ஜஸ்விந்த்ரே சிங்: அமெரிக்கர்களுக்காக தினசரி 500 டாலர் நஷ்டமடையும் இந்தியர் - யார் இவர் ?

உதவி மனப்பான்மை எல்லாருக்கும் பொதுவான குணமல்ல உண்மையிலேயே அனைவருக்கும் உதவ வேண்டும் என நினைக்கும் ஒருவர் பெரிய மனம் படைத்தவராகத் தான் இருக்க வேண்டும். அப்படியானவர் தான் ஜஸ்விந்த்ரே சிங். இவர் அமெரிக்க மக்களுக்குக் குறைந்த விலையில் பெட்ரோல் கொடுத்து உதவுவதால் தினசரி 500 டாலர் நஷ்டமடைகிறார்.
ஜஸ்விந்த்ரே சிங்
ஜஸ்விந்த்ரே சிங்Twitter
Published on

உலகெங்கிலும் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது. கூடவே பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. உக்ரைன் போருக்கு பிறகு இந்த சிக்கல் இன்னும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு சீக்கியர் தனது கடையில் எரிவாயுவை நஷ்டத்தில் விற்று வருகிறார். இதனால் அவர் சமூக ஊடகங்களில் பெரும் வாழ்த்துகளைப் பெற்று ஹீரோவாக வலம் வருகிறார்.


அமெரிக்காவில் ஜஸ்விந்த்ரே சிங் எனும் அந்த சீக்கியர் தனது கொள்முதல் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பதன் மூலம் மாதம் 500 டாலர் நட்டத்தை எதிர்கொள்கிறார்.

சிங் எரிவாயுவை ஒரு கேலனுக்கு 5.19 டாலருக்கு விற்கிறார். இது அவர் வாங்கும் விலையை விட 47 சென்ட் குறைவு. அவர் தினமும் 3,785 லிட்டர் எரிவாயுவை விற்பனை செய்கிறார். பணவீக்கம் அதிகரித்து வரும் இந்த காலத்தில் இப்படி தன்னலமற்று வியாபாரம் செய்வது என்பது பலராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அதனால்தான் சிங்கின் நடவடிக்கைகள் சமூக ஊடகங்களில் பாராட்டுக்களை குவித்த வண்ணம் உள்ளது.

சரி, அவர் இதை ஏன் செய்கிறார் என்று ஊடகங்கள் அவரிடம் கேட்ட போது, “தற்போது மக்களிடம் பணம் இல்லை. என்னிடம் ஏதாவது இருந்தால் மற்றவருக்கு உதவுங்கள் என்று என் அம்மாவும், அப்பாவும் எங்களுக்கு கற்றுக் கொடுத்தனர்" என்று கூறினார்.

ஜஸ்விந்த்ரே சிங்
கே எஸ் பாராக் : வேலையை இழந்த இந்தியர் ஐக்கிய அரபு அமீரகத்தின் மில்லியனர் ஆன கதை

இந்த இழப்பினால் அவரும் அவர் மனைவியும் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதை அவர்கள் மனமுவந்து செய்கின்றனர். மார்ச் மாதத்தில்மட்டும் அவரது எரிவாயு விற்பனை விலை கொள்முதல் விலையை விட 10 சென்ட் குறைவாக இருந்தது.


இதெல்லாம் ஒரு பெரிய விசயமல்ல என்றும் கடவுள் நமக்கு உதவி செய்வார் என்றும் அவர் கூறினார். பணம் சம்பாதிக்காமல் மக்களுக்கு உதவுவதால் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.

ஜஸ்விந்த்ரே சிங்
ரஷ்ய உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தமிழர்

பொதுவில் சீக்கியர்கள் இப்படி உதவி செய்வது முதல்முறையல்ல. கடந்த காலங்களிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் அவர்கள் கடினமான காலங்களில் உதவி செய்து பணியாற்றியுள்ளனர். சீக்கிய ஆலயங்களில் யார் போனாலும் இலவச உணவு கிடைக்கும். இது உலகெங்கும் உள்ளது.

சிறிது காலத்திற்கு முன்பு இந்த உதவியை நாம் உக்ரைனில் பார்த்தோம். ரஷ்ய படையெடுப்பு நடந்த ஆரம்ப காலத்தில் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள சீக்கியர்களது இந்திய உணவகம் இந்திய மாணவர்களுக்கும் உக்ரைன் நாட்டவர்களுக்கும் தங்குமிடமாக மாறியது. அந்த உணவகத்தின் உரிமையாளர் குறைந்தது 70 பேருக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த உணவகத்தின் பெயர் சாத்தியா. அதன் உரிமையாளர் பெயர் மணீஷ் தேவ். அவர் கூறுகையில் தனது உணவகம் அடித்தளத்தில் அமைந்துள்ளதால் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்கும் இடமாக இருந்தது. அதனால்தான் உக்ரைன் நாட்டவர்களும் அங்கே பாதுகாப்பு கோரி வந்தனர். அவர்களுக்கு தங்குமிடம் அளித்ததோடு அனைவருக்கும் உணவும் அளித்ததாக அவர் கூறினார். இந்த போருக்கு முன்னாலேயே இந்த உணவகம் இந்திய மாணவர்களிடம் பிரபலமான ஒன்றாகும்.

இப்படி உதவி செய்வது என்பது சீக்கிய மதத்திலேயே உள்ள ஒரு கோட்பாடாகும். ஆனாலும் அதை மனதாரச் செய்வதற்கு ஒரு நல்ல மனது வேண்டும். அது சீக்கியர்களுக்கு இயற்கையாகவே இருக்கிறது. அமெரிக்கா சென்றால் நன்கு பணம் சம்பாதிக்கலாம் என்று பலரும் நினைக்கையில் ஜஸ்விந்த்ரே சிங் அமெரிக்கர்களுக்கே உதவி செய்ய நினைக்கிறார். அவரை வாழ்த்துவோம்!

ஜஸ்விந்த்ரே சிங்
கேஜிஎஃப் 2: ரத்தம் சிந்திய கோலார் தமிழர் துயர வரலாறு - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com