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது? ஓர் எளிய விளக்கம்!

ஜி பி டிக்குப் பின்னிருக்கும் அல்காரிதம் என்ன?

ஜி பி டி தொழில்நுட்பம் டிரான்ஸ்ஃபார்மர் என்கிற அல்காரிதத்தைப் பயன்படுத்தி வருகிறது. இந்த அல்காரிதம் நியூரல் நெட்வொர்க்கிங் அடிப்படையில் இயங்குகிறது. இது ஒரு வகையான கணினி ப்ரொகிராம் தான் என்றாலும், அது மனித மூளை வேலை செய்வதை ஒட்டி வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரான்ஸ்ஃபார்மர் அல்காரிதத்தால் தரவுகள், வரி வடிவங்கள் போன்றவைகளை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ள முடியும். அதைப் பயன்படுத்தி மனிதர்கள் பேசுவதைப் போன்ற உரையாடல்களை ஜி பி டி உருவாக்கும்.

சுருக்கமாக ஜி பி டி என்பது ஒரு வகையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம். அதனால் மனிதர்கள் பேசும் மொழியைப் புரிந்து கொண்டு, அதே சொற்களைப் பயன்படுத்தி பதிலளிக்க முடியும்.

AI
AI

அதென்ன பார்ட் ஏ ஐ?

இது ஒரு உரையாடல் நிகழ்த்தக் கூடிய ஏ ஐ தளம், கூகுள் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டது. இத்தளம் LaMDA (Language Model for Dialogue Applications) என்கிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இணையத்தில் உள்ள தரவுகள் & விவரங்களைப் பார்ட் ஏ ஐ பயன்படுத்தி, பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலைச் சொல்லும்.

Microsoft CEO Satya Nadella, Open AI CEO Sam Altman and Google CEO Sundar Pichai
சோழர்கள் முதல் ஜெயமோகன் வரை : AI இவர்கள் குறித்து என்ன நினைக்கிறது தெரியுமா?

இரண்டுக்குமான வித்தியாசங்கள் என்ன?

பார்ட் ஏ ஐ தொழில்நுட்பம் இணையத்தில் உள்ள எல்லா விவரங்களையும் பயன்படுத்தி பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இந்த நொடி வரையான விவரங்களை அலசி ஆராய்ந்து பதில் அளிக்கும். ஆனால் சேட் ஜி பி டி தொழில் நுட்பமோ 2021 ஆம் ஆண்டு வரையான நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை மட்டுமே உள்ளீடாக கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே புதிய விவரங்கள் & மாற்றங்களை சேட் ஜி பி டி தளத்தால் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.

Bard AI
Bard AI

பார்ட் ஏ ஐ தளம், கூகுளின் சர்ச் இன்ஜின்களோடு இணைக்கப்படும் என்பதால், சாட் ஜிபிடியை விட அதிக அளவிலான தரவுகள் கிடைக்கும்.

சேட் ஜி பி டி தளம் சில தவறான விவரங்களை அல்லது தரவுகளை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் கூகுளின் பார்ட் ஏ ஐ மிகத் துல்லியமான தரவுகள் மற்றும் விவரங்களை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஜேம் வெப் தொலைநோக்கி விவகாரத்தில் தவறான விடையளித்திருக்கிறது.

பார்ட் ஏ ஐ மிக கடினமான விவரங்களை கூட, எளிதில் படித்து புரிந்து கொள்ளக்கூடிய உரையாடல் வடிவிலான தரவுகளாக, விவரங்களாக கொடுக்கும். சுருக்கமாக கற்றலையும், அறிவு பகிரலையும் ஊக்கப்படுத்துவதே இதன் நோக்கம். இதில் குழந்தைகள் கற்றுக்கொள்வதும் அடக்கம். ஆனால் சேட் ஜி பி டி தளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் கிடைக்கும்.

Microsoft CEO Satya Nadella, Open AI CEO Sam Altman and Google CEO Sundar Pichai
அதானி: "நான் Chat GTP தொழில்நுட்பத்துக்கு அடிமையாகியிருந்தேன்" AI குறித்து கூறியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com