எலான் மஸ்க் : வணிக வெற்றியின் ஆறு ரகசியங்கள்

“எங்கேயோ காசு குவியல் குவியலாக உள்ளது போல் நான் நினைக்கவில்லை. டெஸ்லா, மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சோலார்சிட்டி ஆகியவற்றில் என்னிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்குகள் உள்ளன, மேலும் அந்த பங்குகளின் மீது சந்தை மதிப்பு உள்ளது." என்று சாதாரணமாகச் சொன்னார்.
Elon Musk
Elon MuskTwitter

பொதுவில் பழைய பெரிசுகளிடம் ஏதாவது புதிய முயற்சிகளைப் பேசினால் அதெல்லாம் வேலைக்காகாது என்று புறந்தள்ளுவார்கள். சில வருடங்களுக்கு முன்னர் எலோன் மஸ்க், எலக்ட்ரிக் கார் தயாரிக்கப் போகிறேன் என்று சொன்ன போது கூட பாரம்பரிய பெட்ரோல், டீசல் கார் வாகன உற்பத்தியாளர்கள் அதைக் கேலியாகப் பார்த்தார்கள். இதெல்லாம் சாத்தியமில்லை என்றார்கள்.

ஆனால் வரலாறு இன்று அந்த எரிபொருள் வாகன நிறுவனங்களை எலோன் மஸ்க்கின் வணிக உத்தியை நோக்கி ஓடுமாறு செய்திருக்கிறது. எலக்ட்ரி கார் மட்டுமல்ல, விண்வெளி சுற்றுலா, சாட்டிலைட் இணைய இணைப்பு என்று புதுப்புது விசயங்களில் தடம் பதித்து வருகிறார் மஸ்க்.

தற்போது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி எலான் மஸ்க் உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளார்.

அவருக்குச் சொந்தமான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பின் படி அவரது சொத்தின் நிகர மதிப்பு 185 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

இது பணத்தைப் பற்றியது அல்ல

தனது புதிய தொழில் முயற்சிகளை அவர் பணத்தால் அளப்பதில்லை.

2014ல் அவரை பத்திரிகையாளர்கள் நேர்காணல் செய்தபோது அவர் எவ்வளவு பணக்காரர் என்று அவருக்கே தெரியவில்லை என்றார்.

“எங்கேயோ காசு குவியல் குவியலாக உள்ளது போல் நான் நினைக்கவில்லை. டெஸ்லா, மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சோலார்சிட்டி ஆகியவற்றில் என்னிடம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்குகள் உள்ளன, மேலும் அந்த பங்குகளின் மீது சந்தை மதிப்பு உள்ளது." என்று சாதாரணமாகச் சொன்னார்.

செல்வத்தைப் அதிகரிப்பது என்பதற்கு எதிராக அவர் எதுவும் செய்யவில்லை. ஆனால் பணத்தைத் தாண்டி தனது தொழிலை ஒரு கலையாக, நல்ல முறையில் செய்யப்படும் நெறிமுறையாக அவர் கருதுகிறார்.

இந்த அணுகுமுறை நிச்சயமாக வேலை செய்கிறது. 2014 இல் அவருடைய சொத்து மதிப்பு 10 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கலாம்.

அவரது மின்சார கார் நிறுவனமான டெஸ்லா குறிப்பாகச் சிறப்பாக செயல்பட்டது. கடந்த ஆண்டில் பங்குகள் உயர்ந்து அதன் மதிப்பை 700 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகக் கொண்டு சென்றன. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு எலன் மஸ்க் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், பிஎம்டபிள்யு, வோல்க்ஸ்வேகன் மற்றும் பியட் கிரிஸ்லர் (Ford, General Motors, BMW, Volkswagen ,Fiat Chrysler) ஆகிய வாகன உற்பத்தி நிறுவனங்களை விலைக்கே வாங்கலாம்.

இது போக மிச்சமிருக்கும் பணத்தை வைத்துஃபெராரி கார் நிறுவனத்தைக் கூட வாங்க முடியும்.

ஆனால் இந்த ஆண்டு 50 வயதை எட்டிய மஸ்க், தான் ஒரு பணக்காரனாக இறப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. அவர் தனது பணத்தின் பெரும்பகுதி செவ்வாய் கிரகத்தில் ஒரு தளத்தை உருவாக்கச் செலவிடப்படும் என்று கருதுவதாகவும், இந்த திட்டம் தனது முழு செல்வத்தையும் எடுத்துக் கொண்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறினார்.

