பல தசாப்தங்களாக அமெரிக்க டாலர்கள் மொத்த உலக வர்த்தகத்தையும் கட்டுப்படுத்தி வருகின்றன. நாடுகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் டாலரில் நடைபெறுவதனால் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலை இருக்கிறது.
இதனை மாற்றுவதற்காக பல நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாடுகளுக்கு இடையிலான பரிவர்த்தனைக்கு வெவ்வேறு நாணயங்களை ஆலோசித்தும் வருகின்றனர்.
முதலாம் உலகப்போருக்கு முன்னர் வரை பவுண்ட் தான் நாடுகளில் ஆதிக்கம் செலுத்திய நாணயமாக இருந்தது. போருக்கு பின்னர் அந்த இடத்தை அமெரிக்க டாலர் பிடித்தது.
டாலரின் ஆதிக்கம் வளரவே, 1944ம் ஆண்டு 44 உலக நாடுகள் பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச நாணய பரிமாற்றத்தில் தங்கத்துக்கு பதிலாக அதன் மதிப்புக்கு ஏற்ற அமெரிக்க டாலரை பயன்படுத்த முடிவு செய்தன.
ஆனால் இந்த ஒப்பந்தம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. 1960களில் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய ஏற்றுமதிகள், அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு போட்டியாக வளர்ந்தன. உலகம் முழுவதும் அதிகமாக டாலர் பரிவர்த்தனை நடந்ததால் டாலருக்கு நிகராக தங்கத்தை ஈடு செய்வது சவாலானதாக இருந்தது.
1971ம் ஆண்டு அமெரிக்க அதிபர் நிக்ஸன் அமெரிக்க டாலர்களை நேரடியாக தங்கமாக மாற்றும் முறையை நிறுத்தினார். அதன் பிறகு இப்போது பின்பற்றப்படும் முறையைக் கடைபிடிக்கத் தொடங்கினர்.
உக்ரைன் போர் நடைபெறுவதனால் அமெரிக்க டாலர் பயன்பாட்டைக் குறைத்து ரஷ்யாவும் சீனாவும் தங்கள் நாட்டு நாணயங்களிலேயே நேரடியாக பரிவர்த்தனையை மேற்கொண்டனர்.
இரண்டு நாடுகளும் யுவான் (சீன நாணயம்) - ரூபிள் (ரஷ்ய நாணயம்) இடையே பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றன.
1967ம் ஆண்டுக்கு பிறகு சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் டாலர் பரிமாற்றத்தை மட்டுப்படுத்த தங்கம் வாங்கி குவித்ததாகக் கூறப்படுகிறது.
ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் தங்கத்தை அடிப்படையாக கிரிப்டோ கரன்சியைப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறன.
சீனா, ரஷ்யா மட்டுமல்லாமல் தென்னமெரிக்க நாடுகளும் டாலருக்கு எதிரான பொருளாதாரத்தை உருவாக்க முயன்றுவருகின்றன.
தென்னமெரிக்காவின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளான பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா தங்கள் நாடுகளுக்கு இடையில் பொதுவான நாணயத்தை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகின்றன.
மேலும் சில ஆசிய நாடுகளும் டாலரை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
கடந்த 48 ஆண்டுகளில் முதன்முறையாக சவுதி அரேபியாவும் அமெரிக்க டாலர் அல்லாத நாணயங்களில் பரிவர்த்தனை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளது.
பல முக்கிய வங்கிகள் தங்களது சொத்துகளை டாலர்களாக வைத்திருக்கின்றன. என்றாலும், எப்போது வேண்டுமானாலும் டாலரின் மவுசு குறைந்து பிற நாணயங்கள் அந்த இடத்தைப் பிடிக்கலாம்.
சர்வதேச வணிகத்தில் டாலருக்கு அடுத்தபடியாக யூரோ அதிகம் பயன்படுத்தப்படும் நாணயமாக இருக்கிறது. ஜப்பானின் யென், பவுண்ட் ஸ்டெர்லிங், சீன நாணயமான ரென்மின்பி, கனடிய டாலர்கள் மற்றும் ஆஸ்திரேலிய டாலர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust