Elon Musk : மனித குல வரலாற்றிலேயே அதிக இழப்பை சந்தித்த மனிதர் - 2022 காலை வாரிவிட்டதா?

2022 முழுவதுமே மிகப் பரவலாக பேசப்பட்ட மனிதர், ஆண்டின் இறுதியில் 200 பில்லியன் சொத்தையும் இழந்து உலகின் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தையும் இழந்து நிற்பதைப் பார்க்க வருத்தமாகதான் இருக்கிறது.
Elon Musk : மனித குல வரலாற்றிலேயே அதிக இழப்பை சந்தித்த மனிதர் - 2022 காலை வாரிவிட்டதா?
Elon Musk : மனித குல வரலாற்றிலேயே அதிக இழப்பை சந்தித்த மனிதர் - 2022 காலை வாரிவிட்டதா? Twitter
Published on

2022ம் ஆண்டின் முடிவில் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க். உலக வரலாற்றிலேயே 200 பில்லியன் டாலர்களை இழந்த ஒரே மனிதன் என்ற மோசமான பட்டத்தை இவர் கைப்பற்றியுள்ளார்.

மிக சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் எலான் மஸ்க் இந்த நிலையை அடைந்துள்ளார்.

டிசம்பர் 27ம் தேதியில் கூட அவரது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 11 சதவீதம் சரிந்தது.

இப்போது எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.

பெரிய பணக்காரர் யார்?

இந்த ஆண்டு நவம்பர் மாதம் மஸ்கின் சொத்து மதிப்பு $340 பில்லியனாக இருந்தது தான் அவரது உச்சம்.

அதன் பிறகு பிரஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் மஸ்கை விட பெரிய பணக்காரரானார்.

பெர்னார்ட் லக்சரி குட்ஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.

Elon Musk : மனித குல வரலாற்றிலேயே அதிக இழப்பை சந்தித்த மனிதர் - 2022 காலை வாரிவிட்டதா?
"நான் தற்கொலை செய்துகொண்டால்..." Twitter Space-ல் என்ன பேசினார் எலான் மஸ்க்?

ட்விட்டரின் விளைவா?

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியது உலகம் முழுவதுமே மிகப் பெரிய பேச்சு பொருளாக இருந்து வருகிறது.

44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழித்து ட்விட்டரை வாங்கினார் மஸ்க்.

இதற்காக அவரது டெஸ்லா நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை விற்றார்.

இதனால் டெஸ்லா மூலமாக மஸ்க் ஈட்டு வருமானம் வெகுவாக குறைந்தது.

Elon Musk : மனித குல வரலாற்றிலேயே அதிக இழப்பை சந்தித்த மனிதர் - 2022 காலை வாரிவிட்டதா?
Twitter Accout-ஐ டெலிட் செய்த அம்பர் ஹெர்ட் - Elon Musk தான் காரணமா?

உயர்ந்த வட்டி விகிதங்கள்

எலான் மஸ்க் கடந்த நாட்களில் ட்விட்டரில் தொடர்ந்து அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதாக விமர்சித்ததைப் பார்த்திருக்க முடியும்.

டிசம்பர் 16ம் தேதி ட்விட்டரில் "டெஸ்லா எப்போதையும் விட சிறப்பாக செயல்படுகிறது. நாங்கள் ஃபெடரல் ரிசர்வை கட்டுப்படுத்தவில்லை. அது தான் இங்கு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது." எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மஸ்க் அடைந்த இழப்புகளுக்கு அவரது கடன் தொகை மிக முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Elon Musk : மனித குல வரலாற்றிலேயே அதிக இழப்பை சந்தித்த மனிதர் - 2022 காலை வாரிவிட்டதா?
Elon Musk : நிருபர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்கிய நிறுவனம் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com