உண்மையில், பில் கேட்ஸைப் போலவே, வங்கியில் பில்லியன் கணக்கில் பணத்தைப் போட்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தோல்வியின் அடையாளமாக அவர் கருதுவார். ஏனெனில் பில்கேட்ஸ் அந்தப் பணத்தைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று எலோன் மஸ்க் கருதுகிறார்.

Elon Musk
Elon MuskTwitter

உங்கள் உணர்வுகளைத் தொடருங்கள்

வெற்றிக்கான திறவுகோல் என்று எலோன் மஸ்க் நம்புவதற்கு செவ்வாய் அடித்தளம் ஒரு அறிகுறி.

ஸ்பேஸ் எக்ஸ் ஐ எடுத்துக் கொள்ளுங்கள். அமெரிக்க விண்வெளித் திட்டம் ஒரு லட்சியத்தை நோக்கி இல்லாததால் விரக்தியடைந்து தனது நிறுவனத்தை நிறுவியதாக அவர் கூறினார்.

"நாங்கள் பூமிக்கு அப்பால் முன்னேறுவோம், செவ்வாய்க் கிரகத்தில் ஒரு நபரை வைப்போம், சந்திரனில் ஒரு தளத்தை வைத்திருப்போம், உங்களுக்குத் தெரியும், சுற்றுப்பாதையில் அடிக்கடி விமானங்கள் மூலம் செல்வோம்," என்று அவர் கனவுடன் கூறினார்.

அது நடக்காதபோது, ​​அவர் "செவ்வாய் ஒயாசிஸ் மிஷன்" ஐக் கொண்டு வந்தார். இது சிவப்பு கிரகத்திற்கு ஒரு சிறிய பசுமை இல்லத்தை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டது. விண்வெளியில் மக்களை மீண்டும் உற்சாகப்படுத்தவும், நாசாவின் பட்ஜெட்டை அதிகரிக்க அமெரிக்க அரசாங்கத்தை வற்புறுத்தவும் அவரிடம் யோசனை இருந்தது. ஆனாலும் விண்வெளி தொழில்நுட்பம் தேவைப்படுவதை விட மிகவும் விலை உயர்ந்தது.

இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால், எலோன் மஸ்க்கின் கனவு பணம் சம்பாதிப்பதைப் பற்றியது அல்ல, ஆனால் ஒரு நபரைச் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறக்கி வெற்றிகரமாக இருக்கச் செய்வது.

மஸ்க் தன்னை ஒரு முதலீட்டாளராகக் கருதாமல் ஒரு பொறியியலாளராகக் கருதுவதாகக் கூறினார். மேலும் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்ற ஆசைதான் தினசரி காலையில் எழுந்த பிறகு அவரது சிந்தனையை ஆட்கொள்கிறது.

அதனால்தான், உலக அளவிலான தொழில்முனைவோர்கள் உலகளவில் மின்சார வாகனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்த டெஸ்லாவின் அனைத்து காப்புரிமைகளையும் இலவசமாக அளிக்கப் போவதாக அவர் அறிவித்தார். இந்த மனது எந்த முதலாளிக்கு வரும், யோசித்துப் பாருங்கள்!

Elon Musk
Elon MuskTwitter

பெரிய விசயத்தை நிறைவேற்றுவதற்குப் பயப்பட வேண்டாம்


எலோன் மஸ்க்கின் வணிகங்களைப் பற்றிய மிகவும் குறிப்பிடத்தக்க விஷயங்களில் ஒன்று, அந்த தொழில்கள் எவ்வளவு துணிச்சலானவை என்பதுதான்.


கார் துறையில் புரட்சியை ஏற்படுத்தவும், செவ்வாய்க் கிரகத்தில் குடியேற்றவும், வெற்றிட சுரங்கங்களில் அதிவேக ரயில்களை உருவாக்கவும், மனித மூளையில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்கவும் மற்றும் சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொழில்களை மேம்படுத்தவும் அவர் விரும்புகிறார்.

இதைப் புரிந்து கொள்ள இங்கே ஒரு பொதுவான நூல் உள்ளது. அவரது திட்டங்கள் அனைத்தும் 1980 களின் முற்பகுதியில் குழந்தைகளுக்கான பத்திரிகையில் நீங்கள் காணக்கூடிய எதிர்கால கற்பனைகள். ஆனால் இன்றைக்கு அவை எலோன் மஸ்க்கால் சாத்தியப்படக்கூடிய விசயங்கள்.

