எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்

எலான் மஸ்க்கின் முதல் குழந்தை இறந்துவிட்டது. அவரது மகள்களில் ஒருவர் தன் பெயரிலிருந்து மஸ்க் குடும்ப பெயரை நீக்க நீதிமன்றத்தை நாடினார். 2020ல் அவருக்கு பிறந்த குழந்தைக்கு X Æ A-12 எனப் பெயர் வைத்தார், இதனை எப்படி உச்சரிப்பது எனத் தெரியவில்லை. இன்னும் பல சிக்கல்கள் நிறைந்தது மஸ்க் குடும்பம்...
எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்
எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்Twitter

உங்களுக்கு எலான் மஸ்கைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்டால்... அவர் டெஸ்லா நிறுவனர், தலைவர், பே பல் என்கிற பணப்பரிமாற்ற செயலியின் முன்னோடி, ஸ்பேஸ் எக்ஸ் தலைவர், செவ்வாயில் மனித இனம் குடியேறுவதைக் குறித்து பெரிதும் ஆராய்ந்து கொண்டிருப்பவர், உலகின் நம்பர் 1 பணக்காரர்... என பல விஷயங்களைச் சொல்வீர்கள்.

ஆனால், அந்த மனிதர் 10 குழந்தைகளுக்கு அப்பா என்பதை நம்மில் பலரும் அறியாமல் இருக்கலாம். 2002ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையான கடந்த 20 ஆண்டுகளில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் எலான் மஸ்க்.

எலான் மஸ்கின் தந்தை எரால் மஸ்கும் குழந்தை பெற்றுக் கொள்ளும் விஷயத்தில் சற்றும் சளைத்தவர் அல்ல. கடந்த 2017ஆம் ஆண்டு, தன் 70களில் இருந்த அவர், தன் வளர்ப்பு மகளான ஜனா பெசிடென்ஹாட் மூலம், எலியட் ரஷ் என்கிற மகனைப் பெற்றெடுத்தார். அக்குழந்தை தற்போது சுமார் ஐந்து வயது இருக்கலாம்.

எரால் மஸ்க் தன்னுடைய 70களில் இருந்து கொண்டு, தன் வளர்ப்பு மகள் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது, அப்போதே ஒட்டுமொத்த மஸ்க் குடும்பத்திலும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. எலான் மஸ்க் மிகவும் கடிந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாயின. இதெல்லாம் ஒருவாறு அடங்கி இருந்த நிலையில் மீண்டும் மஸ்க் குடும்பத்தில் எரால் மஸ்க் ஒரு குண்டை வீசினார்.

 எரால் மஸ்க்
எரால் மஸ்க்

சமீபத்தில் 'சன்' என்கிற பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், தன் 35 வயது (ஜனா பெசிடென்ஹாட்) வளர்ப்பு மகளோடான உறவில், 2019ஆம் ஆண்டு தனக்கு மற்றொரு குழந்தை பிறந்ததாகக் கூறினார்.

திட்டமிட்டு இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், சுமார் 41 வயது வித்தியாசம் காரணமாக தற்போது ஜனாவோடு தான் வாழ்வதில்லை என்றும் கூறியுள்ளார் எரால் மஸ்க்.

அவரைக் குறித்த கட்டுரையை இங்கே முழுமையாகப் படிக்கலாம்

எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்
எலான் மஸ்க் தந்தை : 70 வயதில் வளர்ப்பு மகளோடு வாழ்ந்து குழந்தை பெற்றுக் கொண்ட எரால் மஸ்க்

மீண்டும் எலான் மஸ்க் கதைக்கு வருவோம். கனடா நாட்டைச் சேர்ந்த ஜஸ்டின் வில்சன் என்பவரை, ஒன்டாரியோ நகரத்தில் உள்ள குவின்ஸ் பல்கலைக்கழகத்தில் சந்தித்தார் எலான் மஸ்க். அவரை 2000ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு 2008ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார். அவரோடு மட்டும் ஆறு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார் எலான் மஸ்க். இந்த தம்பதிகளுக்குப் பிறந்த முதல் குழந்தை இறந்துவிட்டது.

இந்த தம்பதிக்குப் பிறந்த மகன்களில் ஒருவர் தான் தன்னுடைய பாலின அடையாளத்தை வெளியே சொன்னதோடு, மஸ்க் என்கிற பெயரையும் தன் பெயரிலிருந்து நீக்கினார். அதைக் குறித்து இந்த இணைப்பில் விரிவாகப் படிக்கலாம்.

