Twitter Accout-ஐ டெலிட் செய்த அம்பர் ஹெர்ட் - Elon Musk தான் காரணமா?

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் ஹாலிவுடின் ராணியாக இருந்த அம்பர் ஹெர்ட் இருவரும் 2016ம் ஆண்டு காதலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Twitter Accout-ஐ டெலிட் செய்த அம்பர் ஹெர்ட் - Elon Musk தான் காரணமா?
Twitter Accout-ஐ டெலிட் செய்த அம்பர் ஹெர்ட் - Elon Musk தான் காரணமா? Twitter
Published on

அக்வாமேன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகை அம்பர் ஹெர்ட். இவர் சமீபத்தில் கேப்டன் ஜாக்ஸ்பேரோவாக நடித்த ஜானி டெப் மீதான அவதூரு வழக்கில் உலகம் முழுவதும் பேச்சுபொருளானார்.

அந்த வழக்கில் தோற்றது முதல் அவர் மீது பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இப்போது ஸ்பெயினில் உள்ள ஒரு சிறிய நகரில் தன் மகள் உனாக் பைஜுடன் இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அம்பர் ஹெர்ட் .

வழக்கில் தோல்வியடைந்தது முதல் அம்பர் ஹெர்டை சுற்றி எதுமே சரியாக நடக்கவில்லை. சில படங்கள் கையைவிட்டுச் சென்றன. ஜானி டெப்புக்கு அதிக பணம் (கிட்டத்தட்ட 8 கோடி) கொடுக்க வேண்டியிருப்பதனால் பொருளாதார அளவிலும் அவர் சிறப்பாக இல்லை.

அவர் இப்போது ட்விட்டரை விட்டு விலகியிருப்பதாக தி அம்பர்லா கை என்ற பெயரில் இயங்கி வரும் வெரிஃபைடு ட்விட்டர் கணக்கு தெரிவித்துள்ளது.

அம்பர் ஹெர்ட் ட்விட்டரை விட்டு விலகியதற்கு எலான் மஸ்க் தான் காரணமா என்று ட்விட்டர்வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Twitter Accout-ஐ டெலிட் செய்த அம்பர் ஹெர்ட் - Elon Musk தான் காரணமா?
Elon Musk : எலான் மஸ்க்குடன் இணைத்து வைத்து பேசப்படும் நிகோல் சனஹன் - யார் இவர்?

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் மற்றும் ஹாலிவுடின் ராணியாக இருந்த அம்பர் ஹெர்ட் இருவரும் 2016ம் ஆண்டு காதலித்தனர்.

2017ம் ஆண்டு இவர்களின் உறவு வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

"எலான் மஸ்க் தான் அம்பர் ஹெர்டின் ட்விட்டர் கணக்கை நீக்கியிருப்பார்" என்று ஒரு பயனர் நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

Twitter Accout-ஐ டெலிட் செய்த அம்பர் ஹெர்ட் - Elon Musk தான் காரணமா?
SRM to Twitter : எலான் மஸ்குக்கு துணையாக ஒரு சென்னைவாசி- யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?

"அம்பர் ஹெர்டால் நீல நிற வெரிஃபைட் டிக்கிற்கு மாத சந்தா கொடுக்க முடியாததால் தான் அம்பர் ட்விட்டரை விட்டு போய்விட்டார்" என்று இன்னொருவர் நகைக்கிறார்.

"இது போன்ற நெகடிவிட்டிகள் இங்கு நிறைந்திருப்பதால் தான் அம்பர் நீங்கிவிட்டார்" என்றும் ஒரு பயனர் கூறியுள்ளார்.

Twitter Accout-ஐ டெலிட் செய்த அம்பர் ஹெர்ட் - Elon Musk தான் காரணமா?
ஆம்பர் ஹெர்ட் வழக்கு வெற்றிக்கு பிறகு ஜானி டெப்பின் செல்வாக்கு அதிகரித்ததா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com