அவரைப் பொறுத்தவரை பெரும்பாலான நிறுவனங்கள் முற்றிலும் புதியவற்றை கற்பனை செய்யத் துணியாமல், தற்போதுள்ள தயாரிப்புகளில் சிறிய மேம்பாடுகளைச் செய்வதில் கவனம் செலுத்துகின்றன என்று அவர் கூறுகிறார்.

முக்கியமான விஷயங்களைப் பொறுத்த வரை மஸ்க் தனிப்பட்ட முறையில் இரண்டு விஷயங்களில் தனித்து நிற்கிறார்.

முதலில், அவர் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து மாற்றத்தை துரிதப்படுத்த விரும்புகிறார்.

இரண்டாவதாக, செவ்வாய்க் கிரகத்தை காலனித்துவப்படுத்துவதன் மூலமும், "வாழ்க்கையைப் பல கிரகங்களுக்குக் கொண்டு செல்வதன் மூலமும்" மனிதக்குலத்தின் நீண்டகால உயிர்வாழ்வை உறுதிப்படுத்த அவர் விரும்புகிறார்.

Elon Musk
“இனி மனிதர்களே தேவையில்லை, வருகிறது ரோபோ டாக்சி” - எலன் மஸ்க் அறிவிப்பு

ஆபத்துக்களை எடுக்கத் தயாராக இருங்கள்

எலோன் மஸ்க் தனது முயற்சிகளில் அதிக ஆபத்துக்களை எதிர் கொண்டிருக்கிறார்.

2002 வாக்கில், அவர் தனது முதல் இரண்டு முயற்சிகளான ஜிப்2 எனப்படும் இணைய நகர வழிகாட்டி மற்றும் ஆன்லைன் கட்டண நிறுவனமான பேபால் ஆகியவற்றில் தனது பங்குகளை விற்றுவிட்டார். அவர் தனது 30 வயதில் வங்கியில் கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் மட்டுமே வைத்திருந்தார்.

தனது செல்வத்தில் பாதியை வியாபாரத்தில் ஈடுபடுத்தி, மற்ற பாதியை வைத்துக்கொள்வதே தனது திட்டம் என்று அவர் கூறுகிறார்.

விஷயங்கள் அப்படி நடக்கவில்லை. அப்போது தனது வணிக வாழ்க்கையின் இருண்ட காலகட்டத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தார்.

அவரது புதிய நிறுவனங்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டன. ஸ்பேஸ்எக்ஸின் முதல் மூன்று ஏவுகணைகள் தோல்வியடைந்தன, மேலும் டெஸ்லாவில் அனைத்து விதமான உற்பத்திச் சிக்கல்கள், விநியோகச் சங்கிலி மற்றும் வடிவமைப்புச் சிக்கல்கள் இருந்தன.

பின்னர் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் தனது தொழிலில் பணத்தைக் கொட்டிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் மிகவும் கடனில் இருந்தார். அவர் தனது வாழ்க்கைச் செலவுகளைச் செலுத்த நண்பர்களிடம் கடன் வாங்க வேண்டிய நிலை கூட இருந்தது.

எனவே, திவால் வாய்ப்பு அவரை பயமுறுத்தியதா?

" என்ன எனது குழந்தைகள் அரசுப் பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கும். நான் சொல்வது பெரிய விஷயமில்லை, நானே அரசுப் பள்ளியில்தான் படித்தேன்" என்று அவர் கூறுகிறார்

Elon Musk
Elon MuskTwitter

விமர்சகர்களைப் புறக்கணிக்கவும்

இது வணிக வெற்றிக்கான மஸ்க்கின் அடுத்த பாடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது - விமர்சகர்களுக்குச் செவிசாய்க்க வேண்டாம்.

அவர் ஸ்பேஸ்எக்ஸ் அல்லது டெஸ்லாவை அமைக்கும் போது பணம் சம்பாதிப்பார்கள் என்று மற்றவர்கள் நம்பவில்லை. ஆனால் அவர் தோல்வி வரும் என்று கூறும் நபர்களைப் புறக்கணித்து முன்னேறினார்.

நினைவில் கொள்ளுங்கள், அவர் எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்பதல்ல, அவர் தீர்க்கப்பட்ட முக்கியமான பிரச்சினைகளின் அடிப்படையில் வெற்றியை மதிப்பிடுபவர். இது முடிவெடுப்பதை மிகவும் எளிதாக்குகிறது. ஏனெனில் அவர் உண்மையிலேயே முக்கியமானது என்று அவர் நம்புவதில் கவனம் செலுத்த முடியும்.

அவர் என்ன செய்கிறார் என்பதைச் சந்தை விரும்புகிறது. அக்டோபரில், அமெரிக்க முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி ஸ்பேஸ்எக்ஸின் மதிப்பை 100பில்லியின் டாலர் என மதிப்பிட்டது.