சேவியர் அலெக்சாண்டர் மஸ்க் : தனது பாலினத்தை மாற்றிக் கொள்ள விண்ணப்பித்த எலான் மஸ்க் மகள்

எலான் மஸ்க் - ஜஸ்டின் வில்சன்
எலான் மஸ்க் - ஜஸ்டின் வில்சன்

2008ஆம் ஆண்டு இத்தம்பதி விவாகரத்து செய்து கொண்ட போது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை இருவரும் பகிர்ந்து கொண்டனர். 

ஜஸ்டின் உடனான விவாகரத்துக்குப் பிறகு, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த தாலுலாஹ் ரெலி (Talulah Riley)-யோடு பழகத் தொடங்கினார். 2010ஆம் ஆண்டு இருவரும் ஸ்காட்லாந்தில் திருமணம் செய்து கொண்டனர். 2012ஆம் ஆண்டே இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. 

மீண்டும் தாலுலாஹ் ரெலியை 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு 2016ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் ஏதும் இல்லை.

2018ஆம் ஆண்டு எலான் மஸ்க் பாடலாசிரியர் மற்றும் பாடகரான கிரிம்ஸ் (உண்மையான பெயர் க்ளெய்ர் பாசர் - Claire Boucher) உடன் பழகத் தொடங்கினார். அவர்களுக்கு 2020ஆம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 2021-ல் மற்றொரு குழந்தையைப் பெற்றுக் கொண்டதாக கிரிம்ஸ் கூறினார். ஆனால் இந்த தம்பதி பிரிந்துவிட்டதாக ட்விட்டரில் செய்தி வெளியானது.

இதற்கு மத்தியில் நவம்பர் 2021 காலத்திலேயே நியூராலிங்க் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஷிவான் சிலிஸ் என்கிற பெண் உடன் ஒரு இரட்டைக் குழந்தையைப் பெற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாயின. 

எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்
Twitter Blue Tick பெறுவதற்கு கட்டணம்- ஸ்டீவ் ஜாப்ஸ் பாணியில் செயல்படும் எலான் மஸ்க்!

நெவாடா அலெக்சாண்டர்:

எலான் மஸ்க் & ஜஸ்டின் வில்சனுக்கு 2002ஆம் ஆண்டில் பிறந்து 10 வாரங்களில் இறந்த குழந்தை.

விவியன் ஜென்னா வில்சன் & க்ரிஃபின் மஸ்க்:

இவர்கள் இருவரும் எலான் மஸ்க் & ஜஸ்டின் வில்சனுக்குப் பிறந்தவர்கள். விவியன் ஜென்னா வில்சன் என்பவர் தான், தன்னுடைய பெயரில் இருந்து மஸ்க் என்கிற பெயரை நீக்க நீதிமன்றத்துக்குச் சென்றவர். தன் புதிய பாலின அடையாளத்தையும் வெளிப்படுத்திக் கொண்டவர்.

கை, சாக்ஸோன், டாமியன்:

இந்த மூவருமே 2006ஆம் ஆண்டு ஜஸ்டின் வில்சன் & எலான் மஸ்குக்குப் பிறந்தவர்கள். 

X Æ A-12

இந்தக் குழந்தையின் பெயரை எப்படிச் சரியாக உச்சரிப்பது என்று தெரியவில்லை. இப்போதைக்கு ஏ-12 எனக் கூறுவோம். இந்தக் குழந்தைதான் கிரிம்ஸ் & எலான் மஸ்குக்குப் பிறந்த முதல் குழந்தை. 

எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்
எலான் மஸ்க் ஒரு ஏலியனா? - அவரே கிளப்பிவிட்ட வதந்தி இணையத்தில் வைரல்!

ஷிவோன் சிலிஸ் உடன் இரட்டைக் குழந்தைகள்

எலான் மஸ்க் மற்றும் தொழில்நுட்ப உலகின் முதலீட்டாளர் ஷிவான் சிலிஸ் உடன் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இதுவரை அக்குழந்தைகள் தொடர்பான விவரங்கள் ஏதும் பொதுவெளியில் கிடைக்கவில்லை.

எக்ஸா டார்க் சிடெரல் (Exa Dark Sideræl)

டிசம்பர் 2021 காலத்தில் எலான் மஸ்க் & கிரிம்ஸுக்கு பிறந்த குழந்தை தான் Exa Dark Sideræl. இவர்கள்தான் எலான் மஸ்குக்குப் பிறந்த 10 குழந்தைகள்.

எலான் மஸ்குக்கு 10 குழந்தைகள்: எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றிய சுவாரசிய தகவல்கள்
Twitter Accout-ஐ டெலிட் செய்த அம்பர் ஹெர்ட் - Elon Musk தான் காரணமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com