நிறுவனம் விண்வெளி விமானத்தின் பொருளாதாரத்தை மாற்றியமைத்துள்ளது. ஆனால் மஸ்க் மிகவும் பெருமைப்படக்கூடியது, அமெரிக்க அரசின் விண்வெளித் திட்டம் அவரது நிறுவனத்தால் எவ்வாறு புத்துயிர் பெற்றது என்பதுதான்.

கடந்த ஆண்டு அவரது க்ரூ டிராகன் ராக்கெட்டுகள் ஆறு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. இது 2011 இல் அமெரிக்க விண்வெளி விண்கலங்கள் ஓய்வு பெற்ற பின்னர் அமெரிக்க மண்ணிலிருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் பயணமாகும்.

Elon Musk
ட்விட்டர் : ஏன் விற்கப்பட்டது? அதன்பின் உள்ள வணிக அரசியல் என்ன?

எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள்

இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள், சிறிது அதிர்ஷ்டம் இருந்தால், நீங்கள் மிகவும் பணக்காரராகவும் பிரபலமாகவும் ஆகிவிடுவீர்கள். பின்னர் நீங்கள் உங்கள் கூண்டிலிருந்து வெளியே வர ஆரம்பிக்கலாம். எலோன் மஸ்க் கடுமுழைப்புடன் ஒரு வேலையில் ஈடுபடுபவர். அவர் டெஸ்லா மாடல் 3 தயாரிப்பைத் தொடர வாரம் ஒன்றுக்கு தலா 120 மணி நேரம் உழைத்ததாகப் பெருமையாகக் கூறுகிறார். ஆனாலும் அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஆனாலும் அவர் சர்ச்சைகளில் சிக்காமல் இல்லை. 2018 ஆம் ஆண்டில் அவர் டெஸ்லாவை தனிப்பட்ட முறையில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ட்வீட் செய்தபோது அமெரிக்க நிதி கட்டுப்பாட்டாளருடன் சிக்கலில் சிக்கினார். மேலும் கோவிட் -19 தொற்றுநோய் டெஸ்லாவை அதன் சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தும்படி கட்டாயப்படுத்தியபோது, ​​​​அவர் அதை எதிர்த்தார்.

அவர் ட்விட்டரில் வைரஸ் குறித்த பீதியைக் கடுமையாக விமர்சித்தார். மேலும் வீட்டில் தங்குவதற்கான உத்தரவுகளை "கட்டாய சிறை" என்று விவரித்தார். அவை "பாசிச" மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகக் கூறினார்.

ஆயினும்கூட, அவரது கணிக்க முடியாத நடத்தை அவரது வணிகத்தைப் பாதித்ததாகத் தெரியவில்லை. மேலும் ஒரு தொழில்முறை தொழில் முனைவோரைப் போல எப்போதும் போல் லட்சியத்துடன் சிந்திக்கிறார்.


செப்டம்பரில், மஸ்க் டெஸ்லாவிடம் மூன்று ஆண்டுகளுக்குள் 25,000 டாலர் மதிப்புள்ள கார் "கட்டாயம்" இருக்கும் என்று கூறினார். மேலும் விரைவில் நிறுவனத்தின் அனைத்து புதிய கார்களும் முற்றிலும் சுயமாக இயங்கும் என்று கூறினார்.

ஸ்பேஸ்எக்ஸ் தனது ஸ்டார்ஷிப் ஏவுகணை வாகனத்தைச் சோதனை செய்தபோது, இது செவ்வாய்க் கிரகத்திற்கு முதல் மனிதர்களை அழைத்துச் செல்லும் என்று நம்புகிறார்.

ஆனால் அந்த ராட்சத ராக்கெட் புறப்பட்ட ஆறு நிமிடங்களில் தரையிறங்கி வெடித்துச் சிதறியது. மற்றவர்கள் என்றால் இடிந்து போவார்கள். ஆனால் எலோன் மஸ்க் இந்த சோதனையை "அற்புதமான" வெற்றி என்று பாராட்டினார். இதுதான் எலோன் மஸ்க். இந்த மனிதரை நீங்கள் புரிந்து கொள்வது கடினம். ஆனால் இந்த உலகம் இவரது திறமையால் பல சாதனைகளை படைக்கப் போவது மட்டும் உறுதி.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Elon Musk
ட்விட்டர் : எலான் மஸ்க் வாங்க நினைப்பது ஏன்? வாங்கினால் என்ன ஆகும்?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com